இவன் தந்திரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மயில்சாமி, கயல் தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர் கண்ணன்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : ஆர் கண்ணன்

கதைக்களம்…

என்ஜீனியரிங் முடித்துவிட்டு சரியான வேலை கிடைக்காததால், கௌதமும் ஆர்.ஜே. பாலாஜியும் சென்னை ரிச் ஸ்ட்டீரிட்டில் எலக்ட்ரானிக் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர்.

ஒருமுறை அமைச்சர் சூப்பர் சூப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த செல்கின்றனர். அமைச்சரின் மச்சான் ஸ்டண்ட் செல்வா கேமராவுக்கான பணத்தை தராமல் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

இதனிடையில் சரியான வசதியில்லாத காரணத்தினால் பல இன்ஜீனியரிங்களை மூட உத்தரவுவிடுகிறார் அமைச்சர்.

இதனால் ஹீரோயின் ஷ்ரத்தா மற்றும் பல மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு மாணவன், தற்கொலை செய்துக் கொள்ள, அதை நேரில் பார்க்கிறார் கௌதம்.

எனவே அமைச்சரை பழிவாங்க, அவர் செய்யும் ஊழல் மற்றும் அவர் பெறும் லஞ்ச வீடியோ ஆதாரத்தை டெக்னிக்கலாக படம் பிடித்து, யூடிப்பில் பதிவேற்றம் செய்கிறார் கௌதம்.

இதனால் தன் பதவிக்கு ஆபத்து வர, அமைச்சர் என்ன செய்தார்? மற்ற மாணவர்களுக்கு நீதி கிடைத்ததா? இவருக்கான சிசிடிவி பணம் கிடைத்தா? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.


கேரக்டர்கள்…

ரங்கூனில் முதல் வெற்றியை தொடர்ந்து இதில் சிக்ஸர் அடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.

அவருக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது சிறப்பு. இன்ஜினியரிங் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு யாரிடமோ கையை கட்டி வேலை செய்யாமல் தானே செய்யும் பிஸினஸ் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாய் அமையும்.

கூவத்தூர் லாட்ஜ், ரியல் எஸ்டேட், கொம்பன் வில்லன், நமீதா ஸ்நேகா காஜேஜ் விளம்பரம் என எதையும் விட்டு வைக்காது ஆர்.ஜே. பாலாஜி தரும் டைமிங் கவுண்டர்கள் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.

ஐடி மாணவர்கள் படும் அவஸ்தையை ஒரு காட்சியிலும் மற்ற காட்சியில் ஐடி மாணவர்களின் சிறப்புகளை ஆர்ஜே பாலாஜி சொல்லும் காட்சிகள் அசத்தல். (ஆனால் அதை ஹீரோ சொல்லியிருக்கலாமே..?)

நாயகி ஷ்ரத்தா அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம் புதுமை.

கௌதம் காதலை சொல்ல, பிறகு முடிவை சொல்கிறேன் என ஷ்ரத்தா சொல்லாமல் வேறுமாதிரியாக சொல்வது ரசிக்க வைக்கிறது.

20 வருசத்துக்கு அப்புறம் பிடிச்சா அப்போ மேசேஜ் பண்றேன் என இவர் சொல்லும்போது, அப்போ சாரி ஆண்ட்டி என என் மகன் ரிப்ளை செய்வான் என கௌதம் கூறுவது நச்.

ஒரு காதலுக்காக 20 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னதற்காக வசனகர்த்தாவை பாராட்டலாம்.

ஸ்டண்ட் செல்வா சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். தன்னை கொன்றுவிட்ட மாமாவிடம் எதற்காக உண்மையை சொல்லனும் என்று உயிர் விடும் காட்சி அருமை. அந்த ரூம் பைட்டும் பாராட்டுக்குரியது.

அரசியல்வாதி கேரக்டரில் மிடுக்காக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வீடியோ ஆதாரத்தில் மாட்டிக் கொள்ளும்போது, அதற்கு வேறு ஒரு மாதிரியான டயலாக் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய குணத்தை பிரதிபலிக்கிறார்.

