சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு முப்பெரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளில் வெளியிட உள்ளனர்.

இத்துடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ் விருந்தை ரசிகர்களுக்கு அளிக்கப் போவதாக இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு 3வது விருந்தாக சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக சூர்யா படம் திரையிடப்பட உள்ளதாம்.

அதன் முதற்கட்டமாக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ஜீலை 22ஆம் தேதி காலை 11மணிக்கு சிங்கம்3 படம் திரையிட உள்ளனர்.

வைரலாகும் தானா சேர்ந்த கூட்டம் பட சூர்யா ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ்சிவன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளில் (ஜீலை 23ஆம் தேதி) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் சூட்டிங் கடலுரில் நடைபெற்று வருகீறது.

அப்போது சூர்யா பைக்கில் செல்வதுபோல உள்ள காட்சியை படமாக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதை ரகசியமாக படம்பிடித்த ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர, தற்போது அந்த ஸ்டில் வைரலாகி வருகிறது.

மேலும் இடைவேளையின் போது, கடலூர்-பாண்டிச்சேரியில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து பேசினாராம் சூர்யா.

வேலைக்காரன் படத்தின் ஒன்லைன் கதை இதுதானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பல் மோகன்ராஜா இயக்கியுள்ள படம், ’வேலைக்காரன்’.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, பகத் பாசில், ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் பற்றி மோகன் ராஜா தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘அறிவு, ஆதி என்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.

சூழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ என்பதுதான் படத்தின் ஒன் லைன்.” என்றார்.

Sivakarthikeyans Velaikkaran movie online story revealed

ஆட்சியில் தவறு செய்தால் ரஜினியை விமர்சிப்பேன்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டங்களை தெரிவித்து போலீசில் புகார் அளித்தது என்பதை பார்த்தோம்.

எனவே இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஜிஎஸ்டியை நான் எதிர்க்கவில்லை. அதில் சில நெருடல்கள் உள்ளது.

பிக்பாஸை தடை செய்ய முடியாது. அது கலாச்சாரத்திற்கு கேடு என்றால், முத்தக்காட்சியில் நடிக்கும்போது ஏன் யாரும் எதிர்க்கவில்லை.?

முத்தக்காட்சியால் சீரழியாத சமூகம் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்துவிடப் போகிறதா?

என்னை கைது செய்யவேண்டும் என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

சண்டியர் என்ற பெயரை என் படத்திற்கு நான் வைத்தபோது சிலர் எதிர்த்தனர். அப்போது ஆளும் கட்சி ஒன்றும் சொல்லவில்லை.

நான் பெயரை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அதே பெயரில் ஒரு படம் உருவானபோது அதே கட்சித்தான் ஆட்சியில் இருந்தது.

கட்சியும் மக்களும் அதே வேடிக்கைத்தான் பார்த்தார்கள்.

சத்யமேவ ஜயதே என்ற இயக்கத்தின் மூலம் 35 வருடங்களாக நற்பணிகளை செய்துக் கொண்டுதான் வருகிறேன்.

இப்போது ஆட்சியை விமர்ச்சித்து வருவது போல, ரஜினி ஆட்சிக்கு வந்தால் அவரின் தவறுகளை விமர்சிப்பேன்.

நல்லது செய்தால் அதை வரவேற்பேன்.” என்று பேசினார் கமல்ஹாசன்.

Kamal open talk about Bigboss GST Rajini Political Entry

ஆனந்தி ஒரு ராசியான நாயகி… ‘பண்டிகை’ குஷியில் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள பண்டிகை படம் ஜீலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பற்றி நாயகன் கிருஷ்ணா கூறியுள்ளதாவது…

“கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது.

இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம் அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும்.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும்.அன்பு- அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிக பெரிய action ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம்.

இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்து உள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்பது தெரியும்.”பண்டிகை” மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும்.

சித்தப்பு சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குண சித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்பார் என்பது உறுதி. அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை இந்தப் படம் மூலம் நிச்சயம் நிர்ணயித்துக் கொள்வார்.

இசை அமைப்பாளர் R H விக்ரம் பாடல்களில் மட்டுமின்றி, பிண்ணனி இசையிலும் தனது திறமையை வெளி காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்தும் , பட தொகுப்பாளர் பிரபகாரும் படத்தின் உச்க் கட்ட வேகத்துக்கு
உறு துணையாக இருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் தாண்டி அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட சிரத்தை, அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. படத்தை வாங்கி வெளி இடும் auraa சினிமாஸ் மகேஷ் கோவிந்த ராஜுக்கு தோட்டக்தெல்லாம் பொன்னாக்கும் ராசி இருக்கிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ” பண்டிகை” படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப் படும் என்பது நிச்சயம்” என்று குஷியாக கூறுகிறார் கிருஷ்ணா.

தல-தளபதி நாயகியை இயக்கும் ரஜினி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

‘பணக்காரன்’, ‘மன்னன்’, உழைப்பாளி, சந்திரமுகி’ உள்ளிட்ட ரஜினியின் பல படங்களை இயக்கி மெகா ஹிட் அடித்தவர் பி. வாசு.

சமீபத்தில் இவர் இயக்கிய லாரன்ஸின் ‘சிவலிங்கா’ திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்யுடன் மெர்சல் மற்றும் அஜித்துடன் ‘விவேகம்’ ஆகிய படங்களில் காஜல் அகவர்வால் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை உருவாக்கவிருக்கிறாராம் பி.வாசு

More Articles
Follows