தரமணி-விஐபி2-பொதுவாக எம்மனசு தங்கம் வசூல் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு அரை டஜன் படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று தரமணி, விஐபி2, பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியானது.

இந்த 3 படங்களுமே ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது 3 நாட்களை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்த படங்கள் வசூலித்த தொகை எவ்வளவு என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

வேலையில்லா பட்டதாரி2 படம் ரூ. 12 கோடியையும் பொதுவாக எம்மனசு தங்கம் ரூ. 3.5 கோடியையும் தரமணி படம் ரூ. 3.2 கோடியை வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

VIP2 Taramani Podhuvaga Emmanasu Thangam Box Office Collection Report

Exclusive: என் மக்கள நான் பார்த்துகிறேன்… அதிகாரிகளை திருப்பி அனுப்பிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தின் சூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

ரஞ்சித் இயக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு காட்சியில் ஏழை ஜனங்கள் குடியிருக்கும் பகுதியை ஆக்ரமிக்க நினைக்கும் சிலர், அரசு அதிகாரிகள் உதவியுடன் வந்து அவர்களை மிரட்டி செல்கின்றனர்.

மேலும் தங்கள் தேவைகளை வேறு ஒரு இடத்தில் பூர்த்தி செய்கிறோம். இந்த இடத்தில் வசதி குறைவாக உள்ளது என அவர்களிடம் சொல்கின்றனர்.

இதனையறிந்த காலா ரஜினி அந்த இடத்திற்கு வந்து, மக்கள் தேவையை நான் பார்த்துகிறேன். அவுங்க என் மக்கள். நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க என திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.

இந்த காட்சியில் ரஜினியுடன் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.

I will take care of my peoples welfare says Kaala Rajini

வேதாளம் நிலைமை விவேகத்திற்கு இல்லை; அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வேதாளம் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பியது,

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இப்படத்தின் டீசரும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் காரணம் என கூறப்பட்டது.

ஆனால் வேதாளம் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிடவில்லை. அதற்குள் படத்தை ரிலீஸ் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விவேகம் ரிலீசாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகுமா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இது எப்போதும் வெளியாகும் என விரைவில் இயக்குனர் சிவா அறிவிக்கவிருக்கிறார்.

எனவே வேதாளம் படத்தை போல ட்ரைலரை வெளியிடாமல் இருக்க மாட்டார்கள் என்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Vivegam trailer release date updates

கொள்கையை மாற்றினாரா நயன்தாரா..? அட அதுவும் நல்லதுதானே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் நடித்த படமே என்றாலும் தன் படத்தை விளம்பரம் படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள மாட்டார் நயன்தாரா.

இதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்.

இருந்தபோதிலும் அதையும் ஒப்புக் கொண்டு சில தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடித்துள்ள அறம் படத்தின் புரொமோஷனுக்காக சன் டிவி நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொண்டார்.

இதை ஆச்சரியத்துடன் திரையுலகினர் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார்.

Nayanthara participated in Aramm movie promotions

தமிழர்களுக்கு இந்தியளவில் பெருமை தேடித் தந்த மெர்சல் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்துள்ளது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை மட்டும் அண்மையில் வெளியிட்டனர்.

விவேக் வேல்முருகன் எழுதியுள்ள இப்பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவும் வெளியானது.

பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் அதிர வைத்தனர்.

இவை தவிர கடந்த வாரத்தில் கூகுள் தேடலில் அதிகளவில் தேடப்பட்டதில் `மெர்சல்’ முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லூனார் எக்ளிப்ஸ், ரக்ஷா பந்தன் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பதாக கூகுள் இந்தியா அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

Alaporan Tamizhan song from Mersal became No 1 in India

ஹீரோ சட்டைய கழட்டினா ஹீரோயின் போல இருக்காரு; கிடா விருந்து ஆடியோ விழாவில் ஆர்கே செல்வமணி கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.பி.என்.சினி சர்க்யூட் தயாரிக்கும் படம் ‘கிடா விருந்து’.

இதில் எஸ்.பி. பிரசாத், ஷாலினி, கஞ்சா கருப்பு, ரஞ்சன், கே.பி.என். மகேஷ்வர், சேரன்ராஜ் , தங்கம், தமிழ், மணிமாறன், ‘வீரம்’ சையது, சுகி, ராணி,சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.வெற்றி, இசை – ‘பிரின்ஸ்’ நல்ல தம்பி, எடிட்டிங் – கோபால், தயாரிப்பு – கே.பி.என்.மகேஸ்வர், இணை தயாரிப்பு – எஸ்.பி. பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஏ.எஸ். தமிழ்ச்செல்வன்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் கேயார், ராஜன். விஜயமுரளி, பிஆர்ஓ பெருதுளசி பழனிவேல் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி பேசியதாவது…

பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக களைய முயன்று வருகிறோம்.

தயாரிப்பாளர்களுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு தர காத்திருக்கிறோம்.

கிடா விருந்து ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்தேன் நன்றாக உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு இயக்குனர் டச் உள்ளது. கேமராவை எங்கும் வைக்க வேண்டும் எங்கு வைக்க கூடாது என தெரிந்து வைத்திருக்கிறார்.

படத்தின் நாயகனை பார்க்கும்போது கம்பீரமாக இருக்கிறார். அவர் கொம்பன் கார்த்தி, ராஜ்கிரண் போல இருப்பதாக சொன்னார்கள்.

ஆனால் அவர் சட்டைய கழட்டினால் ஹீரோயின் போல இருக்கிறார். அவர் உடம்பை குறைக்க வேண்டும்.

இது ஒரு குறையாக நினைக்க வேண்டாம். அவருக்கு நல்லதுதான் கூறினேன்” என பேசினார் ஆர்.கே.செல்வமணி.

FEFSI president RK Selvamani made fun of Hero at Kida Virundu audio launch

More Articles
Follows