பஞ்சாயத்து செய்ய வரும் மயில்சாமி, கம்யூட்டர் பார்ட்ஸ் பெயர்கள் தெரியாமல் தவிப்பது அருமை.

ஒரே காட்சியில் வந்தாலும், ஓர் ஏழை அப்பாவின் தவிப்பை உணர வைக்கிறார் கயல் தேவராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னை மெதக்கவிட்ட பாடல் நல்ல தேர்வு. இரண்டே மணி நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை இயக்குனர் சரியாக சொல்லியிருப்பது சூப்பர்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. இதுவரை ரசிகர்களுக்கு போதும் என மற்ற காட்சிகளை வெட்டி எடுத்த எடிட்டர் ஆர்.கே. செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.

இன்றைய இயந்திர வாழ்க்கையின் பலம் இன்ஜினியரிங் மாணவர்களே என்பதை சொல்லி மாணவ சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் போரடிக்காமல் இயக்கியிருக்கிறார் கண்ணன்.

இப்படத்தை நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்திருக்கும் தனஞ்செயனை கைகுலுக்கி பாராட்டலாம்.

இவன் தந்திரன்… இன்ஜினியரிங் மந்திரம்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் விமர்சனம் AAA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனாகான், மொட்டை ராஜேந்திரன், மகத் மற்றும் பலர்.
இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : கிருஷ்ணன் வசந்த்
எடிட்டர்: ரூபன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : மைக்கேல் ராயப்பன்

கதைக்களம்…

மைக்கேல் ஒரு தாதா செந்தாமரையின் அடியாள். இவரே அந்த மதுரையின் எல்லா சம்பவங்களையும் சிறப்பாக செய்வதால் மதுரை மைக்கேல் ஆகிறார்.

இவருக்கு செல்வி (ஸ்ரேயா) மீது காதல். அப்புறம் என்ன? நமக்கு தெரிந்த கதைதான். நீங்க திருந்தனும். நாம நிம்மதியா வாழனும். இந்த ஊர் வேணாம் என ஸ்ரேயா சொல்கிறார்.

இதனால், சிம்பு என்ற மதுரை மைக்கேல் திருந்த நினைக்கிறார்.

ஆனால் அதற்கு முன் ஒரு சம்பவத்தை செய்ய சொல்கிறார் செந்தாமரை. அதை செய்ய போக அவர் மாட்டிக் கொள்கிறார்.

அதன்பின்னர் சில வருடங்கள் சிறைக்கு சென்று, தப்பி ஓடி துபாய் சென்று தன் பெயரை மாற்றி அஸ்வின் தாத்தாவாக வலம் வருகிறார்.

அங்கு 26 வயதான தமன்னா இவரை காதலிப்பதாக நினைத்து, இவரும் டூயட் பாடுகிறார்.

ஆனால் தமன்னா இவரை காதலிக்க வில்லை என தெரிந்ததும் இவர் எடுக்கும் முடிவே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

சிம்பு இந்த படத்திற்காக தன் உடலை ஏற்றியிருக்கிறார். பின்னர் இறக்கியிருக்கிறார். இந்த உடம்பை வைத்து லுசுப் பெண் முதல் இன்னைக்கு நைட் மட்டும் நீ கேர்ள்ட் ப்ரெண்ட் என பாடலை எல்லாம் பாடுகிறார்.

ஸ்ரேயா உடன் காதல் காட்சிகளில் சில ரொமான்ஸ் இருந்தாலும் பன்ச் பேசியே பயமுறுத்துகிறார்.

இவருடன் மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் என பலர் இருந்தும் காட்சிகள் சுவாரசியம் இல்லை.

தமன்னா கவர்ச்சியாகவும் அழகாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். அஸ்வின் தாத்தாவை லவ் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் ஓவர்தான்.

ஆனால் கடைசியில் வைக்கும் ட்விஸ்ட் எதிர்பாராத திருப்பம்.

