மீண்டும் தலைவருடன் மோத ‘வலிமை’யுடன் தயாராகும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 15 வருடங்களாக ரஜினிகாந்த் படங்கள் ரிலீசாகும் போது மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாது. காரணம் ரஜினி படத்துடன் மோதி வசூலை எதிர்பார்க்க முடியாது என்பதே.

ஆனால் சில ஹீரோக்கள் எப்படியாவது ரஜினியுடன் மோதியாக வேண்டும் என காத்திருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் சந்திரமுகி படத்துடன் மோத தன் சச்சின் படத்தை வெளியிட்டார் விஜய்.

அதுபோல் கடந்தாண்டு 2019ல் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீசான போது தன் விஸ்வாசம் படத்தை வெளியிட்டார் அஜித்.

தற்போது மீண்டும் ரஜினி படத்துடன் மோத 2021 பொங்கலுக்கு தயாராகி வருகிறாராம் நடிகர் அஜித்.

அதாவது ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் போது அஜித்தின் வலிமை படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

வலிமை படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு மட்டுமே நியாயம் ஆகாது.. – MS பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருவெண்ணெய்நல்லூரில் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை குடும்ப பகை காரணமாக மனித மிருகங்கள் கொடூரமாக எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும் , அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்?.

ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு?

முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவி பெண் ஜெயஶ்ரீக்கும் , மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும்.

அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு மடங்கு டிக்கெட் கட்டணத்துடன் ரெடியாகும் ஆம்னி பஸ்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் வரும் மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.

தற்போது சில தளர்வுகளுடன் 34 வகையான வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மே 18-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வழிமுறைகளுடன் இருக்கும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். ஆனால் வழிமுறைகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழக அரசு சார்பில் போக்குவரத்து இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பேருந்துக்கள் இயக்கத்துக்கு தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கிமீ ரூ. 1.60 இருக்கும் கட்டணம் ரூ. 3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பேருந்து பயணிகள் அமர வைக்க வேண்டும் என்பதாலும், சுங்க கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

த்ரிஷாவுக்கு பிடித்த 3 ஹீரோக்கள் இவர்கள் மட்டும்தானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் தெரிவித்தார்.

அப்போது தனக்கு பிடித்த 3 ஹீரோக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன்.

2வதாக மலையாள நடிகர் மோகன்லாலையும், 3வதாக பாலிவுட் நடிகர் அமீர்கானையும் பிடிக்கும் என த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

கமலுடன் தூங்காவனம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

தற்போது மலையாளத்தில் மோகன்லாலின் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

மோடி அறிவித்த 20 லட்சம் கோடி கார்ப்பரேட்டுக்கு போனால் அவ்வளவுதான்.. – ‘ஆடவர்’ தயாரிப்பாளர் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரானாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு இருக்கிறது நான்காம் கட்ட ஊரடங்கில் என்ன செய்யபோகிறது இந்திய அரசு தெரியவில்லை …

பொருளாதாரம் வளர்ச்சி பெற இருபது லட்சம் கோடி திட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் திரு மோடி அவர்கள் கூறியுள்ளார் அந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனளிக்க கூடியவகையில் இருக்க வேண்டும் …

பணக்காரர்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்க கூடாது …

இன்றைக்கு இருந்த காசுகளை செலவு செய்துவிட்டு பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது அவர்கள்தான் அவர்கள் கைகளில் காசு புழங்கினால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெரும் …

பணக்காரர்களிடம் அந்த பணம் போனால் பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிவிடும்….

சொ. சிவக்குமார் பிள்ளை

தலைவர்

மக்கள் செயல் பேரவை

Attachments area

BREAKING டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி.; மக்களே நீதி மய்யமாக மாறனும்..- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.

இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.

இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.

ஆனால் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.

ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில்…

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

என பதிவிட்டுள்ளார்.

Supreme Court granted permission to open Tasmac shops Kamal condemns Court order

More Articles
Follows