ஆல்கஹால் டாக்டர்… ஆதித்ய வர்மா விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – த்ருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ராஜா, அன்பு தாசன் மற்றும் பலர்
இசை – ரதன்
இயக்கம் – கிரிசாயா
தயாரிப்பு – ஈ 4 என்டர்டெயின்மென்ட்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படமே தமிழில் ஆதித்ய வர்மா என வந்துள்ளது.

ஏற்கெனவே ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ‘கபீர் சிங்’ ஆக வசூல் சாதனை புரிந்துள்ளது.

காதல் என்றாலே முதல் எதிரி சாதியாக இருக்கும். இதிலும் வர்மா என்ற சாதி பெயரால் ஆதித்யாவின் காதல் பிரிகிறது.

சரி கதை என்ன பார்ப்போம்.

கதைக்களம்…

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் படிக்கிறார் த்ருவ் விக்ரம். படிப்பு விளையாட்டு என எல்லாத்திலும் இவர்தான் நம்பர் 1.

அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்க வரும் மாணவி பனிதா சாந்துவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.
அவளுக்கு ஏதாவது என்றால் துடித்துப் போகும் காதல். காதலுடன் வெறித்தனமாக காமமும் அடங்கும்.

படிப்பை முடித்த பின் பனிதாவின் அப்பாவிடம் பெண் கேட்க ஆனால் இவரின் சாதியை சொல்லி மறுக்கிறார் அவர்.

உடனே வேறு பையனை பார்த்து திருமணத்தையும் செய்து வைக்கிறார்.

அதன்பின்னர் நம்ம ஆதித்யா என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.



கேரக்டர்கள்..

முதல் படத்திலேயே சில நடிகர்களுக்கு மட்டும் இப்படி வெயிட்டான கேரக்டர் கிடைக்கும். பராசக்தியில் சிவாஜி, பருத்தி வீரனில் கார்த்தி அந்த வரிசையில் துருவ் விக்ரமுக்கு ஆதித்ய வர்மா என சொல்லலாம்.

காதலில் உள்ள வெறித்தனத்தை அப்படி அழகாக வெளிப்படுத்தியுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபம், நட்பு, பாசம், டீன் ஏஜ் கெத்து, துருதுரு என வெளுத்து கட்டியிருக்கிறார் துருவ்.

சிம்பிளாக சொன்னால் புலிக்கு பிறந்தது பூனையாகாது என தன் தந்தை விக்ரம் பெயரை காப்பாற்றியிருக்கிறார். பல காட்சிகளில் பேசுவது இவரா? விக்ரமா? என கன்ப்யூஸ் செய்கிறார். மேலும் சின்ன வயசு சீயான் விக்ரமின் ஜெராக்ஸ் இவர் என சொல்லலாம்.

நாயகியாக பனிட்டா சந்து. நடுத்தர குடும்ப பெண்ணாகவும் நல்ல காதலியாகவும் நடிப்பை கொடுத்திருக்கிறர். ஆனால் ஸ்மார்ட்டாக இருக்கும் துருவ்க்கு இவர் செட்டாகவில்லை. ஆனால் ஹீரோவை பார்க்கும் போது எல்லாம் கிஸ்ஸ்ஸ் அடித்துக் கொண்டே நம்மை சூடு ஏற்றி விடுகிறார்.

இவர்களுடன் அன்பு தாசன், பிரியா ஆனந்த், ராஜா உள்ளிட்டோரும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரதன் இசையில் எதற்கடி வலி தந்தாய்? என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் கைத்தட்டலை அள்ளுகிறது.

இதுபோன்ற காதல் படத்திற்கு இன்னும் அருமையான மெலோடி பாடலை கொடுத்திருக்கலாம். அதுபோல் காதல் தோல்வி என்றால் சூப்பரான சோக பாடலை கொடுத்திருந்தால் எந்த காலமும் கேட்டு இருக்கலாம்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஹீரோ இன்ட்டோ முதல் க்ளைமாக்ஸ் பீச் வரை ரசிக்க வைக்கிறது. சரக்கு பாட்டிலாக இருந்தாலும் சிகரெட் புகையாக இருந்தாலும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

விவேக் ஹர்சன் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்திருயிருக்கலாம். இடைவேளைக்கு பிறகு படம் மெதுவாக செல்கிறது.

