தல-தளபதி பற்றி விக்ரம் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள படம் இருமுகன்.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வேளையில், மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அண்மையில் ஒரு தனியார் டிவி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விக்ரம்.

அப்போது அவரிடம் அஜித்தை பற்றி கேட்கப்பட்டது. அவர் பற்றி கூறும்போது…

அஜித்தின் ஆடைகள் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அவருடன் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்துள்ளேன்.

இனியும் நல்ல கேரக்டர் அமைந்தால், அவருடன் நிச்சயம் நடிப்பேன். என்றார்.

விஜய் பற்றி கேட்கப்பட்டதற்கு…

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. அப்படி வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை இயக்க ஆசை.

விஜய்யை பார்க்கும்போது மட்டும் எனக்கு அப்படி தோன்றும். அவர் அவ்வளவு ஸ்வீட். அதான் சரியான காரணம் என்று நினைக்கிறேன்.

அதுபோல ஜெயம் ரவியை இயக்கவும் ஆசை உள்ளது” என்றார்.

தனுஷ் கண்ணீர் விட்டு அழ ‘ஜோக்கர்’தான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் ஒரு திறமையான நடிகர் என்றாலும், வளரும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்க தவறாதவர் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 12) தேதி வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ராஜூமுருகனின் ‘ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார்.

இதில் குரு சோமசுந்தரம் நாயகனாக நடிக்க, ரம்யா பாண்டியன், காயத்ரி உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

‘ஜோக்கர்’ படத்தில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பரிதாபப் பார்வை வேண்டாம்’ – நா.முத்துக்குமாரின் தம்பி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அண்மையில் காலமானார்.

இவரது மறைவு பல்வேறு தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே இவரின் மரணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதில் சில தவறான தகவல்களும் கூறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அவரது சகோதரர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்…

அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்கு பிறகு ஆன ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்…

அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான்.

கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.

ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது.

எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தன.

எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம்.

எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறான்.
அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது.

அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது.

அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம்.

தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.

இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன்.

பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம்.

அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.

ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம்.

எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை.

உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான்.

அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன்.

அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன.

தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக ‘தரமணி’யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான்.

இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.

சுஜாதாவின் ”நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்” என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன.

மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.”

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் 60 அப்டேட்ஸ் : நாளை முதல் தளபதி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து, விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

பரதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

இதில் விஜய் சம்பந்தப்பட்ட அதிரடியான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் பரதன்.

அஜித்துக்கு கோடி கோடியாய் கொடுக்க நயன்தாரா ரெடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக திரைத்துறையின் எந்த துறையில் ஒருவர் இருந்தாலும் அவர்கள் வர நினைக்கும் துறையாக தயாரிப்பு துறை இருக்கிறது.

நாமும் படங்களை எடுத்து ஒரு தயாரிப்பாளராகிவிட வேண்டும் என பலரும் முயற்சித் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் விரைவில் நயன்தாராவும் இணைவார் என்றே தெரிகிறது.

விரைவில் இவர் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

எனவே, அஜித்தின் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடி தரவும் தயாராக இருக்கிறாராம் நயன்தாரா.

தல என்ன செய்ய போகிறாரோ?

‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்கள் என்றாலே அவர்களது மரணம் கூட ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும்.

அண்மையில் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் காலமானார்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாகவும், செலவுக்கு பணம் இல்லாததால் மரணம் அடைந்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்தன.

மேலும் அவருடையை குடி பழக்கமும் ஒரு காரணம் என தகவல்கள் வருகின்றன.

இதனை முற்றிலும் மறுத்துள்ள மற்றொரு பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளதாவது…

“அவர் மறைந்தாலும், அவர் எழுதிச்சென்ற பாடல்கள் இரண்டு வருடத்திற்கு வெளிவரும்” என்றார்.

More Articles
Follows