3வது சிம்பு நன்றாக ஸ்டைலிஷ் ஆக வருகிறார். அந்த கெட்டப் கூட அசத்தல்தான்.

அஸ்வின் தாத்தாவுடன் வரும் கோவை சரளா, சுவாமிநாதன், மனோகர் ஆகியோர் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை.

கரண்ட் அடித்து விழும் ஷாக் பார்ட்டியாக ஒய்ஜி மகேந்திரன் வருகிறார். இவருக்கு லிப் லாக் சீன்கள் வேறு.

விஜயகுமார் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இல்லை என்றால் எந்தளவுக்கு நீங்கள் ரசிப்பீர்கள் எனத் தெரியவில்லை.

யுவன் மற்றும் சிம்பு கூட்டணி என்றாலே பாடல்கள் அட்டகாசம்தான்.

இதில் ஒரு பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ரத்தம் என் ரத்தம் என்ற பாடல் சிம்புவையும் அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களை குறித்த பாடலாக அமைந்துள்ளது.

மற்ற இரண்டு பாடல்களை சிம்பும், அடுத்த இரண்டை யுவனும் எழுதியுள்ளனர்.

அஸ்வின் தாத்தா மற்றும் மதுரை மைக்கேல் கேரக்டர்களின் தீம் சாங் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெறும்.

இயக்கம் பற்றிய அலசல்…

முதல் பாகத்தில் என்ன சொல்ல வருகிறார்? இரண்டாம் பாகத்தில் என்ன சொல்ல போகியார் எனத் தெரியவில்லை.

இதில் ஜீவி பிரகாஷ் வேறு நன்றிக் கடனாக வருகிறார்.

படத்தில் காதலை போற்றும் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லை. ஆண்களின் காதலை உயர்வாக சொல்லி, பெண்களின் காதலை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

பிட்டு படம் டைரக்டர் என்பதால் இப்படியான காட்சிகளை வைத்திருக்கிறாரா? எனத் தெரியவில்லை.

இதில் ஒரு காட்சியில் இயக்குனரும் வருகிறார். ஆனால் ரம்யா என்ற தமன்னா கேரக்டரை பெயரை சொல்லாமல் தமன்னா தமன்னா என்று இவர் அழைக்கிறார்? அது ஏன்? (அட அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம் இதை கவனிக்கலையா?)

மொத்தத்தில் AAA…. எஸ்கேப் எஸ்கேப் எஸ்கேப்

வனமகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, வருண், ஷாம் பால், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் : திரு
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏஎல் அழகப்பன்

கதைக்களம்…

அந்தமான் தீவில் புத்தாண்ட கொண்டாட தன் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் செல்கிறார் நாயகி காவ்யா (சயிஷா)

அப்போது அனுமதி மறுக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு த்ரில்லுக்காக செல்கின்றனர்.

அங்கே எதிர்பாரா விதமாக காட்டுவாசியான நாயகன் மீது காரில் மோதிவிடுகின்றனர்.

இதனால் அவரின் மருத்துவத்திற்காக சென்னைக்கு அழைத்து வந்துவிடுகின்றனர்.

அதன்பின்னர் காட்டுவாசி நம் நாட்டுக்கள் பல கலாட்டக்களை செய்ய அதை ரசிக்கிறார் நாயகி.

இதனிடையில் அந்த காட்டுக்குள் வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுகிறது.

இந்த இரண்டையும் ஒரு முடிச்சில் இணைத்து, ஒரு வளமான விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

கேரக்டர்கள்…

தன் பெயரிலேயே ஜெயம் இருப்பதால் அதனை தக்கவைத்துக் கொள்ள போராடும் ஜெயம் ரவி இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

படத்தில் நமக்கு புரியாத வார்த்தைகளை இவர் பேசினாலும் நடிப்பின் மூலம் ஒன்ற வைக்கிறார்.

