நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜோதிகா, விஜயசேதுபதி தவிர மற்ற அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பாடினார்.

பின்னர் மேடையேறிய சிம்பு…

‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.

நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன்” என்று மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார் சிம்பு.

Simbu didnt talk much in Chekka Chivantha Vaanam audio launch

*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுசுக்கு அண்ணனாக சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி.

இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதே நாளில்தான் விஜய்யின் சர்கார் படமும் வெளியாகிறது.

எனவே இரு படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே 3 முறை விஜய் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwali

வெங்கட் பிரபுவின் பார்ட்டியை கைப்பற்றிய சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி’.

இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் ஷாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிவி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

Party movie satellite rights bagged by Sun Tv

*இக்லூ* படம் மூலம் டிஜிட்டல் உலகிற்கு வரும் பரத் மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இந்த தளங்களை பயன்படுத்தி நல்ல நல்ல விஷயங்களை கொடுத்து வருகிறார்கள். இயக்குனர் பாரத் மோகன் (சி.வி.குமார் இயக்கிய மாயவன் படத்தின் இணை இயக்குனர் மற்றும் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் உதவி இயக்குனர்), தற்போது இந்த டிஜிட்டல் உலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நல்ல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவோடு “இக்லூ” என்று தலைப்பிட பட்ட ஒரு ரொமாண்டிக் காமெடி படம் மூலம் தனது பயணத்தை துவங்குகிறார் இயக்குனர் பாரத் மோகன்.

இது பற்றி அவர் கூறும்போது, “இக்லூ” ஒரு நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த ஒரு முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படம். மாயா, இறவாக்காலம், நரகாசூரன் ஆகிய படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்த இசையமைப்பாளர் ரான் ஏதன் யோகன் இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

அவரது நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அஜ்மத் கான் நாயகனாக நடிக்கிறார்.

காட்சியில் சூழ்நிலைகளை உடனடியாக புரிந்து கொண்டு, சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பதால் அவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம்.

மேலும், மாயா உட்பட எல்லா திரைப்படங்களிலும் அவரது முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அஞ்சு குரியன் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் நாயகி, ஏற்கனவே ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். அவரது அழகான தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் சாரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பது தான் அவரை தேர்ந்தெடுக்க முழுமுதற் காரணம்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உதவியாளர் குகன் எஸ் பழனி (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே. (மாரி, மாரி 2 மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை) மற்றும் தாமஸ் குரியன் (ஒலி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

வலைத்தளங்களில் நேரடியாக ரிலீஸாகும் “இக்லூ” படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Igloo movie shooting starts with Pooja

இயக்குநர் ஈ.ராமதாஸ் மகன் ராமபாண்டியன் நிச்சயதார்த்தம்; பாரதிராஜா வாழ்த்து!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர், எழுத்தாளர், இப்போது பிஸியான நடிகருமான ஈ ராமதாஸ் – திலகவதி தம்பதிகளின் மகன் ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம் நேற்று புதன்கிழமை மாலை நடந்தது.

மணமகன் ராம பாண்டியன் ஆஸ்திரேலியாவில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மணமகள் ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி ஆவார்.

சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன், அவரது மனைவி திருமதி செல்வி தியாகராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, கேஎஸ் ரவிக்குமார், சித்ரா லட்சுமணன், கே ரங்கராஜ், மனோபாலா, பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரேஷ் காமாட்சி, சி ரங்கநாதன், நடிகர்கள் எஸ்வி சேகர், வழக்கு எண் முத்துராமன், மயில்சாமி, வையாபுரி, வெங்கட் சுபா உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமணம் வரும் பிப்ரவரி 6, 2019-ல் சென்னையில் விமரிசையாக நடக்கவிருக்கிறது.

Film Personalities at Director E Ramadoss Son Engagement

கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார்.

இயக்குனர் பேரரசு கோப பேச்சு…

“பேய் எல்லாம் பாவம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பேரரசு பேசியதாவது…

மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள்.

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும் என பேசினார்.

இயக்குனர் A.வெங்கடேஷ் பேசியதாவது…

“பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் பையர்ஸ் சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என பேசினார்.

விழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பு.

கதாநாயகன் அரசு, கதாநாயகி டோனா சங்கர் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல், ஒளிப்பதிவாளர் பிரசாந்த், இசையமைப்பாளர் நவீன் சங்கர், எடிட்டர் அருண்தாமஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய தவமணி பாலகிருஷ்ணன், இயக்குனர் தீபக் நாராயணன்.

More Articles
Follows