குரங்கு பொம்மைக்கு கூட்டமில்லையே பாரதிராஜா…- திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், குமரவேல், பிஎல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்த படம் குரங்கு பொம்மை.

அண்மையில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நல்ல படங்களை தியேட்டர்காரர்கள் ஓட விடுவதில்லை என பாரதிராஜா மற்றும் விதார்த் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாரதிராஜாவின் இந்த பேச்சுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாட்ஸ்அப் பதிவில் கூறியுள்ளதாவது…

குரங்கு பொம்மை நல்ல படம்தான். ஆனால் அதை பார்க்க தியேட்டரில் ஆளில்லையே.

ஒரு காட்சிக்கு 100 பேர் கூட படம் பார்க்க வரவில்லை. நாங்கள் என்ன செய்வது? மக்களை நல்ல படங்களை பார்க்க சொல்லுங்கள்.

ஹீரோ கத்தி வீசுவதைதான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் தியேட்டர்களையே குறை சொல்வது ஏன்?

நல்ல கதைதானே என பாரதிராஜா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தாரா?. குரங்கு பொம்மை படத்தால் எங்களுக்கு நஷ்டம்தான்” என ஆவேசமாக பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

Tirupur Subramaniam questions BharathiRaja in Kurangu Bommai success issue

செப்டம்பரில் விஷாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன்.

இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து, செப். 28ஆம் தேதி மோகன்லால், விஷால் நடித்துள்ள மலையாள படமான வில்லன் படம் வெளியாகிறது.

Thupparivaalan and Villain movies will be release in September 2017

எனக்கும் அரசியலுக்கு சம்பந்தமில்லை.. லாரன்ஸ் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முனி 4 படத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய சென்றார் ராகவா லாரன்ஸ்.

அப்போது நீட் விவகாரம் குறித்து அவர் சொன்ன பதிலை சில ஊடகங்கள் பாஜ கட்சிற்கு காலம்தான் பதில் சொல்லும் அவர்ர கூறியதாக செய்தியை வெளியிட்டு இருந்தனர்.

எனவே இதற்கு விளக்கம் அளித்து ஓர் கடிதம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள். பாஜக பற்றி நான் எதுவும் பேசவில்லை.

சேவையும் ஆன்மிகமும் மட்டும்தான் என பிடித்த விஷயங்கள். அரசியல் என தெரிவித்துள்ளார்.

I am not interested in Politics says Raghava Lawrence

அவரின் கடிதம் இதோ…

தமிழிசையை திட்டிய சூர்யா ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் கல்வி முறையை மாற்ற வேண்டும் எனவும் நீட் தேர்வு தேவையில்லை எனவும் நடிகர் சூர்யா ஒரு கட்டுரையை பதிவிட்டு இருந்தார்.

சூர்யா நீங்க ஆக்டர். டாக்டர் இல்லை என சூர்யாவை கண்டித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தன் கருத்தை தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

எனவே சூர்யா ரசிகர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சித்தார்கள்.

எனவே அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சூர்யா நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து.

அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு.

அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா எப்போதும் உறுதியாக இருப்பார். அகரத்தை பற்றியும், சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.

‘செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்’ என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

“விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்” என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது.

இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், தமிழிசை சவுந்தரராஜனை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Fans club requests fans not to abuse Tamilisai Soundararajan

நாம் தங்கையாக பார்க்கும் அனிதாவை தலித்தாக பார்க்கிறார் ரஞ்சித்… -சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவுக்கு உரிமையேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குநர் அமீர் பேசும்போது… ‘நாம் அனைவரும் அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் ‘தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றார்.

ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட இவர்களின் மாறுபட்ட கருத்துகளால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஞ்சித்தின் கருத்துக்கு மற்றொரு நிகழ்ச்சியில் அது பற்றி பேசினார் சீமான்.

”ரஞ்சித்தின் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. அவரின் கோபம், வேதனை, காயங்களும் எல்லோருக்கும் உள்ளது.

சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.

போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்களது தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார்.
இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.

போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள்தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம்.

இந்த உணர்வைதான் வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார் சீமான்.

Seeman talks about Ranjiths reaction in Anitha death issue

தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து கமல் ஜோசியம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுநாள் வரை பொறுமையாக காத்திருந்த கமல்ஹாசன் அரசியலின் ஆழம் பார்த்திட முடிவெடுத்துள்ளார்.

எனவே விரைவில் அரசியல் களம் காண்பார் என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு கமல் ஜோதிடம் பார்ப்பது போன்ற நிகழ்வு இருந்தது.

அப்போது கமல் ரசிகை ஒருவர் “கிளி ஜோசியம் போல கமல் ஜோசியம் தமிழ்நாட்டில் பிரபலம்.

அதை நம்பி நிறைய பேர் காத்திருக்கிறோம். அந்த ஜோசியத்தில் நீங்கள் ‘ம்ம்ம்ம்ம்’ என்ற வார்த்தை மட்டும் சொன்னால் போதும். மத்த எல்லாம் ரெடி” என்றார்.

அதற்கு பதிலளித்த கமல், “ஏற்கெனவே ட்விட்டரில் நான் பேசுவது பலருக்கு புரியவில்லை என சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கலாம் என்றால் அனைவரும் கையைத் தூக்குங்கள்” என்றவுடன் பார்வையாளர்கள் அனைவரும் கையைத் தூக்கினார்கள்.

இப்படித் தூக்கக் கூடாது என (ஓட்டுப் போடும்போது மை வைக்கும் விரலைக் மட்டும் காட்டியபடி) இப்படித் தூக்க வேண்டும்.

நேரம் வரும் போது இந்த விரலில் மை இருக்கனும். சிந்தித்து ஓட்டு போடவேண்டும். விரலில் மட்டும் கறை இருக்கனும். வேறெங்கும் இருக்கக் கூடாது. அதுதான் நம் எதிர்காலம்” என்றார் கமல்.

Kamalhassan speech about Vote and Future of Nation

More Articles
Follows