SIIMA விருதை வென்ற விஜய்-சிவகார்த்திகேயன்-நயன்தாரா-நைனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது SIIMA வழங்கும் விழா அபுதாபியில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் தெறி படம் 3 விருதுகளை பெற்றது.

• சிறந்த என்டர்டெயினர்- விஜய்
• சிறந்த இயக்குனர்- அட்லீ
• ஸ்பெஷல் ஜுரி விருது- நைனிகா

மற்ற விருதுகளை அள்ளிய தமிழ் நட்சத்திரங்கள் இவர்கள்தான்…

சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
சிறந்த நடிகை: நயன்தாரா (இருமுகன்)
சிறந்த அறிமுக இயக்குனர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் 16)
சிறந்த அறிமுக நடிகை: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த படம்: (இறுதிச்சுற்று)
சிறந்த நெகட்டிவ் ரோல் நடிகை: த்ரிஷா
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் ( அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடகர்: அனிருத் (ரெமொ)
சிறந்த பாடகி: சித்ரா (சேதுபதி)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (மிருதன்)

விஜய் பட வியாபாரத்தை பார்த்து மெர்சலான கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவர்கள் தற்போது இணைந்துள்ள மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே படத்தின் வியாபாரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாம்.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு பல சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டியிட்டதாம்.

இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இவ்வளவு விலைக்கு விஜய் படம் விற்கப்பட்டுள்ளதால், கோலிவுட் வட்டாரமே மெர்சலாகியுள்ளதாம்.

Mersal satellite rights bagged by Zee Tv for Rs 30 crores

விஐபி2 படத்தில் ரஜினி கேரக்டரில்தான் அவர் நடித்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இம்மாதம் ஜீலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கஜோல் கேரக்டரில் தன் தந்தை ரஜினியை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்து வைத்திருந்தாராம் சௌந்தர்யா.

அதற்காகவே ரஜினி கேரக்டரை பட்டைத் தீட்டி வைத்திருந்தாராம்.

ஆனால் தன் அப்பாவும் அக்கா கணவரும் முறைத்துக் கொண்டு மோதிக் கொள்வது போல் இருந்தால், அது சரியாக வராது என்று பின்னர் முடிவு செய்து, அந்த திட்டத்தை சௌந்தர்யா கைவிட்டு விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Did Kajol role written for Rajinikanth in VIP2

பிக்பாஸ்க்கு முன்பே பிரபலமான நடிகை ஜுலி; ஆதார வீடியோ சிக்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் சினிமாவை சேர்ந்த 14 பிரபலங்கள் மற்றும் சாதாரண பெண் என்று அறியப்பட்ட ஜல்லிக்கட்டு போராளி ஜுலியானாவும் கலந்துக் கொண்டார்.

அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பேசும்போது, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், நர்ஸ் என்றும் சாதாரண பெண் என்றும் அடிக்கடி கூறி வந்தார்.

இதற்கு முன் கேமரா முன் தான் தோன்றியதில்லை என்றும் கூறிவந்தார்.

இந்நிலையில், என் காதல் சொல்ல வந்தேன் என்ற ஒரு ஆல்பம் பாடலில் அவர் தோன்றி நடித்திருக்கிறார் என்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இப்பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதமே யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu and BigBoss fame Julie acted in Album Secret leaked

இதோ அந்த வீடியோ பாடல்…

நாசர் வீட்டுக்கு சென்று மகன் ஆசையை நிறைவேற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னை நேசிக்கும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையை பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றி வைப்பவர் விஜய்.

இந்நிலையில் பிரபல நடிகர் நாசர் மகன் பைசல் அவர்களின் ஆசையை ஒரு சந்தர்ப்பத்தில் நிறைவேற்றினாராம்.

அந்தப் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நாசரின் மனைவி கமீலா.

சில ஆண்டுகளுக்கு முன்பு பைசல் ஒரு விபத்தில் சிக்கியிருந்தார். தற்போது குணமடைந்து வருகிறார்.

அவரை நலம் விசாரிக்க நாசர் வீட்டுக்கு விஜய் சென்றிருந்தாராம்.

அந்த சந்திப்பின் போதுதான் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க விரும்பி, ஒரு படத்தை எடுத்துள்ளார் பைசல்.

இதை தன் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் படமாக வைத்துள்ளார் நாசர் மனைவி கமீலா.

Vijay fulfilled actor Nassar son Faizals long time wish

நேற்று சிம்பு; இன்று தனுஷ்; கெளதம் மேனனுடன் தொடரும் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பவர் பாண்டி படத்திற்கு முன்பே, கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ்.

இதில் பவர் பாண்டி படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் இதுவரை தொடங்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது.

இதனிடையில் கெளதம் மேனன் இயக்கி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சூட்டிங் கலந்துக் கொண்டார் தனுஷ்.

இடையில் என்ன நடந்ததோ? விஐபி2, வடசென்னை, ஹாலிவுட் பட என பிஸியாகிவிட்டார் தனுஷ்.

தனக்கு பேசிய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் கௌதம் மேனன் இழுத்தடிப்பதால், தனுஷ் அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் சிம்புவுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டு, பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அப்படத்தை சிம்பு முடித்துக் கொடுத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Do you Know Why Enai Noki Paayum Thota getting delay

More Articles
Follows