குரங்கு போல தாவுவதும், புலியிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுவதும், சயிஷாவின் தழுவலுக்கு சாய்வதும் என ரசிக்க வைக்கிறார்.

தமிழ் ரசிகர்களின் பிடித்தமான புதுவரவு சயிஷா. நடனத்தில் மேனியை ரப்பராக வளைத்து நமக்கு சுளுக்கு வரவைக்கிறார்.

காட்டுவாசியிடம் காட்டும் அன்பாகட்டும், கண்களில் காட்டும் கவர்ச்சியாகட்டும் என அனைத்திலும் கட்டி போட்டுவிடுகிறார் இந்த வனமகள்.

நமக்கு கூகுள் மேப் போல, இவிங்களுக்கு ஈகிள் மேப் என்பது தொடங்கி, இடிச்ச சுவர் வழியே வெளியே போனா என்ன? கேட்கும் வரை தன் கேரக்டரை நிற்க வைக்கிறார்.

தான் வளர்த்த பாப்பா, இன்று வளர்ந்து மேடம் ஆகிவிட்டதால், மேடம் பாப்பா என்று கூப்பிடுவது கூட அழகுதான்.

தன் வழக்கமான நடிப்பால் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். புதுநடிகர் ஷாம் பால் இந்த மிரட்டல் போலீஸ் யார்யா? என கேட்க வைக்கிறார்.

தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மதன் கார்க்கியின் வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை சூப்பர் மேட்ச்.

செயற்கையாக நாட்டை விட இயற்கையான காடுதான் எப்போதுமே அழகு என்பதை ஒளிப்பதிவாளர் திரு நிரூபித்து இருக்கிறார்.

டேம்ன் டேம்ன் பாடல், யம்மா அழகம்மா மற்றும் பச்சை உடுத்திய காடு ஆகியவை இதமான ராகம்.

ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சி மற்றும் அந்த புலி பைட் சீன் அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

நாம் புலிக்கு உதவினால், அந்த விலங்கு கூட நம் அன்புக்கு வசமாகும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படங்களை கொடுப்பதில் எப்பவுமே விஜய் பெஸ்ட்தான். இதிலும் நிறைவாக செய்துள்ளார்.

நம்மிடம் இருக்கும் ஏசியை விட காடுகளில் குளிர் அதிகமாக இருக்கும். அங்கே மேலாடை இல்லாமல் இருக்கும் ஹீரோ, இங்கே டிரெஸ் போட்டும் கொண்டும் ரூம் ஏசிக்கு நடுங்குவது ஏன்.? எனத் தெரியவில்லை.

அழுக்கு காட்டுவாசி ஒரு பாடலில் மட்டும் அழகுவாசியாக மாறுவது ஏனோ? அது கனவுப் பாடலாக இருந்தாலும், யதார்த்தை மீறி திணிக்கப்பட்டது போல உள்ளது.

பிரகாஷ்ராஜ் துப்பாகியால் சுட்டபின் அவ்வளவு நேரம் ஜெயம் ரவி பைட் செய்து பிழைப்பது எப்படி?

இதுபோன்ற சில குறைகளை தவிர்த்தால் வனமகனையும் வனமகளையும் ரசிக்கலாம்.

வனமகன்… ரசிகர்களின் வசீகரன்

உரு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, டேனியல் மற்றும் பலர்.
இயக்கம் : விக்கி ஆனந்த்
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவாளர் : பிரசன்னா எஸ் குமார்
எடிட்டர்: சான் லோகேஷ்
பி.ஆர்.ஓ. : சி.என். குமார்
தயாரிப்பு : வையம் மீடியாஸ்

கதைக்களம்…

எழுத்தாளர் கலையரசன். ஒரு காலத்தில் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். பின்னர் நாளடையில் அவரின் கதைகளுக்கான மவுசு குறையவே விரக்தியில் இருக்கிறார்.

