தமிழ் ராக்கர்ஸில் 2.0 ரிலீஸ்.?; நாங்க அப்படி சொல்லவே இல்லையே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பு ஏற்ற பின்னரும் இவர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த தளத்தை இயக்குபவர் யார்? எங்கிருந்து செயல்படுகிறார்கள்..? என்பதை அறியாமல் திரையுலகமே தவித்து வருகிறது.

சமீபத்தில், விஜய் நடித்து தியேட்டர்களில் வெளியான ‘சர்கார்’ படத்தை அன்றே வெளியிட்டனர்.

அதுபோல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘2.0’ படத்தையும் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டது.

2.0 திரைப்படம் கிட்டதட்ட ரூ. 550 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால்
இது, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

‘‘சமூக வலைதளங்களில் நாங்கள் இல்லை. எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே.” என தெரிவித்துள்ளனர்.

Tamil Rockers refuses that They didnt tweet about 2pointO release

*மெரினா புரட்சி* பட புகழ் எம்.எஸ். ராஜ் இயக்கும் *உறங்காப் புலி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது தமிழகமே ஏன் உலகமே எதிர்பாராத வகையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் எந்த ஒரு தலைவனும் இல்லாமல் இளைஞர்கள் தானாகவே முன்வந்து ஜல்லிக்கட்டு புரட்சியை ஒழுக்கமான முறையில் 2 வாரங்கள் நடத்தினர்.

தற்போது இந்த மெரினா புரட்சி பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இந்த ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இதன் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Marina Puratchi directors next movie titled Uranga Puli

*செய்* படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் செய்த *திமிரு புடிச்சவன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு.

‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதன் போது, படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா , நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் நக்குல் பேசுகையில், ‘இந்த படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்த படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம்.

அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும்.

ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம்.

நாங்கள் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காக காத்திருந்தோம்.

அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காக காத்திருந்தோம். நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம்.

அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள்.

நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

அதற்காக யாருடைய மனதும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம். ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று படம் வெளியாகும்.

ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்த தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.

இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.

எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.’ என்றார்.

படத்தின் நாயகி அன்ஷால் முன்ஜால் பேசுகையில்,‘இந்த படம் திரில்லர் ஜேனர் என்றிருந்தாலும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவதை பெருமிதமாக கருதுகிறேன்.’ என்றார்.

தயாரிப்பாளர் மன்னு பேசுகையில்,‘ நான் தமிழ் திரையுலகிற்கு புதிய தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கிறது.

அவர்களின் இந்த ஒத்துழைப்பிற்காக நாங்கள் எங்களுடைய படக்குழுவினரின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆதரவுடன் திட்டமிட்டப்படி ‘செய் ’படம் நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.’ என்றார்.

Sei movie release introuble because of Thimiru Pudichavan clash

டாப் ஹீரோக்களுக்கு சம்பள பாக்கி; 96 பட நிறுவனத்திற்கு ரெட் கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ ஜூலியட், கத்திச் சண்டை, வீர சிவாஜி, துப்பறிவாளன், 96 உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் மெட்ராஸ் என்டர்பிரைசஸ். இதன் உரிமையாளராக நந்தகோபால் உள்ளார்.

நடிகர்களுக்கு சம்பளம் பாக்கி வைத்திருப்பதால் இந்த நிறுவனத்திற்கு நடிகர்கள் யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

“மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” தயாரிப்பான “துப்பறிவாளன்” என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் விஷால் அவர்கள் நடித்தமைக்காகவும், “வீரசிவாஜி” என்ற திரைப்படத்தில் விக்ரம்பிரபு அவர்கள் நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் “96” என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய்சேதுபதி அவர்கள் ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.

மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.

படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள்.

ஆனால் அந்நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது.

கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.

அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் / தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி!
தென்னிந்திய நடிகர் சங்கம்

Red card for Madras Enterprises Nandha Gopal

வினோத் இயக்கும் படத்தில் வக்கீல் கேரக்டரில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் இன்றோடு நடைபெற்றது.

இப்படத்தை அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

விரைவில் வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் – டாப்சி நடித்து வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது.

இதில் அமிதாப்பச்சன் நடித்த வக்கீல் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Actor Ajith as Lawyer in Vinoth direction

சர்கார் குறித்து விஜய்யிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது இதுதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்கார் பிரச்சினையும் அதன் பின்னர் மறுதணிக்கை செய்யப்பட்டு படம் திரையிடப்பட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“அண்மைகாலமாக வெளியாகும் பல திரைப்படங்கள் அரசை விமர்சித்து வந்திருக்கின்றன; அவற்றை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.

சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன்.

பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டது.

தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது.

தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது” என கூறினார்.

More Articles
Follows