தெலுங்கு அர்ஜீன் ரெட்டியை அப்படியே கொடுத்திருக்கிறார் கிரிசாயா. ஆனால் நிறைய முரண்பாடுகள் உள்ளது.

ஒரு பெண்ணை இவ்வளவு ஆழமாக காதலிக்கும் ஒருவன் எந்த பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வைத்து கொள்வது எப்படி? அவள் இன்னொருத்தனின் மனைவியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள நினைக்கும் ஆதித்யா எப்படி ஒரு நடிகையை செக்ஸ் வைத்துக் கொள்ளகு அழைக்கிறார்.

செக்ஸ் மூட் வந்துவிட்டால் அப்படியே அவிழுக்கும் காட்சிகள்…. அதில் ஜட்டிக்குள் ஐஸ் கட்டி வைப்பது என ஏகப்பட்ட காட்சிகள் உள்ளன.

போதை மருந்து, சிகரெட், செக்ஸ் இதுவே தன்னுடைய பொழுதுபோக்க இருக்கும் ஒருவர் தன்னுடைய மருத்துவ தொழிலை காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்துக் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு காட்சியில் பணம் கொடுத்து வழக்கை ஜெயித்து டாக்டராக இருப்பதில் விருப்பம் இல்லை என்கிறார். அதில் மட்டுமே அவருடைய முழ ஈடுபாடு தெரிகிறது.

கேர்ள்ஸ் ஹாஸ்டலில் அசால்லட்டாக உள்ளே செல்வது.. ஒட்டு மொத்த மாணவர் மாணவிகள் இவருக்காக பயப்படுவது எல்லாம் ரொம்ப பில்டப்பாக தெரிகிறது.

க்ளைமாக்ஸ் முடிவு எல்லா தரப்பையும் திருப்திபடுத்தாது. அதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்திருப்பதால் எல்லாராலும் பார்க்க முடியாது. ஆனால் நிச்சயம் உண்மையான இதயக் காதலர்களை கவரும்.

ஆக.. ஆதித்யா வர்மா… ஆல்கஹால் டாக்டர்

Adithya Varma review rating

சர்க்கரை தமிழன்.. சங்கத்தமிழன் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

விஜய்சேதுபதியும் (முருகன்) சூரியும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைகின்றனர்.

பிரச்சினை என்று வந்துவிட்டால் மாஸ் காட்டும் விஜய்சேதுபதியை லவ் செய்கிறார் ஹீரோயின் ராஷி கண்ணா. இவரின் அப்பா மிகப்பெரிய கோடீஸ்வரர்.

ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதி பார்க்கிறார் ராஷி கண்ணாவின் அப்பா. இவன் முருகன் கிடையாது. சங்கத்தமிழன் என்கிறார். பார்த்தவுடனே அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

அப்படியென்றால் விஜய்சேதுபதி யார்? இவர் அவரை பார்த்து ஓட வேண்டிய அவசியம் என்ன? முருகன் யார்? காதல் கை கூடியதா? அதன்பின்னர் என்ன நடந்தது..?? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

எந்த வேடம் என்றாலும் வெளுத்து வாங்க கூடியவர் விஜய்சேதுபதி. இதில் பக்கா மாஸ், ஜாலி, துறுதுறு டான்ஸ், அனல் பறக்கும் பைட் என கமர்ஷியல் படங்களுக்கு உரிய அனைத்தையும் அசால்லட்டாக தெறிக்க விட்டுள்ளார் மக்கள் செல்வன்.

கிராமத்துக்கு நிவேதா பெத்துராஜ் சிட்டிக்கு ராஷி கண்ணா என இரு நாயகிகளையும் அழகாக காட்டியிருக்கிறார் டைரக்டர்.

இருவரும் தங்களுக்கு உரிய கேரக்டரில் கச்சிதம். சூரி காமெடி சில இடங்களில் கைக்கொடுகிறது. விஜய்சேதுபதியிடம் சூரி பல்ப் வாங்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் நாசர், ஸ்ரீமன், அசுதோஸ் ராணா ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேல் ராஜ்ஜின் ஒளிப்பதிவு அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் கலர்புல்.

விவேக் – மெர்வின் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் பின்னணி இசை மிரட்டல். அதுவே சில காட்சிகளில் போதும்டா சாமி என சொல்ல வைக்கிறது.

