விஜய்க்கு ஒரு நியாயம்; நஸ்ரியாவுக்கு ஒரு நியாயமா? இத கேட்பீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‛நேரம்’ ‛ராஜா ராணி, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா.

அதன்பிறகு நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

தனது கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் நஸ்ரியா.

கடந்த வருடம் பிரித்விராஜின் தங்கையாக ‘கூடே’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா. இப்படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்குகிறார்.

இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நஸ்ரியா சிகரெட் பிடிப்பது போல உள்ள படம் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் சர்கார் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போட்டோ வெளியான போது பல எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது நஸ்ரியாவுக்கு எந்த வித எதிர்ப்பும் எழவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Trance movie Nasriya smoking still goes viral

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி & அமலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் விஜயசாந்தி மற்றும் அமலா.

இதில் அமலா நடிகர் நாகர்ஜீனாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.

விஜயசாந்தி அரசியலில் கவனம் செலுத்தினார்.

தற்போது இருவரும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மகேஷ்பாபு நடித்து வரும் சரிலேரு நீகேவரு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் விஜயசாந்தி. இப்படத்தில் நடிக்க 75 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளாராம் விஜயசாந்தி. இவரது ரோல் மகேஷ்பாபுவிற்கு இணையாக இருக்கும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜீ 5-இல் ஹைக் பிரிஸ்டெஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் நடிகை அமலா. தற்போது மீண்டும் கோலிவுட்டில் நடிக்க உள்ளார்.

வியூகம், சைல்ட்வுட் டைரிஸ் போன்ற குறும்படங்கள் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்.

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் எடத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் அமலா ஷர்வானந்த்துக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Actress Vijaya shanthi and Amala re entry movie news

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் “சினம்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

சினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது…

எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் GNR குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் முதல் நாள் முதல் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது. நவமபர் 8 முதல் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைன் செய்கிறார். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.

அம்மா வேடத்தில் நடிக்க முழு தகுதியானவர் நித்யா மேனன் – இயக்குநர் புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் “அம்மா” செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே “பரதநாட்டியம்” மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இந்த களத்தில் 50 சதவீதவெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் “உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்”. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று பட இயக்குநர் பிரியாதர்ஷினி தெரிவித்துள்ளார்

கௌதம் மேனனின் 3 படங்கள்; விக்ரம்-தனுஷ்-வருண் பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரெடியாகி 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்து தற்போது நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விக்ரம், ரித்துவர்மா நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் எனம் கௌதம்மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த 2 படங்களின் வெளியீட்டிற்காக வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ், கௌதம் மேனனுக்கு மிகப் பெரும் உதவிகளைச் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்குப் பிரதிபலனாக ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் நடிக்கும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

இப்படம் 2020 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கும் விஜய் நடிக்காமல் நின்று போன ‘யோஹன்’ படத்திற்கும் சம்பந்தமல்ல என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Vikram Dhanush Varun movies Gautham Menons 3 movies release updates

ரஜினிக்கு ஓகே; சாருஹாசனுக்கு ஏன் கொடுக்கல?; விஜய்ஸ்ரீ விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார்.

நேற்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசு அறிவித்ததில் மகிழ்ச்சி இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் அன்பான வேண்டுகோள் உதிரிப்புக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய “தபெரனா கதெ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான “தேசிய விருது” பெற்றார்.

மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது பெற்றுள்ளார்.

உலகளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர்தான் நடித்து வருகிறார்.

இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறிய செய்ய வேண்டும்.

சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிட வேண்டும் என்பது என்னை போன்ற சினிமா ஆர்வலர்கள்களின் அன்பான வேண்டுகோள்.” என தாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

DhaDha 87 director Vijay Sri request Central Govt to award Charuhassan

More Articles
Follows