தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
எனவே தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு சிம்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மைக்கேல்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்…
சிம்பு வைத்து படம் எடுத்த பிறகுதான் அவரை முழுமையாக தெரிந்துக் கொண்டேன்.
சொன்ன நேரத்திற்கு படத்திற்கு வரமாட்டார். என் மகள் திருமணம் முடிந்த மறுநாள் விருந்து வைத்திருந்தேன். அப்போது மாப்பிள்ளையை கூட கவனிக்காமல் சிம்பு வீட்டிலேயே இருந்தேன்.
சூட்டிங் அழைத்தாலும் அவர் வருவதில்லை. பிறகு பார்க்கலாம் என்பார்.
அவர் படம் என்றால் பைனான்சியர் கூட பணம் தரமறுக்கிறார்.
நான் திருந்திவிட்டேன். என்னை நம்பி என்னிடம் வேலை பார்க்கும் சில குடும்பங்கள் உள்ளது.
அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. என்னை வைத்து படம் எடுங்கள். நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார்.
ஆனால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். என தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்றால் பல மணிநேரம் காக்க வைக்கிறார். அவரால் எனக்கு ரூ 18 கோடி நஷ்டம். கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், அவர் திருந்துவதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