விஜய் சந்தர் இயக்கிய வாலு, ஸ்கெட்ச் ஆகிய இரு படங்களும் ஆக்சன் படங்கள் என்றாலும் அதில் திரைக்கதை வலுவாக இருந்தன. ஆனால் இதில் வழக்கம்போல கதையாக உள்ளதால் ரசிப்பதில் தடுமாற்றம் உள்ளது.

சென்டிமெண்ட் மட்டும் பெரிதாக இல்லை. மற்றபடி சிட்டி, வில்லேஸ் என இரு தரப்புக்கும் பிடித்த வகையில் படத்தை கொண்டு சென்றுள்ளார் விஜய்சந்தர்.

மக்களை அச்சுறுத்தும் காப்பர் தொழிற்சாலை, சமூக நலன், ஊர் பிரச்சினை என வழக்கம்போல கதையை நகர்த்தியிருப்பது கொஞ்சம் போரடிக்கிறது.

இடைவேளை வரை ஜாலியாக செல்லும் படம் 2ஆம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

லாஜிக் எல்லாம் வேண்டாம். ஜஸ்ட் டைம் பாஸ் செய்ய வேண்டும் என்றால் சங்கத்தமிழனை காணலாம்.

ஆக இந்த சங்கத்தமிழன்…. சர்க்கரை தமிழன்

ரூட்டை மாற்றிய சுந்தர் சி; ஆக்‌ஷன் விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தமிழக முதல்வர் பழ.கருப்பையா. இவருக்கு 2 மகன்கள். மூத்தவர் ராம்கி. இளையவர் விஷால்.

ராணுவ அதிகாரியாக இருக்கிறார் விஷால். இவருடன் பணி புரியும் தமன்னா விஷாலை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால், விஷாலோ அண்ணன் மனைவி சாயாசிங்கின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு விலக நினைக்கும் பழ.கருப்பையா அவர்கள் ராம்கியை முதல்வராக்க நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் தேர்தல்வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வருகிறார் வட நாட்டு அரசியல் பிரபலம். ஆனால் இங்கே குண்டு வெடிப்பில் இறக்கிறார். இந்த பழி விஷால் குடும்பம் மீது விழுகிறது.

எனவே தனது குடும்பத்தின் மீது விழுந்த கலங்கத்தை போக்கவும் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதியை ஒழிக்கவும் விஷால் எடுக்கும் ‘ஆக்‌ஷன் அவதாரமே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

மிடுக்கான இராணுவ அதிகாரிக்கு ரெடிமேட் சர்ட் போல பிட்டாக இருக்கிறார் விஷால். சண்டைக் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளார் விஷால். ஆனால் கடைசியாக பாகிஸ்தான் பாய் போல அவர் போடும் வேஷம் பிட்டாக வில்லை. பொருத்தமில்லை என்பதால் சிரிப்பாக வருகிறது.

படத்தில் 3 நாயகிகள். தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அகன்ஷா பூரி மூவரும் கச்சிதம்.

தமன்னா மற்றும் அகன்ஷா பூரி இருவரும் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளனர். கண்களால் கவிதை சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.

இவர்களுடன் ராம்கி, பழ கருப்பையா, சாயா சிங், யோகி பாபு, சாரா ஆகியோரும் உண்டு. வழக்கம் போல கபீர் துகான் சிங் மிரட்டல் வில்லன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சுந்தர். சி அண்ட் விஷால் படம் தானே என அலட்சியமாக நினைத்துவிட்டாரோ என்னவோ ஹிப் ஹாப் ஆதியின் பாடல்கள் ரசிக்கவில்லை. பின்னனி இசை சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது.

டட்லியின் ஒளிப்பதிவு ஸ்டண்ட் காட்சிகளில் சூப்பர்.

யோகிபாபுக்கு படம் முழுவதும் காட்சிகளை கொடுத்திருந்தால் அவர் படத்தை நல்லபடியாக கொண்டு செல்ல உதவியிருப்பார்.

ஆனால் சுந்தர் சி. தன் வழக்கமான காமெடி ட்ராக்கை விட்டு ஆக்சனில் இறங்கியது ஏனோ? தெரியவில்லை.

ஆக்சனில் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது தான். ஆனால் இத்தனை ஓட்டைகள் இருக்கிறது. என்ன செய்வது சுந்தர் சி. சார்.

