விஷாலை அடுத்து விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள காளி படம் மே 18 ரிலீஸாகிறது.

இதனையடுத்து
திமிரு பிடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இப்படத்தை இயக்குகிறார்.

இதன்பின்னர் ‘கொலைகாரன்’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார்.

‘கொலைகாரன்’ படத்தில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது

ரஜினி வாய்ப்பளித்தும் மறுத்த எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று மரணமடைந்தார்.

இவர் இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

ரஜினி நடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .

குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளவர்.

இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இவர் பேசியதாவது…

என் நெருங்கிய நண்பர் பாலகுமாரன்.

சில மாதங்களுக்கு நாங்கள் சந்தித்து நிறைய பேசினோம்.

பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதினார்.

அதன் வெற்றிக்கு பின்னர் முழு நேர சினிமாவுக்கு அழைத்தேன்.

ஆனால் இலக்கியம் தான் என் உலகம். சினிமா வேண்டாம். பணம் புகழை மறுத்தார்.” என்றார் ரஜினிகாந்த்.

பாகுபலி தந்த ராஜமௌலியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவே பெருமைப்பட்டு கொள்ளும் வகையில் பாகுபலி படத்தை இயக்கி விருந்து படைத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இதன் இரண்டும் பாகங்களும் உலகளவில் மாபெரும் வசூலை ஈட்டியது.

இப்படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் தன் அடுத்த படத்தில் இயக்கவுள்ளார் ராஜமவுலி.

இப்படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் முக்கிய நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகையர் திலகம் படத்தின் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ராஜமவுலியும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பெருமையாக குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh may join with Rajamouli for his next project

விஸ்வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதியுடன் அஜித்; டைரக்டர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்தது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மீண்டும் அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் இணைந்தார் அஜித்.

விஸ்வாசம் என்று தலைப்பிடப்பட்ட அந்த படத்தின் சூட்டிங் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இமான் இசையமைக்க, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம் அஜித்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்குவார் என்றும் அல்லது என்னை அறிந்தால் பட இயக்குநர் கௌதம்மேனன் இயக்குவார் எனவும் தவல்கள் தெரிவிக்கின்றன.

After Viswasam movie Ajith plans to join again with Sathyajothi movies

பைரசியுடன் தொடர்பு..? வதந்திகளை மறுக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை சீர் குலைக்கும் அரக்கனாக உருவெடுத்துள்ளது ஆன்லைன் பைரசி.

இதில் முக்கிய இணையதளங்களான தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகியவற்றை தடுக்க முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா.

இந்நிலையில், இந்த இணையதளங்களை நடத்துவது சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா என்றும், அது விஷாலுக்கு தெரியும் என சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு லைகா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்… “லைகா நிறுவனம் ஆன்லைன் பைரசியை ஊக்கப்படுத்துவதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை.

லைகா நிறுவனத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்ட அந்த இணையதளம் மற்றும் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

திரையுலகிற்கு எல்லா விதத்திலும் நாங்கள் ஆதரவாக இருந்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றொரு பக்கம், தயாரிப்பாளராக உருவெடுத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

தன்னுடன் படித்த கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

அருண்ராஜா காமராஜா ஏற்கெனவே நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் தலைப்பு ‘கனா’ என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தியுள்ள இப்படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows