விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி கன்பார்ம் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா முதலானோர் நடித்துள்ள படம் ‘காளி ’.

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பாக பாத்திமா தயாரித்துள்ளார்.

இந்நிலையில்இந்த படத்தை மே 18-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இனி கோடை விடுமுறை கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.

ரஜினியுடன் இணைகிறார் விஜய்சேதுபதி; அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பட சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில்இ ப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

இத்தகவலை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆனால் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார இல்லை வேறு முக்கியமான கேரக்டரை ஏற்கிறாரா என்பது குறித்த எந்த விவரங்களையும் படக் குழுவினர் வெளியிடவில்லை!

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினிகாந்த் உடன் இணைகிறார்
இசையமைப்பாளர் அனிருத்.

கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்-அக்சராஹாசன் கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பாடகியாவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார்.

2வது மகள் அக்சராஹாசன் உதவி இயக்குநராகவும் நடிகையாக தன் சினிமா பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடாஷா என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன்பிறகு கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

தற்போது தன் தந்தையின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இதில் நாயகனாக விக்ரம் நடிக்க, ராஜேஷ் எம் செல்வா இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் மற்றும் அக்சராஹாசனின் வேடங்கள் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

இதன் படப்பிடிப்பு 2018 ஜூலையில் தொடங்குகிறது.

போலீஸாக பரத் மிரட்டும் காளிதாஸ் பட டப்பிங் பணிகள் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.

இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள்.

பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம்.

சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்.’ என்றார்.

Actor Bharath started his dubbing for Kaalidass movie

சூட்டிங்கே ஸ்டார்ட் ஆகல; ஆனாலும் பிஸ்னஸை ஆரம்பித்தார் சூர்யா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ஹிட்டானால் அதன் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைத்துவிடும்.

படம் ப்ளாப் ஆனாலும் அந்த படத்தை சீக்கிரமே விற்று சின்ன லாபம் பார்த்து விடுவார்கள்.

தற்போது சேனல்கள் அதிகரித்துள்ளதால் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

இதனிடையில் சேனல்களுக்கு இடையே சிண்டிகேட் அமைக்கப்பட்டதால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை சேனல்கள் நிறுத்திக்கொண்டன.

பின்னர் படம் வெளியான பிறகே சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் என அறிவித்தன.

இருந்த போதிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள படங்களை ரிலீசுக்கு முன்பே வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஹிந்தி ரைட்ஸ் மூலம் பெரும் தொகை கிடைத்து வருகிறது.

லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் ரூ. 20 கோடிக்கு விலைபோயிருக்கிறதாம்.

இந்த படத்தின் சூட்டிங் தொடங்கவே இன்னும் 2 மாதங்கள் உள்ளன என்பதுதான் இங்கே கவனித்தக்கது.

Suriya 37 movie hindi satellite rights sold out for huge price

காதலருக்கு குட் பை சொல்வது ரொம்ப கொடுமை.; ஸ்ருதி ஃபீலிங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலின் மகள் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வருகிறார்.

இந்த காதலுக்கு உலகநாயகனும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்கள் முன்பு மைகேல் சென்னை வர, இருவரும் மிக நெருக்கமாக இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் ஸ்ருதிஹாசனுடன் தங்கியுள்ளார்.

அதன்பின்னர் அவர் மீண்டும் லண்டன் சென்றுவிட்டு “ஒவ்வொரு முறையும் இங்கிருந்து புறப்படும் போதும் நான் மிக சோகமாகிவிடுகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

அதற்கு ஸ்ருதி எப்படி பதிலளித்துள்ளார் தெரியும்மா..?

“நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை விமானத்தில் அனுப்பிவிட்டு குட் பை சொல்வது கொடுமையானது” என பதிவிட்டுள்ளார்.

Shrutihassan tweet about her lover Michael Corsales feelings

shruti haasan‏Verified account @shrutihaasan
The yucky feeling of saying goodbye to someone at the airport when you really want them to stay

More Articles
Follows