விஜய்யுடன் மோதும் சிம்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தளபதி என பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தையும் வெளியிட இருக்கிறார்களாம்.

முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் மோதுவதால் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் சர்க்கரை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ச்சீட்டிங் செய்தாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தை ஆர்டி ராஜாவின் 24 ஏஎம் ஸடூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து நிவின்பாலி, பிரகாஷ் ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

இதனிடையில் மேலும் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதில் இரண்டிலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை மோகன் ராஜா இயக்கவும், மற்றொரு படத்தை பொன்ராம் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தனது அடுத்தடுத்த படங்களை சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டு வருகிறார் என தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் புகார் தர முடிவு செய்திருக்கிறார்களாம்.

சிவ சிவா… இதெல்லாம் உண்மையா?

மதுரை மக்களை மலைக்க வைத்த ‘மங்காத்தா’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிச்சயமாக இவ்வருடம் அஜித் நடிப்பில் எந்த படமும் வராது.

ஆனாலும் துவண்டு விடாத இவரது தீவிர ரசிகர்கள் எதையாவது செய்து, மற்ற ரசிகர்களை உற்சாகமாக்கி விடுகின்றனர்.

அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படம் மங்காத்தா. அந்தளவு மகத்தான வெற்றியைப் இப்படம் பெற்றது. இது அவரது 50வது படமாகும்.

இப்படம் ரிலீஸ் ஆகி 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் நாளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் காமென் டிபி, ஹேஷ்டேக் க்ரியேட் செய்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

மேலும் மதுரை ரசிகர்கள் 400 அடிக்கு சுவர் போஸ்டர் அடித்து கலக்கி வருகின்றனர்.

இந்த போஸ்டர் காண்பதற்கு சீன பெருஞ்சுவரை போல நீளமாக இருப்பதால், அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்களாம்.

தனுஷ் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடி அமலாபால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து எவரும் எதிர்பாராத வகையில் மீண்டும் ரஜினி-ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

இது கபாலியின் தொடர்ச்சியும் அல்ல. முன் கதையும் அல்ல என்று உறுதியாகிவிட்டது.

இக்கதை முற்றிலும் புதியது எனவும் ரஞ்சித் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் ரஜினி ஜோடி யார்? என கேள்விகள் கோலிவுட்டில் வலம் வர ஆரம்பித்துவிட்டன.

இதில் நாயகியாக அமலாபால் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் வுண்டர்பார் தயாரித்த விஜபி, அம்மா கணக்கு மற்றும் தற்போது தயாராகி வரும் வட சென்னை படங்களில் அமலா பால் தவறாமல் இடம் பெறுகிறார்.

எனவே இதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அட.. கொஞ்சம் வெயிட் பன்னுங்க சார்.. எதுவாக இருந்தாலும் தனுஷ் ட்விட்டரில் அறிவிக்கும் வரை

கமல் மலையாளியா? முதல்வருக்கு எழுதிய லெட்டரால் வந்த குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம்.

இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்… ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து கமல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது…

‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!

‘வேற்று மாநில முதல்வர், தமிழக நடிகரை பாராட்டுவது எவ்வளவு அழகு’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

இதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

திரு.பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.

நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள் – கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்’’ என்று எழுதியுள்ளார்.

தற்போது கமலின் இக்கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரஜினிக்கு தெலுங்கு-கன்னடம்; விஜய்சேதுபதிக்கு இந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘தர்மதுரை’ அண்மையில் வெளியானது.

யுவன் இசையமைத்திருந்த இப்படத்தை பிரபல வில்லன் நடிகன் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்தை பார்த்த கோலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் தனது பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கை சீனுராமசாமியே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்மதுரை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows