தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க, நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.
இப்படத்தை மித்ரன் என்பவர் இயக்கியுள்ளார்.
இதனிடையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விஷால் முன்வந்தார்.
அவரின் வேட்பு மனு நிராகரிப்பட்டாலும் அது தொடர்பான சர்ச்சை முடிய பல மாதங்கள் ஆகியது. இதனால் படப் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிந்து படம் திரைக்கு வர தயாராகிவிட்டது.
ஒருவழியாக பிரஸ் மீட் ஒன்றை நடத்தி டைரக்டர் மித்ரன் முன்னிலையில் விரைவில் படத்தை வெளியிடுவேன் என அறிவித்தார் விஷால்.
இதன் பின்னர் கீ படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது, அப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உதவிடும் வகையில் தன் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பேன் என்றார்.
தற்போது சினிமா ஸ்டிரைக் தொடங்கிவிட்டது. இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் முடிந்தவுடன் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்களுக்கே முன்னுரிமை என அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
எனவே இரும்புத்திரை படம் வெளியாவதில் இன்னும் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
வருகிற மே அல்லது ஜுன் மாதம் படத்தை வெளியிட விஷால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் ஒரு டைரக்டருக்கு இத்தனை சோதனைகளா?
