எம்ஜிஆர் பட விவகாரம்… ரஜினி வழியில் மறுக்கும் விஜய்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனமே எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படத்தை தயாரித்தது.

இப்படத்தை ரீமேக் செய்ய நினைத்த நிறுவனம் 1990ஆம் ஆண்டுகளில் ரஜினிகாந்தை நாடியது.

கால்ஷீட் தருகிறேன் ஆனால் அந்த கதை வேண்டாம் என கூறிவிட்டாராம் ரஜினி.

அதன்பின்னர்தான் பி. வாசு இயக்கத்தில் இந்நிறுவனத்திற்காக உழைப்பாளி படம் உருவானது

தற்போது விஜய் நடித்து வரும் படக் கதையானது எங்க வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக் என்றும் அதே தலைப்பு வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனை மறுத்துள்ள விஜய் 60 படக்குழுவினர் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22) நாங்களே பர்ஸ்ட் லுக்குடன் முறையாக அறிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

அஜித், சூர்யா படங்களை முந்திய சுந்தர் சி பட பட்ஜெட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி. தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘முத்தின கத்திரிக்கா’ ஜூன் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள மிகப்பிரம்மாண்டமான படத்தை இயக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடி என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கலை இயக்குநராக சாபு சிரிலும், ஒளிப்பதிவாளராக திருவும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

‘நான் ஈ’, ‘மஹாதீரா’, ‘பாகுபலி 2’ உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த கமலக்கண்ணன் இப்படத்திலும் பணிபுரிய இருக்கிறார்.

விக்ரமின் ஐ, விஜய்யின் புலி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அஜித், சூர்யாவின் படங்கள் கூட ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி வில்லன்தான் எனக்கும் வேணும்…’ விஜய் வழியில் மகேஷ்பாபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்லாரும் ரஜினியுடன் நடிக்கவிரும்பும் காரணம் என்ன தெரியுமா? அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மட்டுமில்லை.

அதற்கு பல காரணங்கள் உண்டு. பெரிய பட்ஜெட் படம், ஒரே படம் மூலம் உலகளவில் பிரபலம் ஆகலாம்.

அப்படத்தை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் உள்ளிட்டவைகள்தான்.

ரஜினியின் லிங்கா படத்தில் வில்லனாக நடித்த ஜெகதிபாபு, தற்போது பரதன் இயக்கும் விஜய் 60 படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் அக்ஷய்குமார் தற்போது மகேஷ் பாபு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படமாக்கவுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இப்படத்தின் இந்தி பதிப்பில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரினீத்தி சோப்ராவிடம் பேசி வருகிறார்களாம்.

எம்.ஜி.ஆர்-விஜயகாந்த்-சரத்குமார் வழியில் கருணாஸ்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியலையும் சினிமாவையும் பிரித்து பார்த்து விட முடியாது.

அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். சிவாஜி கணேசனும் ஒரு கட்சியை தொடங்கினார். அது என்னவானது என்பது தெரியாது.

தேமுதிக கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.

இவர்களுக்கிடையில் தாயக மறுமலர்ச்சி கழகத்தை பாக்யராஜ் அவர்களும், லட்சிய தி.மு.வை டி.ராஜேந்தர் அவர்களும் நாடாளும் மக்கள் கட்சியை கார்த்திக் அவர்களும் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் அவர்களும் தொடங்கினார்கள்.

தற்போது இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் நடிகர் கருணாஸ்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஆதரவுடன் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் தற்போது இந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறாராம்.

விரைவில் கட்சி குறித்த முறையான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

விஜயகாந்த், சூர்யாவுடன் நடித்த பாலு ஆனந்த் மரணம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி மற்றும் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த்.

இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் இவர்.

இவரை இயக்குனராக அடையாளம் கண்டு கொண்டவர்களை விட நடிகராகத்தான் இவரை பலருக்கு தெரியும்.

இயக்குனர் விக்ரமனனின் நிறைய படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம்.

உன்னை நினைத்து, வானத்தைப் போல உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த ஆனந்த தொல்லை படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

கபாலி இசை தள்ளி போனாலும் மகிழ்ச்சியான செய்தி தரும் தாணு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி டீசர் பரபரப்பு அடங்குவதற்குள் அப்படத்தின் பாடல்கள் குறித்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதன் இசை வெளியீட்டு விழா ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் குடும்பத்தினருடன் ஓய்வில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்ப உள்ளார்.

மேலும் இவ்விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள தாணு, ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு நிகழ்வினை செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

ரசிகர்களின் கேள்விக்கு ரஜினி பதிலளிப்பது போன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? எனத் தெரியவில்லை. ஒருவேளை ஒப்புக் கொண்டால், தங்கள் தலைவரிடம் என்னவெல்லாம் கேட்க நினைத்தார்களோ? அதையெல்லாம் ரசிகர்கள் கேட்டு விடுவார்கள்.

தலைவா… நாங்க ரெடி… நீங்க ரெடியா?

More Articles
Follows