*செக்கச் சிவந்த வானம்* பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாயகிகளாக ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு வெளியிட உள்ளனர்.

There will be change in release date of Chekka Chivantha Vaanam

சீமராஜா-வுடன் இணைந்து ட்விட்டரில் கலக்கும் கடம்பவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் மூன்றாவது படம் ‘சீமராஜா’.

இவர்களது கூட்டணியின் முந்தைய இரண்டுப் படங்களைக் காட்டில் மிகப்பெரிய பொருட்ச்செலவில், பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகியுள்ளது.

சமந்தா ஹீரோயின், சிம்ரன், நெப்போலியன், மலையாள நடிகர் லால் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தை கொண்டிருக்கும் இப்படம், கதைக்களத்திலும் சில வித்தியாசங்களோடு உருவாகியுள்ளது.
*தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன் *
சிவகார்த்திகேயன், பொன்ராம் படங்கள் என்றாலே இப்படி தான் இருக்கும், என்ற இமேஜ் உருவாகிவிட கூடாது, என்பதற்காக இப்படத்தின் கதையை சற்று வித்தியாசத்தை கையாண்டிருக்கும் பொன்ராம், படத்தில் சிவகார்த்திகேயனை தமிழ் மன்னனாக நடிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் சில நிமிடங்கள் வரும் மன்னர் காலத்து எபிசோட்டுக்காக பல கோடிகளை தயாரிப்பு தரப்பு செலவு செய்திருப்பதோடு, சிவகார்த்திகேயனும் தனது உருவத்தை மாற்றி, அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
* யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்? *
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் இடம்பெற்ற அந்த ராஜா கெட்டப் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அந்த ராஜாவின் கதாபாத்திர பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

’கடம்பவேல் ராஜா’ என்ற மன்னராக சிவகார்திகேயன் நடித்திருக்கிறார். அவர் பரம்பரையை சேர்ந்த சீமராஜாவாக மற்றொரு வேடம், என்று சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
* யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன் *
இந்த கடம்பவேல் ராஜா என்ற பெயரை ‘சீமராஜா’ படக்குழு நேற்று இரவு வெளியிட்டது. வெளியான ஒரு நில மணி நேரங்களில் டிவிட்டரில் டிரெண்டாகிய கடம்பவேல் ராஜா, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

’சீமராஜா’ வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி உலகம் மூழுவதும் வெளியாகிறது.

Along with Seemaraja Kadambavel Raja too trending in twitter

நம் தாய்மொழில் கையெழுத்திடுவோம்; நடிகர் ஆரி-யின் அரிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார்.

ஆரி உரை

இந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சஙகம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இதை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

அதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கினார்.

இதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொருப்பாளர் நியமித்து அவர்களுக்கு உதவியாக இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.

அடுத்த நகர்வாக வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்க சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையும் என தெரிவித்தார்.

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி மக்கள் பாதை அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார் நடிகர் ஆரி.

மேலும் நடிகர் ஆரி தனது பேட்டியில், என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை.

என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது.
இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.

நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.

ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன.

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் “ழ” புகழ் திரு. நீலகண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன், ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.

வழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன், ஆரியுடன் இணைந்து கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்த சந்தேகங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது சிறப்பு.

இனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ் சங்கங்கள், ஃபெட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது.

நிகழ்ச்சியில் “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” போஸ்டரை ஆரம்பத்திலிருந்தே தமிழில் கையெழுத்து போட்டு நம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனாட்சி அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது.

எம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என்று கூறி உரை முடித்தார் நடிகர் ஆரி அவர்கள்.

இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர், ஊடக நண்பர்கள், திரைப் பிரபலங்கள், மாணவர்கள் இனி தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.

We must sign in our Mother Tongue says Aari

கலை இயக்குநர் முத்துராஜுக்கு *சீமராஜா* தந்த வெற்றிப்பட உணர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க, சூரி, சிம்ரன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி கலை இயக்குநர் முத்துராஜ் பேசும்போது,

“சீமராஜா படத்தில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார்.

அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸ்-ஆப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.

பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும்.

ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார்.

மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது” என்றார்.

Art Director Muthuraj talks about his working experience in Seemaraja movie

தன்னை அறிமுகப்படுத்தியவரையே அவமானப்படுத்தியவர் கமல்.; சுரேஷ் காமாட்சி சுளீர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம்தான் ‘மரகதக்காடு’.

மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் உள்ளிட்டோர் நடிக்க பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளர்.

ஜெய்பிரகாஷ் இசையமைதுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கேஆர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

“ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன. தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நன்றி.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால், அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு.

எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர்.

தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா, இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன், உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து, இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

நீங்கள் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்யுங்க. வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும்.

அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்தார் டைரக்டர் சுரேஷ் காமாட்சி.

Kamal insulted Raghunathan who introduced him in Cinema says Suresh Kamatchi

அழகான கமலை அழுக்கான சப்பாணி ஆக்கினேன் : பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’.

முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த இசையை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது…

” இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம்.

பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது.

கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது.

இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.

மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் ராஜீவ் கொலை வழக்கில் சிறைப்பட்டு கிடக்கும் ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்.

அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.

Bharathiraja talks about Kamals Sappani character in 16 Vayathinile

More Articles
Follows