இவரின் மனைவி தன்ஷிகா. கணவருக்கு வேலையில்லாமல் இருப்பதாலும், குழந்தையில்லாமல் இருப்பதாலும் மிகுந்த கவலையில் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு த்ரில்லர் கதைக்கான கரு கிடைக்கவே அதை எழுத வேண்டி தனிமைக்காக அடர்ந்த மேகமலைக்கு செல்கிறார்.

அங்கு இருந்து கதை எழுத, அவரை சுற்றி பல அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது.

ஒரு உருவம் இவரை துரத்துகிறது. இந்நிலையில் அங்கு தன்ஷிகா வந்து சேர, அவரையும் கொலை செய்ய முற்படுகிறது.

அந்த உருவம் யார்? எதற்காக இவர்களை கொல்ல வேண்டும்? அந்த கதையை எழுதி முடித்தாரா? தன்ஷிகாவை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.


கேரக்டர்கள்…

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதற்காகவே கலையரசனுடன் கை குலுக்கலாம்.

அதே கண்கள், எய்தவன் என ஒரு படி ஏறியவர் உருவிலும் முன்னேறியிருக்கிறார்.

தனியாகவே நின்று ஸ்கோர் செய்பவர் தன்ஷிகா. இதிலும் அசத்தியிருக்கிறார். குட். கீப் இட் அப்.

இவர்களைத் தவிர மைம் கோபி மற்றும் டேனி ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கான கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அடர்ந்த காட்டுக்குள் அந்த வளைவான பாதைகள் அதில் கார் செல்லும் காட்சிகள் அசத்தல்.

அந்த இரவு வெளிச்சத்திலும் இவரது கேமரா விளையாடியுள்ளது.

பின்னனி இசை யில் ஜோகன் மிரட்டியிருக்கிறார்.

வித்தியாசமான கதையை கொடுத்த விக்கி ஆனந்துக்கு நன்றி. யார் அந்த உருவம் என ரசிகர்களை சீட் நுனியிலே உட்கார வைத்து விடுகிறார்.

ஆனால் அதே நேரம் அந்த தவிப்பை க்ளைமாக்ஸில் கொடுத்திருந்தால் இந்த உருவின் ரேஞ்சே வேற.

அட இவ்வளவுதானா? என்ற க்ளைமாக்ஸ் எண்ண வைக்கிறது.

மேலும், படத்தில் கொஞ்சம் ரொமான்ஸ், காதல் பாடல், காமெடி என சேர்ந்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

உரு… உருப்படியானவன்

மரகத நாணயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் மற்றும் பலர்.
இயக்கம் : ஏஆர்கே சரவன்
இசை : திபு நைனன் தாமஸ்
ஒளிப்பதிவாளர் : பிவி ஷங்கர்
எடிட்டர்: ஜிகே பிரசன்னா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அக்சஸ் பிலிம் பேக்டரி (ஜி. டில்லி பாபு)

கதைக்களம்…

அரசர் காலத்தில் உள்ள ஒரு மரகத நாணயம் பல பேரிடம் கை மாறி கை மாறி, எம்எஸ் பாஸ்கரிடம் வந்தடைகிறது.

இந்நிலையில் சீனா நாட்டைச் சேர்ந்த ஒருவர் மைம் கோபியிடம் அதனை தனக்கு பெற்றும் தரும்படி வருகிறார்.

ஆனால் அந்த மரகத நாணயத்தை தொட்ட எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்பதால் எல்லாரும் பின்வாங்குகிறார்கள்.

அதனை தொட்ட 130க்கும் மேற்பட்டோர் அந்த மரகத நாணயத்தால் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில் ரூ. 10 கோடிக்கு ஆசைப்பட்டு இந்த புரொஜக்டை எடுக்கின்றனர் ஆதி மற்றும் டேனி.

இவர்களுக்கு துணையாக இறந்துபோன முனிஷ்காந்த் வருகிறார். அவருக்கு துணையாக இறந்துபோன நிக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் வருகின்றனர். (அது எல்லாம் எப்படி என்று கேட்டால் லாஜிக் இருக்காது)

இதனிடையே ஆனந்த் ராஜ் கும்பலும் அந்த மரகத நாணயத்தை தேடி அலைகின்றனர்.

