தெலுங்கு மொழி பேசப்போகும் குரங்கு பொம்மை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதில் வித்தார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பிஎல்.தேனப்பன் கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்க,
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

இதன் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து சரவணன் கூறியதாவது…

”திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம்.

இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. ‘குரங்கு பொம்மை’ படம் ஒரு அற்புத படைப்பு.

நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்க கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை பாராட்டுவதிலும் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் தவறுவதில்லை.

இந்நிலையில் கமல் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியின் போது விஜய்யின் படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அவர் கூறியதாவது…

ரஜினி சார், விஜய் சார் படங்கள் பார்ப்பேன். ரஜினியின் முள்ளும் மலரும் படம் எனக்கு பிடிக்கும். அவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

விஜய் படங்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். அவர் தற்போது வெற்றிப் பெற்ற நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

அவரும் வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும். இந்தியில் பல வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல தரமான படங்களை செய்கின்றனர்.

நான் சகலகலா வல்லவன் படத்தை செய்தேன். அது கமர்சியல் படம்தான் நல்ல பெயர் கிடைத்தது.

அதுபோல் மூன்றாம் பிறை படத்தில் நடித்தேன். அதுவும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.” என்றார் உலகநாயகன்.

மக்கள் மீது அக்கறையுள்ள ரஜினி-கமல் அரசியலுக்கு வரலாம்… விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் தொடர்பான பிரஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது விஜய்சேதுபதியிடம் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அவர் பதிலளித்தாவது…

மத்திய அரசு நம்மை நசுக்கி கொண்டிருக்கிறது. ரயில் டிக்கெட்டில் நமது தமிழ் மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம்.

நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஏன் நடிகர்களை பார்த்து அந்த கேள்வியை கேட்க வேண்டும். அந்த கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை.

மக்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள ரஜினி, கமல் போன்ற யார் வேண்டுமானாலும் வரலாம்.” என்று பதிலளித்தார் கருப்பன்.

Rajini and Kamal has care for Peoples So they can come to politics says Vijay Sethupathi

டிகே இயக்கத்தில் காட்டேரியாக மிரட்ட வருகிறார் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் டிகே இயக்கத்தில் கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `யாமிருக்க பயமே’.

இதனையடுத்து கவலை வேண்டாம் என்ற படத்தை இயக்கினார் டிகே. ஆனால் பெரும் கவலையை அந்தப்படம் அவருக்கு தந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது 3 வருடத்திற்கு பின்னர் `காட்டேரி’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா சாய் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கும் கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முறட்டு குத்து’ என்ற படத்திலும் ஓவியா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Oviyas next ghost movie Katteri with director Deekay

பில்டப் வேண்டாம்; சாதாரணமான ஆளு நான்… விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா நடித்த ‘கருப்பன்’ படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசியதாவது:

முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போது வரும் அன்புதான் வாழ்க்கையின் ஆதாரம். அதை இப்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறோம்.

என் மனைவியாக தன்யா அழகாக நடித்திருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸ் ஆகும்போது மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற டென்ஷன் இருந்தது.

இது நம் மண் சார்ந்த மக்கள் வாழ்வியலை பற்றிய படம்.

யதார்த்தமான படங்களை விட கமர்ஷியல் படங்களில் நடிப்பது சிரமம்.

10 பேரை அடிக்கும் போது வரும் ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும். அது ரொம்ப கஷ்டம்.

விஜய்சேதுபதி என்பவன் ஒரு சாதாரணமான ஆள். அவனுக்கும் மசாலா படம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவன் அடித்தாலும் 10 பேர் பறந்து விழவேண்டும் என்ற ஆசையுள்ளது.

பல படங்களில் கெஸ்ட் ரோல் வரும்போது தவிர்த்துவிடுகிறேன். ஆனால் அதையும் மீறி அவர்கள் அன்பாக கேட்கும்போது வேறுவழியில்லாமல் நடித்துக் கொடுக்கிறேன்.

தியாகராஜன் குமாரராஜா மாதிரியான இயக்குநரோடு படம் பண்ணுவது சந்தோஷமாக உள்ளது. அது திருநங்கை வேடமா? அல்லது பெண் வேடமா? என்பதை பற்றி இப்போது சொல்ல முடியாது.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

I am ordinary person says Vijay Sethupathi at Karuppan press meet

பிக்பாஸ் 100 நாட்கள் முடியட்டும்; அப்புறம் பேசிக்கிறேன்… ஓவியா திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் நடிகை ஓவியா புகழின் உச்சத்தை தொட்டார் என்றே சொல்லலாம்.

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும் அந்த நிகழ்ச்சியின் 100வது நாள் விழாவில் கலந்துக் கொள்வார் என்பதை பார்த்தோம்.

தற்போது 100 நாட்கள் முடியும் வரை அதை பற்றி அதில் பங்கேற்றவர்கள் பேசக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது.

எனவே 100 நாட்களை கடந்த பின்னர் இந்நிகழ்ச்சி பற்றி மனம் திறந்து தன் ரசிகர்களிடம் பேசப் போகிறாராம்.

இதனை டிவி தொகுப்பாளினி பிரியங்காவிடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

After 100 days of Bigg Boss show i will meet fans says Oviya

More Articles
Follows