தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் ஸ்ரீகாந்த், சந்தானம் ‘நம்பியார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தற்போது விஜய் ஆண்டனி, நிவேதா பெத்து ராஜ் நடித்து வரும் ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நாயகன் நாயகி இருவரும் போலீஸாக நடித்து வருகின்றனர்.
பாத்திமா விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்காக, சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இருப்பதால், நிவேதா பெத்துராஜுக்கும் பயிற்சி கொடுத்த பின் படமாக்கியுள்ளனர்.
மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