மரகத நாணயம் யாருக்கு கிடைத்தது? எப்படி கிடைத்தது? பேய்கள் எப்படி உதவியது என்பதே இந்த மரகத நாணயம்.

கேரக்டர்கள்…

ஈரம் படத்திற்கு பிறகு ஒரு ஆதிக்கு இதில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அவரது உடலுக்கு ஏற்ற ஆக்சன் இல்லையென்றாலும் கதையோடு ஒன்றிவிடுகிறார்.

அழகான நாயகி நிக்கி கல்ராணி அசத்தல். புடவை என்றாலும் ஜீன்ஸ் என்றாலும் அவருக்கு செம பிட்.

இதில் இவரின் கேரக்டருக்கு காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்திருப்பது கலக்கல். அதற்கான காரணத்தை படத்தில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆதிக்கு இணையாக ஸ்கோர் செய்பவர் முனிஸ்காந்த் ராமதாஸ்தான். எலுமிச்சை பழத்தை கொண்டு உயிர்தெழுத்துவதும், அதன்பின்னர் இவர் செய்யும் சேஷ்டைகளும் காமெடியின் உச்சம்.

டிவிங்கள் ராமநாதன் கேரக்டரில் அமர்களப்படுத்தியிருக்கிறார் ஆனந்த்ராஜ். இவரின் அடியாட்களும் அவர்களின் யூனிபார்ம் என அனைத்தும் கலக்கல்.

இப்ப காமெடி டிரெண்ன்ட் ஆனதால் வில்லன் நானும் காமெடி பண்ண வேண்டியதா போச்சு என்னும்போது சிரிக்க வைக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் அருமையான தேர்வு. இவர் முன் ஆனந்த்ராஜின் ரேடியோ பாட்டு பாட இவர் ஆடுவதும், பின்னர் யோவ் உங்க அண்ணன் எதுக்குயா? என்கிட்ட பேசுறாரு? நீ பாட்ட போடுயா? என்று சொல்லும்போது ரசிக்க வைக்கிறார்.

ரங்கூனில் கலக்கிய டேனி இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.

கேரளா நம்பூதிரியாக வரும் கோட்டா ஸ்ரீநிவாச ராவ், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் பிரம்மானந்தம் ஆகியோருக்கு இன்னும் நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிவி ஷங்கரின் ஒளிப்பதிவில் அந்த ஆவி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

பாடல்களை விட திபு நைனன் தாமஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

எல்லா படத்திலும் உயிரோடு இருப்பவர்களின் உடலில் ஆவி புகுந்துவிடும். ஆனால் இதில் இறந்தவரின் உடலில் சென்று, மற்றவரின் குரலை பெற்று வருகிறது என்று பல வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.

பேய்களாக வரும் பிணங்களுக்கு வாய்ஸ் மாற்றி வித்தியாசம் காட்டிய இயக்குனர் ஏஆர்கே சரவனுக்கு வாழ்த்துக்கள்.

ஆவி எப்படி மனிதனுடன் இணையும்? பிணங்கள் எப்படி உயிரோடு வரும்? வாய்ஸ் எப்படி வந்தது? போன்ற லாஜிக்குகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்றால் நிச்சயம் இந்த மரகத நாணயத்தை ரசித்து சிரிக்கலாம்.

மரகத நாணயம் மயக்கும் நாணயம்

தங்கரதம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வெற்றி, அதிதி கிருஷ்ணா, சௌந்தரராஜா, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன், பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : பாலமுருகன்
இசை : டோனி பிரிட்டோ
ஒளிப்பதிவாளர் : ஜேக்கப்
எடிட்டர்: சுரேஸ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : சிஎம். வர்கீஸ்

கதைக்களம்…

தங்கரதம் என்ற பெயரிடப்பட்ட டெம்போ வைத்திருக்கிறார் ஆடுகளம் நரேன். இவரின் அண்ணன் மகன் வெற்றி.

