முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் ராம்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இந்நிலையில் விரைவில் தனது புதிய படத்தை தொடங்கவிருக்கிறாராம் ராம்.

அதில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ராம் சாயலில் உணர்வுபூர்வமான கதையாகவும் குறுகிய கால படைப்பாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச் மற்றும் சாமி2 படங்களை அடுத்து ராம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Director Ram teamsup with Vikram for quick project

சீமான்-விஜய்ஆண்டனி இணையும் படத்தை தயாரிக்கும் லைகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனிவாசன் இயக்கத்தில் அண்ணாதுரை மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இதில் அண்ணாதுரை படத்தில் இரண்டு வேடங்களை ஏற்று, எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் அப்படி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

Will Seeman direct Vijay Antony for Lyca Productions

தானா சேர்ந்த கூட்டம் பட ரிலீஸ் தேதி & ஆல் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடீயோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மட்டும் அண்மையில் வெளியானது.

ஆனால் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ்சிவன் பிறந்தநாளில் இப்படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் மற்றும் ரீலீஸ் தேதி என அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

அக்டோபரில் இதன் செகன்ட் சிங்கிளையும், நவம்பரிலும் டீசரையும், டிசம்பரில் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களையும் வெளியிட உள்ளனர்.

மேலும் இடை இடையே சிங்கிள் சிங்கிள் பாடலாக வெளியிட இருக்கிறாகளாம்.

இப்படத்தை அடுத்த 2018 ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Thaana Serndha Kootam movie release trailer teaser songs release updates

மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசனுடன் இணையும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா புகழ் கிடைத்தது ஒரு பக்கம் என்றால், இவரால் அந்த டிவி நிகழ்ச்சியும் புகழின் உச்சத்தை தொட்டது.

தற்போது அவர் வெளியேறிவிட்டாலும் இன்னும் ஓவியாவுக்கென ஆரம்பிக்கப்பட்ட இன்டர்நெட் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சிய தற்போது 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி 100வது நாளை இந்நிகழ்ச்சி தொடவுள்ளது.

அன்றைய தினம் சிறப்பு அழைப்பாளராக ஓவியா கலந்துக் கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Again Oviya will join with Kamalhassan on 100th day of Bigg Boss

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்… மாதவனுக்கு சூர்யா மெசேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மகளிர் மட்டும்.

நடிகர் சூர்யா தயாரித்த இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது.

இதில் கௌரவ தோற்றத்தில் நடித்த மாதவனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில்…

என் சகோதரர் மாதவனுக்கு… எனக்கு வார்த்தைகள் போதவில்லை. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன்.

ஆனால் நான் சொல்ல வேண்டியதை நீங்கள் புரிந்து கொண்டு, “கவலை வேண்டாம். அந்த வேலையை செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்தீர்கள்.

உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்.” என தெரிவித்துள்ளார் சூர்யா.

I am very much Thankful to Madhavan says Suriya

தமிழ்ராக்கர்ஸ்-தமிழ்கன் அட்மின் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் பூதமாக எழுந்துள்ளது திருட்டு விசிடி விவகாரம்.

திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் வெளியாகும் புதிய படங்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இதில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இரண்டு இணையங்கள் புதுப்படங்கள் ரிலீஸ் படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு வருகிறது.

இந்த இணையத்தள அட்மின்களை கைது செய்துவிட்டோம் என விஷால் அறிவித்தார்.

ஆனால் அதன்பின் அந்த இணையத்தள சம்பந்தப்பட்டவர்கள் அப்படி யாரையும்ம கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.

மேலும், துப்பறிவாளன் படத்தை ரிலீஸ் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என கூறி அதையும் சாதித்து காட்டினர்.

இந்நிலையில் அந்த இணையங்களின் நெறியாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்களை பற்றிய தகவல்கள் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

The person who found Tamil Rocker and Tamil Gun admin will be awarded says Vishal

More Articles
Follows