சூர்யாவுக்கு ஏப்ரல் 21; விஜய்க்கு ஏப்ரல் 25; பக்கா ப்ளானில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவே கண்டிராத வேலை நிறுத்தத்தை அறிவித்து 50 நாட்களாக போராடி பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போது 50 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 20ந் தேதி முதல் படங்கள் ரிலீஸ் மற்றும் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் 62 படத்தின் சூட்டிங்கை வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தொடங்க இருக்கிறார்களாம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

அதுபோல் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் சூட்டிங்கை நாளை ஏப்ரல் 21ல் தொடங்கவுள்ளார் செல்வராகவன்.

இதில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங், சாய் பல்லவி நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைத்து இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

மே 1ல் இசை; ஜீன் 15ல் ரிலீஸ்; இரண்டு தேதிகளை குறி வைக்கும் காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுக்குமே எல்லா மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தன் அரசியல் வருகையை ரஜினி அறிவித்துள்ள பின் காலா படம் வரவிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இப்படத்தை ஏப்ரல் 27ல் வெளியிட இதன் தயாரிப்பாளர் தனுஷ் தீர்மானித்திருந்தார்.

ஆனால் 48 நாட்கள் தமிழ் சினிமாவில் வேலைறிறுத்தம் நடைபெற்றதால் வெளியீட்டுக்கு தயாராகவிருந்த அனைத்து படங்களின் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

அதன்படி காலா படத்தை ஜீன் 15ல் அதாவது ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்.

காலாவை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்யாமல் போனதால் இந்த பட பாடல்களை மே 1 உழைப்பாளர் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Kaala Audio launch and movie release date updates

ஐபிஎல் எதிர்ப்பாளர்களே மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக அதற்கு எதிராக சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அதனால் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் அங்கு நடத்த கோர்ட் அனுமதி தரவில்லை.

இந்நிலையில், கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன.

எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்படுமா? என்று உதயநிதி கேட்டிருந்தார்.

தற்போது ஆர்.ஜே. பாலாஜியும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார்.

“வேலை நிறுத்தத்துக்குப் பிறகு நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும்.

இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா?

இரண்டு தவறுகள் ஒரு நல்ல விஷயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

Will IPL match ban protestors ask apologise to peoples says RJ Balaji

 

சந்தோஷத்தில் கலவரம்: வித்தியாசமான படத்தலைப்பில் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தோஷத்தில் கலவரம் என்கிற வித்தியாசமான படத்தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர்.

தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர். இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம்.

தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார்.

இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார்.

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் .

“ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் ‘என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு, காதல், அன்பு , காமெடி, ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன.

உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய், உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம் “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .

நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்.

இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன், ப்ரியன், எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Santhoshathil Kalavaram movie news and shooting updates

 

உதயநிதி ரூட்டை பாலோ செய்கிறாரா விஜய் ஆண்டனி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் நாயகனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்களை இவரே தன் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெயரில் தயாரித்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக இவர் மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார்.

பொதுவாக எம் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர் உள்ளிட்ட படங்கள் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள்தான்.

அதுபோல் விஜய் ஆண்டனியும் தன் ரூட்டை மாற்றிவிட்டதாக தெரிகிறது.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன் உள்ளிட்ட படங்களை தயாரித்து நடித்து இசையமைத்திருந்தார்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

அண்மையில் வெளியான அண்ணாதுரை படத்தை ராதிகா சரத்குமாருடன் இணைந்து தயாரிந்திருந்தார்.

தற்போது அம்மா கிரிசேயசன்ஸ் டி. சிவா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

Did Vijay Antony follows Udhayanithi route as producer

காலாவுக்கு தடையா.? கிடையவே கிடையாது; கோர்ட் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’.

இப்படத்துக்கு ‘கரிகாலன்’ என டேக்லைன் வைக்கப்பட்டுள்ளது.

‘கரிகாலன்’ என்ற தலைப்பும், அதன் மூலக்கருவும் தன்னுடையது; இந்தப் பெயரை தென்னிந்திய வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன் என்று கூறி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கடந்த வருடமே ஐகோர்ட்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், இதுகுறித்து ரஜினிகாந்த், பா.ரஞ்சித், தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அவர்களும் தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காலாவிற்கு தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chennai High court rejected petition to ban Kaala aka Karikaalan movie

More Articles
Follows