பல நாடுகள் சென்று கதையை ஓடவிட்ட படக்குழுவினர் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சுந்தர் சி. படம் என்றால் குடும்பம் முழுவதும் பார்க்கலாம். ஆனால் ஆக்சன் படம்…???

ரூட்டை மாற்றிய சுந்தர் சிக்கு இந்த ரூட் செட்டாகவில்லை என்பதே உண்மை.

ரகசியம்… அவசியம்..; மிக மிக அவசரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு கோயில் திருவிழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பாதுகாப்பு பணியில் பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா ஒரு நீண்ண்ண்ண்ட பாலத்தில் நிறுத்தப்படுகிறார்.

அவரை பழிவாங்குவதற்காக முத்துராமன் தன் வில்லத்தனத்தை காட்டுகிறார்.

சிறுநீர் கழிக்க ஸ்ரீபிரியங்கா பலமுறை ஓய்வு கேட்டும் முத்துராமன் மறுக்கிறார்.

சக போலீஸ்காரர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோர் அவருக்கு உதவ நினைத்தாலும் முத்துராமன் தடுக்கிறார்.

உடல் உபாதைக்கு ஆளாகும் ஸ்ரீ பிரியங்கா என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

எந்த ஹீரோயினும் ஏற்க மறுக்கும் கேரக்டரை அசால்ட்டாக செய்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. காலை முதல் நேரம் செல்ல செல்ல தனது அவஸ்தைகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கும் போலீசுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

டார்ச்சர் கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வழக்கு எண் முத்துராமன் அசத்தியிருக்கிறார். இவரின் பார்வையே மிரட்டல்தான்.

சீரியசான படத்தை கொஞ்சம் கலகலப்புடன் நகர்த்தியுள்ளார் ஈ.ராம்தாஸ் தான். டிரைவராக வீகே.சுந்தர் மற்றும் சரவண சக்தியும் ரசிக்க வைக்கிறார்.

ஸ்ரீ பிரியங்காவின் காதலராக ஹரிஷ் குமாரும் தன் நடிப்பில் கச்சிதம்.

சின்ன கேரக்டரில் சீமான் வந்தாலும் கம்பீரமான குரல். இலங்கை தமிழர்களின் அகதிகளின் நிலையை அரவிந்தன் சொல்லும் போது நிச்சயம் கண் கலங்குகிறது.

இவர்களுடன் லிங்கா, வெற்றிகுமரன், குணசீலன், பேபி சனா ஜெகன் ஆகியோரும் கச்சிதம்.

இஷானின் இசையும் பாலபரணியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

தமிழ் சினிமாவில் அடிக்கடி பெண் போலீசார் காமெடியாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அதை உடைத்து அழுத்தமான அவசியமான ஒன்றை பதிவு செய்துள்ளார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

ஆனால் ஹீரோயின் குடும்ப காட்சிகள், கொஞ்சம் காமெடி, ரொமான்ஸ் ஆகியவற்றை கொடுத்திருந்தால் கமர்சியலாக இந்த படம் வெற்றி பெறும்.

ஆக இந்த மிக மிக அவசரம்.. ரகசியம்.. அவசியம்…

Sri Priyankas Miga Miga Avasaram review

LOT OF TWIST WITH LORRY… கைதி விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

சிறையிலிருந்து வெளியான கைதி & போலீஸ் துறை & போதை பொருள் கும்பல்.. இவர்களுக்கும் ஓர் இரவுக்குள் நடக்கும் கதையே இதன் பயணம்.

போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து 900 கிலோ அளவிலான போதை பொருளை போலீஸ் பிடித்து விடுகிறது.

அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ் நரேன் டீம்.

ஆனால் அதை எப்படியாவது மீட்க ஆட்களை அனுப்புகிறது வில்லன் டீம்.

இந்த 2 கும்பலில்… போலீசில் கறுப்பு ஆடுகளும்… ரவுடி கும்பலிடம் அண்டர் கவர் போலீசும் தகவல் சொல்கின்றனர்.

இதனிடையில் 10 வருட ஜெயிலில் இருந்த கார்த்தி தன்னுடைய மகளை பார்க்க வெளியில் வருகிறார்.

ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ் டீம்.

ஒரு கட்டத்தில் போலீஸ் துறை விருந்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்க அனைவரும் மயங்கி விழுந்து விடுகின்றனர்.

