தனுஷை தொடர்ந்து விஷாலுடன் இணையும் கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் இரு மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் சினிமா துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் ஸ்ருதிஹாசன் அவர்கள் அஜித், சூர்யா, விஷால் தனுஷ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அக்ஷராஹாசன் இதுவரை தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

ஆனால் அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்டோர் நடித்த ஷமிதாப் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில்தான் நடிக்கவிருக்கிறார்.

இவர்களுடன் ராகுல் ப்ரீத் சிங், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அரோல் குரலி இசையமைக்க, விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

இதனிடையில், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

அட தமன்னாவும் தயாரிப்பாளர் ஆகிறாராமே…?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பிரபுதேவா நாயகனாக நடித்து, இன்று வெளியாகியுள்ள படம் ‘தேவி.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சோனு சூட், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று ஒரே நாளில் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பணியாற்றும்போது, பிரபுதேவாவுடன் தமன்னாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, இதன் விளைவாக பிரபுதேவாவுடன் இணைந்து விரைவில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போ மிஸ் செய்த நயன்தாராவை இப்போ பிடிச்சிட்டாரு கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள காஷ்மோரா படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் கார்த்தி முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ட்ரீம் வாரியர் நிறுவனம் ரூ. 70 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கார்த்தி பேசியதாவது….

“படத்தின் பிரம்மாண்ட அரங்குகள் என்னை அதிசயிக்க வைத்து விட்டது.

சரித்திர கால கதைகளை படமாக்குவது மிகவும் சவாலானது. இந்த கலை பொருட்களை உருவாக்கும் கலைஞர்கள் இப்போது இல்லை.

அவர்களை தேடி அலைவதே பெரும் வேலை.

பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவுக்கு வசதியில்லை.

ஆனாலும் அதற்கான முயற்சியை, ஒட்டு மொத்த உழைப்பை இதில் கொட்டியிருக்கிறோம்.

பையா படத்தில் நயன்தாராவுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போதுதான் காஷ்மோராவில் அவருடன் நடித்துள்ளேன்” என்றார்.

றெக்க பறந்துருச்சு… விஜய்சேதுபதியின் அடுத்த அதிரடி என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

ஒவ்வொரு படத்தை கிட்டதட்ட 20 நாட்கள் இடைவெளியில் வெளியிட்டு வருகிறார்.

இன்று ரத்தினசிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள றெக்க வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சீனுராமசாமி.

இடம் பொருள் ஏவல் வெளியிட்டுக்கு தயாராகி விட்டது.

படத்தின் ரிலீஸ் தேதியை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவிக்கும்.

றெக்கைக்கு அடுத்த படமாக அது அமையும். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிம்புவுடன் கைகோர்க்கும் ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் 3 வேடம் ஏற்று நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு ஏற்றுள்ள மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசரை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் சமயத்தில் 12 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இதை ஏ.ஆர். முருகதாஸ் வெளியிடவிருக்கிறாராம்.

மீண்டும் ‘ரெமோ’… சிவகார்த்திகேயனுடன் பி.சி. ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவில் மோகன்ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் கேமராவிற்கு பலரும் மாறியுள்ள நிலையில், பி.சி.ஸ்ரீராம் இப்போதும் பிலிம் கேமராவில் பணி புரிகிறார்.

எனவேதான் அவரால் இந்தளவு குவாலிட்டியை கொடுக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows