ரத்தம் தெறிக்க கர்ஜிக்கும் மாஸ்டர்-ஸ்… அதிர வைத்த போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் விஜய்சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் 3வது போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு செல்லும் ‘மாஸ்டர்’ விஜய்

இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ரத்த தெறிக்க கர்ஜிப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Vijays Master movie 3rd look poster goes viral

ரஜினியை பின்பற்றும் நான் அப்படி செய்யமாட்டேன்.. – ராக்லைன் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘லிங்கா’.

இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார் .

லிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம் .மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ரஜினி பட வழக்கில் உண்மை வென்றது..; ‘லிங்கா’ தயாரிப்பாளர் ஹாப்பி

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு ராக்லைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வெளியாகியுள்ளது .

இந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:

“சமீபத்தில் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது. லிங்கா படத்தின் போது ஒருவர் இந்தக்கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருந்தார். இப்போது கேஸ் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது.

பத்திரிகையாளர்களை இந்த நேரத்தில் எதற்காக சந்திக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவசர அவசரமாக படத்தைக் வெளியிட வேண்டும் என வேலை செய்து கொண்டிருந்தொம். ரஜினி சார் பிறந்த நாளைக்கு படத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உழைத்தோம்.

அந்த நேரத்தில் அது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. நான் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன்.

அந்த நேரத்தில் கோர்ட் திடீரென பத்துக்கோடி கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஒரு நாளைக்குள் பத்து கோடி கட்டுவது எவ்வளவு சிரமம். அன்றைக்கு நிறைய ஊடகங்கள் கதைத் திருட்டு சம்பந்தமாக நிறைய எழுதி இருந்தார்கள். அதனால் தான் இந்த நல்ல செய்தியும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று இங்கு வந்தோம்.

ரஜினி ஸ்டைலில் பணத்தை திருப்பி கொடுக்கும் சல்மான்கான்

எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். ரைட்டர் யூனியனுக்கு இன்னும் பவர் இருக்க வேண்டும். கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன்.

கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்” என்று பேசினார் .

ராக்லைன் வெங்கடேஷ் பேசியதாவது,

“ரஜினி சார் படம் ரிலீஸ் பண்ற சூழல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். நாளை ரிலீஸ் என்றால் முந்தைய நாள் எங்கள் லாயர் 10 கோடி டெபாஸிட் செய்ய வேண்டும் என்ற ஆர்டர் வந்திருப்பதாக சொன்னார். படம் எடுப்பதே எங்களுக்கு சேலஞ்ச் இருந்தது.

படம் எடுத்த கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே பேங்க்ல அப்ரோச் செய்து எப்படியோ சமாளித்தோம்.
ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த டைமில் இப்படி வந்து ப்ளாக் மெயில் பண்றது சரியல்ல .அந்த டைமில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார்.

இதைப் போல கடைசி நேரத்தில் ப்ளாக்மெயில் செய்வது இந்த திரைப்பட துறைக்கு நல்லதல்ல. உண்மை ஒருநாள் வெல்லும் என்று எங்கள் படத்தில் வரும் அந்தப்பாட்டு மாதிரி உண்மை தான் ஜெயிக்கும். சினிமா இண்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி இனி வரக்கூடாது.

சமூக விரோதிகள் பற்றி ரஜினி சொன்னது சரிதான்.; ஆதாரம் தருகிறார் லிங்கா நஷ்ட புகழ் சிங்காரவேலன்

இப்பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன் டைரக்டர் எதாவது ஒருவழி செய்ய வேண்டும். கோர்ட்டுக்கு அதிகமுறை அலைந்துள்ளேன். அங்குபோய் நின்று பதில் சொல்ல வேண்டும். அது நிறைய மெண்டல் பிரஷர் தந்தது.

தற்போது தவறை செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாறை பின்பற்றுபவன் தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மீடியா மூலமாக கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பதில் அளித்துப் பேசியதாவது,

“பணம் கேட்டு மிரட்டினார்கள். நிறைய பேர் பேரம் பேசி முடிக்கலாம் என்றும் சொன்னார்கள். நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன் .

எதுவா இருந்தாலும் கோர்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். இனி ரஜினி சார் படம் தயாரிப்பது குறித்து ரஜினி சார் முடிவு செய்யவேண்டும். என் வாழ்க்கையில் ரஜினி சாரை வைத்து ஒருபடம் தயாரித்தேன் என்ற திருப்தி போதும்” என்றார்.

I follow Rajinis way So i wont do that says Rockline Venkatesh

சென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில் நுட்பமும் முன்னேறிவரும் இந்தக்காலத்தில் நமது தொன்மையான வீரக் கலையான சிலம்பம், வர்மம், குத்துவரிசை போன்ற விளையாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது தொன்மையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக வீரக்கலைகள் மீது வீரியமுள்ள பற்று கொண்ட டாக்டர் எம். கே. சோமசுந்தரம் அவர்கள் தற்காப்புக் கலையை வளர்ப்பதில் தன்னிகரற்ற ஈடுபாட்டுடன் விளங்குகிறார். தனது ‘மாஸ் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ சார்பில் சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே போன்ற வீர விளையாட்டுகளை பயிற்சிகள் அளித்து அழிந்துவிடாமல் காப்பாற்றி வளர்த்து வருகிறார்.இதற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக இப்பயிற்சிகளை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கடந்த 15 ஆண்டு காலமாக அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பலரும் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு அரசுப்பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

வேலு நாச்சியாரும் ஜான்சி ராணியும் போன்று வீரப் பெண்மணிகள் நிறைந்த நாடு இது.
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்னும் பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் பெண்களுக்கான சிலம்பம் போட்டிகளை நடத்த இவர் முடிவு செய்தார். அதன்படி இவரது முன்னெடுப்பு முயற்சியின் அடுத்தகட்டமாக 7 மாநில மகளிர் வீராங்கனைகள் சுமார் 300 பேர் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டுப்போட்டிகள் நிகழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 25 அன்று தொடங்கி 27 வரை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்பவர்கள் சர்வதேச அளவிலான அடுத்தநிலைப் போட்டிகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் அடுத்து கனடாவுக்கும் செல்ல இருக்கிறார்கள்.

கேளிக்கை எண்ணங்களில் நாட்டு மக்கள் மனம் மயங்கி உடல் நலம் சீர் கெட்டு விடாமல் தடுக்கும் வகையில் விளையாட்டையும் உடல் வலுவையும் பேணிக் காக்கும் முயற்சியில் டாக்டர் எம். கே. சோமசுந்தரம் ஈடுபட்டு வருகிறார். அவருடன் சிலம்பக்கலை பேராசான்கள் அ.பா. கிருஷ்ணன் மற்றும் தனபால் ஆகியோரும் கைகோர்த்து இருக்கிறார்கள்.

செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டி நிகழ்ச்சிகளை கல்லூரியின் தலைவர் பாபு மனோகரன் ஊக்கப்படுத்தி இந்த குழுவினர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஞானத்தில் சிறந்து விளங்கும் நம் நாடு உடல் நலத்திலும் விளையாட்டுக் களத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விளையாட்டுப்போட்டிகளை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கூறியதாவது:-

சரத்குமார் கூறியதாவது :-

சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எப்படி சந்திக்கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்து வரும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவரும் போட்டியாக நினைத்ததில்லை. அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து அதற்கு என்ன தேவையோ அதை உள்வாங்கி அப்படி தான் நடிப்போம்.

மேலும், ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார்.

ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகையால், உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை நான் பின்பற்றி வருகிறேன். அது தான் நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்.

இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்

ராதிகாவிடம் கோவம் மட்டும் தான் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோவத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து.

மேலும், ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி என்றே கூறலாம். எனக்கு ரஷ்ய மொழி, ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.

எங்கள் குடும்பத்தில் பல மொழிகள் பேசுபவர்கள் உண்டு. ராதிகாவும் தென்னிந்திய மொழிகள், சிங்களம், ஹிந்தி நன்றாக பேசுவார்.

ஆனால், இந்த முறை சில தவிர்க்க முடியாத காரணத்தால் செல்ல முடியாது என்பது வருத்தமாக தான் இருக்கிறது.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது :-

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்யும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
நாங்கள் இருவருமே செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கிறோம். ஆகையால்தான் பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. எங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்வதற்கு கடவுளின் அனுக்கிரகம் தான் காரணம் என்று கூறுவேன்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. பலரும் கதை கூறி இருக்கிறார்கள் ஆனால் எங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லை. தனா கூறிய
கதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருக்கிறது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது.

நடிகவேள் செல்வியாக மாறிய ராதிகா சரத்குமார்

பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்றும் மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற மாட்டேன். இது வரை இப்படித்தான் இருந்து வந்தது. ஆனால், இந்த படத்தில் விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொறுத்தவரை கதை எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்.

மேலும், நான் செய்யும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பேன். தினமும் யோகா செய்வேன். இருவருமே உணவில் கவனத்துடன் இருப்போம். இந்த ஒழுக்கம்தான் எங்களை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

சரத்குமார் அருமையான மனிதர் மற்றும் அவருடைய விடா முயற்சி இரண்டும் அவரிடம் பிடித்த விஷயம்.

கர்ணனே வெட்கப்படும் அளவிற்கு தானம் செய்வது அதிலும் உண்மையாகவே உதவி தேவையா என்று ஆராயாமல் செய்வது பிடிக்காது.

இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறினார்.

இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது

சோனு பேசும்போது,

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.

பாடலாசிரியர் சிவா பேசும்போது,

இப்படத்தில் 4 பாடல்களையும் நான் தான் எழுதினேன். இப்படத்திற்கு மற்றவர்களை விட தனாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. சித்ஸ்ரீராம் பாடகராக வந்ததும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்தது. புதுபுது யோசனைகளைக் கூறினார் என்றார்.

நடிகர் சாந்தனு பேசும்போது,

கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி.

இப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னுடைய இயல்பான கதாபாத்திரம் தான் இப்படத்தில் பிரதிபலிக்கும். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறேன் என்பதில் பெருமை.

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க 2 இன்ச் கம்மி.. – ராதிகா சரத்குமார்

இரண்டு படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறோம். குணசித்திர வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இரண்டு நாயகர்கள் இருக்கும் படத்தில் நடித்து வருகிறோம். இப்படத்தில் எனது பாத்திரம் சிறியது தான் என்றாலும், நாம் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் அனைவரிடமும் சென்று சேரக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், சிறந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும் முக்கியம். அவர்கள் தான் மக்களிடையே கொண்டு சேர்ப்பார்கள்.

சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் சில காட்சிகள் என்றாலும் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்றார்.

நடிகை மடோனோ செபாஸ்டியன் பேசும்போது,

என் கைப்பேசியில் தயாரிப்பு நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ், இயக்குநர் தனா என்ற குறுஞ்செய்தியைப் படித்ததும் ஒரு நல்ல படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கை வந்தது. மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், ஒவ்வொருவருக்குமே சிறந்த படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்தில் தான் நடித்திருக்கிறோம் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

தனா இந்த கதையைக் கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈஸி’ பாடல் தான்.

‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன் என்றார்.

இசையமைப்பாளர் சித்ஸ்ரீராம் பேசும்போது

இசையமைப்பாளராக இப்படம் எனக்கு முதல் படம். இயக்குனர் மணிரத்னம் மற்றும் தனா இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். 1960களில் எனது தாத்தா இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். இயக்குனர் இதனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களையும் சிவா எழுதியிருக்கிறார். இப்படத்தின் வாய்ப்பை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது,

மணிரத்னத்தின் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. தனா என்னிடம் கதை கூறினார், கதை வித்தியாசமான குடும்ப கதையாக இருந்ததால் சம்மதித்தேன். பிறகுதான் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது என்று தெரியும். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று தான் பார்ப்பேன். இயக்குநரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.

எனது கதாபாத்திரம் தலைக்கனத்தோடு இருக்கிறானா? அல்லது தன்னம்பிக்கையோடு இருக்கிறானா? இறுதியில் அவன் எடுத்த முடிவில் வெற்றிபெறுகிறானா? என்பது படம் பார்க்கும்போது தெரியும். முடிவு அனைவருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு நடிகனாக அனைவரும் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டத்தில் நேரடியாகத்தான் படப்பிடிப்பு நடத்தினோம்.

முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் வந்தார். அவரைப் பார்த்ததும் சிறிது பதட்டம் இருந்தது. பிறகு படம் முடிந்ததும் தான் அவரிடம் பேசினோம்.

ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் நடித்தோம்.

ராதிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவரை அக்கா என்று தான் அழைப்பேன். அவர் நடிக்கும்போது இயல்பாக இருக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சுலபமாக நடித்துவிடுவார் என்றார்.

ராதிகா சரத்குமார் பேசும்போது,

சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி.

நான் சித்ஸ்ரீராமின் ரசிகை. அவருடைய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நேரமின்மை காரணமாக போக இயலவில்லை. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சோனு ஆகியோருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.

சரத்குமார் பேசும்போது,

தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் தனா பேசும்போது,

வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாய்ப்பால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார்.

விழாவின் இறுதியில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது. படத்தை வெளியிடும் Ynot சசி மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

சூர்யாவுக்கு ‘அகரம்’..; கார்த்திக்கு ‘உழவன் பவுண்டேசன்’.. – சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன்பெற்ற மாணவர்கள் என அகரம் விதைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3,000 மாணவர்களின் கல்லூரிக் கனவை ‘விதைத் திட்டம்’ மூலமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இத்தனை தொலைவை கடந்துவர துணை நின்ற அறம்சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’ நிகழ்வு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைகழகதத்தில் இன்று நடைபெற்றது.

தொழில் நுட்பங்களும், தொடர்பு கொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது. தகவல் தொழில்நுட்பம், உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும், வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள், தங்களின் கல்லூரிக் கல்விக்காக இன்றும் காத்திருக்கிறார்கள்.

அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அகரம் விதைத் திட்டம்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது..
“அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களை போல்தான்.

நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சமிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவனைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கின்றேன். நான் இருந்ததால் தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது. எனவே அந்த தாய்க்குதான் நன்றியை தெரிவிக்க வேண்டும்.

விட்டில் ஒருவாராவது படிக்க வேண்டும் என்பதற்காக எனது அக்காவின் படிப்பை நிறுத்தி என்னை படிக்க வைத்தார்கள். அந்த கால கட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு புதிய உடைகள் அணிந்ததில்லை.

துணி கிழிந்தால் மாற்று துணி மட்டும் கிடைக்கும். பள்ளியில் எடுத்த மாணவர்களின் குழு புகைப்படத்தை வாங்க பணம் இல்லை. அதே பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடன் படித்த மாணவர்கள் சில பேர் மீண்டும் நாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இன்று அந்த பள்ளியை நானும் என்னுடன் படித்த மாணவர்களுடன் சேர்ந்து தத்தேடுத்துள்ளேன். எங்களால் முடிந்த தொகையை வசூலித்து, அரசு செய்த உதவியுடன் சேர்த்து எங்கள் கல்வி அறக்கட்டளையின் மூலமாக ஒரு அரங்கமும், 5 வகுப்பறைகளையும் கட்டிக்கொடுத்தோம். சூர்யா, கார்த்தி அந்த பள்ளியில் 500 நாற்காலிகளை நன்கொடை அளித்தனர். அதுதான் நான் எங்கள் பள்ளிக்கு செலுத்திய மரியாதை.

14 வயது வரை 14 படங்களை மட்டுமே பார்த்த நான், 14 வருடங்களில் 100 படங்களை நடித்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து 1980ம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளையை துவக்கினோம்.

+2 மாணவர்களுக்கு அந்த காலகட்டத்தில் முதல் பரிசு 1000 ரூபாய், இரண்டாம் பரிசு 750 ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் கொடுத்து வந்தேன்.

25 ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடந்து 2006ம் ஆண்டு அகரமாக தொடங்கப்பட்டது. இன்றும் நாற்பது ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடைபோட்டு கொண்டிருக்கிறது.

பல படங்களில் சூர்யா நடித்தாலும் அவருக்கு நிலையான பெயர் அகரத்தின் மூலமே கிடைக்கும். அகரம் அறக்கட்டளையே சூர்யாவின் அடையாளம்.

விவசாயத்திற்கு உதவும் உழவன் பவுண்டேஷனே கார்த்தியின் அடையாளம். மாணவர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள், நான் உங்களை விட அதிகம் கஷ்டங்களை சந்தித்தவன்.

ஆனால் இன்று இந்த நிலையில் உள்ளேன். சத்தியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் உழைத்தால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்” என்றார்.

விழாவில் நடிகர் கார்த்தி, “இங்கு அனைவரிடத்திலும் ஒரு பெரிய சந்தோஷத்தை காண முடிகிறது. அகரம் குழுவிடம் உற்சாகத்திற்கு என்றும் குறைவிருக்காது என்பதை இன்று கண்கூடாக பார்க்கிறேன்.

நான் இங்கு ஒரு விருந்தினராக வந்துள்ளேன். என்றுமே வாங்குவதை காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் உள்ளது. ஆகவே நாம் வாங்கி கொண்டாலும் கொடுக்கும் நிலையை என்றும் பின்பற்றுவோம். மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது நம் சந்தோஷத்தை நிலை நிறுத்தும்.

உங்களை யாரோடும் ஒப்பிடாதீகள். நீங்கள் மற்றவர்களை விட மேலானவரும் இல்லை, கீழானவரும் இல்லை, சம நிலையில் உள்ளவரும் இல்லை. நீங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவர். மற்றவர் பெறும் வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலை கண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியமானது.

திருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சம நிலை ஆகியவை உங்கள் வாழ்வில் முக்கியம்” என்றார்.

விழாவில் நடிகர் சூர்யா, “முதலில் சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அகரம் கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலும், ஜெயஶ்ரீ அவர்களும் முக்கிய காரணம்.
அவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசூர உழைப்பினால் தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்.

அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம்.

மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைதரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி அவர்களின் குடும்பம், சொந்த பிரச்சனைகளை சமாளித்து அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை.

அகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் நானும் ஒரு சகபயணியாக பயணிப்பது மட்டுமன்றி எனது பங்களிப்பையும் செலுத்துவேன்.

மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமுகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமிரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்.

அகரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி “இணை”. முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கும், அங்கு படிக்கும் மாணவர்களின் வளரச்சிக்கும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.

மேலும் நிறைய படங்களில் நடிப்பேன், நன்றாக சம்பாதிப்பேன், நிறைய நல்ல உதவிகளை செய்வேன்” என்றார்.

அகரம் செயல்படுத்தும் மற்ற திட்டங்கள் குறித்து ஒரு பார்வை :

அகரம் ‘நமது பள்ளி’ திட்டம் மறைமலைநகர் மற்றும் கருங்குழி பகுதிகளில் தலா ஒரு அரசுப் பள்ளியை தேர்ந்தெடுத்து, மாணவர்களின் கற்றல் திறன மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இரண்டு வருட நமது பள்ளி திட்ட செயல்பாடுகளால் பள்ளி இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதமும் உயர்ந்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்படி பெரு நிறுவனங்களை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.

‘இணை’ திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி நிகழ்வுகளை எடுத்துச் செய்வது, கல்வி சீர் வழங்குதல், மரம் நடுதல், பள்ளிச் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த, பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளி குறித்தான பெருமையை தக்கவைக்க என பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை எடுக்க இருக்கிறோம்.

முன்னோட்டமாக கடந்த ஒரு வருடம் திண்டிவனம் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த 30 பள்ளிகளில் ‘இணை’ திட்டப் பணிகளை பரிசோதித்து மெருகேற்றி இருக்கிறோம். அடுத்ததாக தமிழகம் முழுவதும் இணைத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

சமூகத்தில் பின்தங்கிய மக்கள் இருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ திட்டத்தை தொடங்கி, அவர்கள் வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

‘தைத் திட்டத்தின்’ மூலம் கல்வி இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி, சிறந்த பணி வாய்ப்பை அவர்கள் பெற்றிட வழிகாட்டுகிறோம்.

நிகழ்வில் நடிகர் சிவகுமார், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மூன்றாயிறத்திற்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Agaram for Suriya and Uzhavan foundation for Karthi says Sivakumar

More Articles
Follows