எனவே அவர்களை 5 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல லாரியை எடுக்க வேண்டிய சூழ்நிலை.. கார்த்தி உதவியை நாடுகிறார் நரேன்.

லாரி செல்லும் வழியில் நடக்கும் ட்விஸ்டுகளே படத்தின் கதை..

கேரக்டர்கள்…

கனமான கேரக்டரை லாரி சவாரியில் சுமந்திருக்கிறார் கார்த்தி. கைதி.. பாசமான அப்பா.. அதிரடி ஹீரோ என பிரித்து மேய்ந்திருக்கிறார் கார்த்தி.

ஆக்சனில் செம செம செம… பைட் சீன் அனல் பறக்கிறது.

போலீஸ் ரோலில் நரேன் நச். கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கார்த்தியின் மகளாக பேபி மோனிகா. கியூட்டான நடிப்பு.

ஹரீஸ் உத்தமன், அன்புவாக அர்ஜீன் தாஸ், மரியம் ஜார்ஜ், காலேஜ் பசங்க, கறுப்பு ஆடுகள், போலீஸ் ஜெயசந்திரன் என அனைவரும் அவரவர் ரோலில் சூப்பர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கிறது.

சண்டை காட்சிகள் மிக நேர்த்தி. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் படத்தின் பலம்.. இருட்டிலும பக்கா கலர்புல்.

சாம் CSன் பின்னணி இசை சூப்பர் சூப்பர். சாங் இல்லை.. எனவே பின்னணி இசையில் புல் பார்ம் காட்டியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தான் படத்தின் வெற்றிக்கு காரணம்..

ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை த்ரில்லாகவே வைத்திருக்கிறது. லாரி பைட் & ட்விஸ்ட்கள் அசத்தல்

புல் ஆக்க்ஷன் தான் என்றாலும், இடையிடையே சென்மெண்ட்.

இதுதான் வெறித்தனமான தீபாவளி விருந்து..

ராயப்பன் ஏரியா வெறித்தனம்.. பிகில் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & அட்லி கூட்டணியில் 3வது படம்.. பிகில் பட்டைய கிளப்புமா? பார்ப்போம்..

ஸ்டோரி.. :

ராயப்பன் இவரின் மகன் மைக்கேல். ராயப்பன் டான்.. அவரது வழியில் மகனும் டான்.

இவர்கள் வடசென்னையில் வசிக்கிறார்கள்.

இவர்கள் பகுதி மகளிர் புட் பால் அணியை ஜெயிக்க வைக்க போராடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் கால்பந்தாட்ட அணியை கோச்சராக வழி நடத்த வேண்டிய சூழ்நிலையில் வருகிறார் மைக்கேல்.

அதில் என்னென்ன பிரச்சனைகள் ? விஜய் எப்படி எதிர்கொள்கிறார்? பிகில் யார்.? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

டான்ஸ், ரொமான்டிக், ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்திலும் விஜய் தெறிக்க விட்டுள்ளார். ராயப்பன் கேரக்டர் செம மாஸ்.

புள்ளைங்களோ ஸ்டைலில் விஜய் டயலாக்ஸ் சூப்பர்.

நயன்தாரா, விவேக் என பலர் இருந்தாலும் பெரிதாக ஸ்கோர் இல்லை.. கொஞ்சம் ரொமான்ஸ் உண்டு. யோகி பாபு காமெடி சூப்பரூ.

கதிர், இந்துஜா நடிப்பு கச்சிதம். டேனியல் பாலாஜி வில்லன் ரோல் ஓகே.. ஜாக்கி ஷெராப் மிரட்டல்..

தொழில்நுட்பம் :

ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பெரிய பலம்… பாடல்கள் வெறித்தனம்.

ரூபனின் எடிட்டிங் சரியில்லை. முதல் பாதியில் 20 நிமிட நேரத்தை குறைத்திருக்கலாம்.

ஜி.கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு காட்சிகள் கச்சிதம்.

டைரக்டர் அட்லி…

டான் & புட்பால் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி வைரைட்டி கொடுத்துள்ளார்.. விஜய் ரசிகராக அவரது ரசிகர்களுக்காக ஒரு படத்தையும் எடுத்துள்ளார்.

முதல் பாதியில் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் படம் படு வெறித்தனமாக இருந்திருக்கும்.

More Articles
Follows