இவரின் மற்றொரு உறவினர் மகன் சௌந்தரராஜா. சௌந்தரராஜாவின் தங்கை அதிதி.

வெற்றிக்கும் சௌந்தரராஜாவுக்கும் எப்போதும் மோதல்தான்.

ஆனால் மற்றொரு புறம் நாயகி அதிதிக்கும் வெற்றிக்கும் ரகசிய காதல்.

ஒருமுறை சௌந்தரராஜாவின் டெம்போவை வேறொருவர் அடித்து உடைக்க, அந்த பழி வெற்றி மீது விழுகிறது.

இதனால் கொலைவெறியோடு சௌந்தரராஜா அவரை துரத்த, தன் அண்ணன் மகனை காப்பாற்றவும் குடும்பத்தை சமாதானம் செய்யவும் அதிதியை தன் மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ஆடுகளம் நரேன்.

அதன்பின் நாயகன் என்ன செய்தார்? நாயகியை மணந்தாரா? அல்லது தன் தம்பியே அவளை மணக்கட்டும் என்று விட்டுவிட்டாரா? அல்லது தன் சித்தப்பாவை பகைத்துக் கொண்டாரா? என்பதை தங்கரதம் க்ளைமாக்ஸ் சொல்லும்.

கேரக்டர்கள்….

வெற்றி மற்றும் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கும் சரியான அளவு கேரக்டர். வெற்றிக்கு டூயட் இருக்கிறது. அவருக்கு இல்லை. அது மட்டுமே வித்தியாசம்.

இருவரும் தன் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். நாயகன் வெற்றி பேசும்போது மலையாளம் கலந்து வருவதை தவிர்த்து இருக்கலாம்.

நாயகி அதிதி குடும்ப பாங்கான முகம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் போது நாயகன் எடுக்கும் முடிவை மனதார ஏற்கும்போது ரசிக்க வைக்கிறார்.

ஆடுகளம் நரேனுக்கு இதில் வெயிட்டான கேரக்டர்தான். தன் அண்ணன் மகனை தன் மகனாக பாவித்து பாசம் காட்டும் காட்சிகளில் அசத்தல்.

தினமும் குடிக்கும் மது பிரியராக மொட்டை ராஜேந்திரன். மது அருந்தியவர்கள் கடையில் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகைக்கு அவர் தரும் விளக்கம் செம.

அதிலும் இவரின் மனைவி கேபிள் சரியில்லை என்று கேபிள்காரனை வரவழைத்து ரூட் விடுவது காம நெடியின் உச்சம். (செம கனெக்ஷன்)

சுவாமிநாதன் வந்தாலே படத்தில் சிரிப்பு பஞ்சம் இருக்காது. ஆனால் ஓரிரு டயலாக்குகள் மட்டும் கொடுத்து இவரை டம்மியாக்கி விட்டனர்.

குள்ளமாக வரும் பாண்டியன் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டோனி பிரிட்டோ இசையில் இரண்டு மெலோடிகள் ரசிக்க வைக்கிறது.

ஜேக்கப் ஒளிப்பதிவில் ஒட்டன் சத்திரம் ஊரின் அழகு படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

பாலமுருகன் இயக்கியுள்ள இப்பட க்ளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமான உணர்வுதான்.

காதல் வெற்றி என்பது தன் குடும்பத்திற்காக செய்யும் தியாகத்திலும் உள்ளது என்பதை சொன்னதற்காக பாராட்டலாம்.

டெம்போ டிரைவர்கள் எப்போதும் ஸ்டைலிஷ்ஷாக  டிரெஸ் செய்துவருவதால் காட்சிகளில் ஒன்றவில்லை.

சில கேரக்டர்கள் மனப்பாடம் செய்து வைத்து பேசுவது போல் உள்ள காட்சிகளை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக ஜொலித்திருக்கும்.

தங்க ரதம்… ஜொலிக்கும் ரகம்

More Articles
Follows