தமிழ்ராக்கர்ஸ்-தமிழ்கன் அட்மின் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் பூதமாக எழுந்துள்ளது திருட்டு விசிடி விவகாரம்.

திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் வெளியாகும் புதிய படங்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இதில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இரண்டு இணையங்கள் புதுப்படங்கள் ரிலீஸ் படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு வருகிறது.

இந்த இணையத்தள அட்மின்களை கைது செய்துவிட்டோம் என விஷால் அறிவித்தார்.

ஆனால் அதன்பின் அந்த இணையத்தள சம்பந்தப்பட்டவர்கள் அப்படி யாரையும்ம கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.

மேலும், துப்பறிவாளன் படத்தை ரிலீஸ் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என கூறி அதையும் சாதித்து காட்டினர்.

இந்நிலையில் அந்த இணையங்களின் நெறியாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்களை பற்றிய தகவல்கள் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

The person who found Tamil Rocker and Tamil Gun admin will be awarded says Vishal

சிம்பு இயக்கி நடிக்கும் ஹாலிவுட் பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தின் தோல்விக்கு பிறகு தன் அடுத்த படத்தை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிம்பு.

எனவே இந்திய சினிமாவில் யாரும் செய்யாத புதிய முயற்சியாக பின்னணி இசையை முடித்து விட்டு படத்தை படமாக்க போகிறார் என்றும் அந்த படத்திற்கு இடைவேளை இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

இதன்படி இந்த ஹாலிவுட் படத்தை ஆங்கிலத்தில் எடுத்து அதன்பின்னர் இந்திய மொழிகளில் டப்பிங் செய்யவிருக்கிறார்..

அந்த படத்தை அக்டோபர் மாதம் துவங்கி, டிசம்பரில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசை பணிகளை கவனிக்க, எடிட்டிங்கை ஆண்டனி மேற்கொள்ளவுள்ளார்.

இதனையடுத்து ஜனவரியில் மணிரத்னம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Simbus Hollywood movie shooting updates

மெர்சல் டீசர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தில் நடித்துள்ளார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தன் 100வது படமாக தயாரித்துள்ளது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

இப்பட டீசரை எதிர்பார்த்து கடந்த ஒரு மாதமாகவே ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இதன் டீசர் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதாவது அட்லி பிறந்தநாளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அக்கா-தம்பி பாசத்தை சொல்லும் படம் கொஞ்சம் கொஞ்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம்.
வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் ‘கொஞ்சம் கொஞ்சம்’

தன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி.இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு.

இக்கதைக்குள் காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர், மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார்.
ஏற்கெனெவே தமிழில் ‘விருந்தாளி’ படம் இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் திறமைகள் புதுமைகளை ஆதரிக்கவும் ஆராதிக்கவும் தவற மாட்டார்கள். அவர்களை நம்பியே தமிழில் படம் இயக்கியுள்ளதாகக் கூறுகிறார். இயக்குநர்.

படத்தின் நாயகனாக கோகுல், நாயகியாக நீனு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் அப்புக்குட்டி வருகிறார். மேலும் ப்ரியா மோகன், மன்சூர் அலிகான், மதுமிதா, தவசி, சிவதாணு போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.

35 நாட்களில் முழுப்படத்தை முடித்துள்ளது படக்குழு வின் திட்டமிட்ட பணிக்கு சான்று எனலாம்.

பொள்ளாச்சி, தேனி, கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவ்விரு பிரதேசங்கள் வரும் போது காட்சிகள் வெவ்வேறு நிறத்தில் இருக்குமாம்.

படத்துக்கு ஒளிப்பதிவு பி.ஆர் நிக்கிகண்ணன். இவர் ராஜரத்னம் மற்றும் கே.வி.ஆனந்தின் உதவியாளர் .கலை- அபூ சஜன்.

இசை வல்லவன். பாடல்கள் அருண்பாரதி, தேன்மொழிதாஸ் மீனாட்சி சுந்தரம், வல்லவன். படத்தில் 6 பாடல்கள். வருகின்றன.

நடனம்- தீனா. படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை.
மிமோசா புரொடக்ஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே மற்றும் பி.ஆர். மோகன்தயாரித்துள்ளனர்.

அனைவருக்குமான ஒரு படமாக உருவாகியுள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’ வரும் 22-ல் வெளியாகிறது.

சிறை பின்னணியில் மலைவாழ் மக்களை பற்றிய படம் திட்டி வாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’.

இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது.

திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

படத்தை இயக்கியுள்ளவர் எம். பிரதாப் முரளி.
“படம் பற்றி அவர் பேசும்போது. “போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம்.

இது முழுக்க முழுக்க சிறை பின்னணியில் நடக்கும் கதை. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது. ” என்கிறார்.

படத்தில் நாசர் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத் வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ்அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இது தனி ஒருவரின் கதையல்ல. ஒரு விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவு .

ஒளிப்பதிவு ஜி.ஸ்ரீனிவாசன்.
ஹரீஷ், சத்தீஷ், ஜெர்மன்விஜய் என மூவர் இசையமைத்துள்ளனர். பாடல்கள்- நா.முத்துக்குமார், சதீஷ், சிவ முருகன்.

நடனம் -‘தில்’ சத்யா, ராஜு. ஸ்டண்ட், ‘வயலன்ட் ‘வேலு, த்ரில்லர் மஞ்சு.

படம் பற்றி இயக்குநர் மேலும் பேசும் போது “இன்று மக்களிடம் உள்ள பிரச்சினைகளும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. ஆனால் என்றுமே வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் .அது எப்படி சாத்தியம்? சிறு சிறு குழுக்களாக இயங்கும் மக்கள் ஒரே சக்தியாக இணைய வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் என்று படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.

சென்னை , கோத்தகிரி, கேரளா, வயநாடு ,கோவா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

முப்பத்தைந்து நாட்களில் காடு, மலை சார்ந்த பகுதிகளிலேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி தங்கள் தொழில் வேகத்தைக் காட்டியுள்ளது. படக்குழு.

இப்படத்தை ‘கே 3 ‘சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்திருக்கிறார்.

‘திட்டிவாசல்’ படம் செப்டம்பர் 22-ல் திரையரங்கு வாசல் வருகிறது.

வாருங்கள். புதிய யதார்த்த வாழ்வியலைத் திரையில் கண்ட அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

ரஜினியுடன் இணையாமல் இருப்பேனா? அரசியல் கட்சி குறித்து கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பத்திரிகையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

உங்களின் தனிக்கட்சியில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்? என்றனர்.

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களை பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம்.

உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை

அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

மேலும் அரசியல் கட்சி தொடக்கத்தை புரட்சி பிறந்த நாளில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows