பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவிபப் CEO செந்தில்குமார், க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன், Knock ஸ்டுடியோஸ் நிர்வாகி கல்யாணம், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது கரங்களால் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும் பரிசுத்தொகையையும் வழங்கினார்கள்.

இந்த குறும்பட போட்டியில் ‘கல்கி’யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெற்றார்.

அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது…

இவருக்கு அடுத்ததாக ‘கம்பளிப்பூச்சி’ இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம்’ குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம் ,குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் ‘மயிர்’ குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் பேசும்போது, “இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி.. நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாக கூட தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

சீசன்-3 இதைவிட பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.

மேலும் இந்த குறும்படங்களை பார்த்து சரியான நேரத்தில் சென்சார் செய்து சான்றிதழ் தர ஒத்துழைத்த சென்சார் அதிகாரி லீலா மீனாட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்ட ராஜசேகரன், முன்பெல்லாம் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்துவிட்டு குறித்த நேரத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவது கொஞ்சம் கடினமாக இருந்தது.

இப்போது லீலா மீனாட்சி வந்தபிறகு, திரையுலகினர் தைரியமாக எங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடிகிறது என பாராட்டினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒரு படம் எடுப்பது .சுலபம்.ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி.

இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன்.. இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம்..

ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும்நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள் .

நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன்.. ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே உடனே .சரிசெய்து விடவேண்டும் எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார்.

அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும்.

கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான்.

பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்.. 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட்.. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம்.

எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள் ..இந்த மார்க்கெட் ஒப்பனனானது.. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்..

இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என கூறினார் சூர்யா.

நீங்க செய்றது சரியில்ல; பொதுமேடையில் ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட சூர்யா பரிசுகளை வழங்கினார்.

அப்போது சூர்யா ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் என்ஜிகே என்ஜிகே என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.

என்ஜிகே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போவதால், ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

தீபாவளிக்கு என்ஜிகே ரிலீஸ் இல்லை; சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

ரசிகர்கள் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்ட இருந்ததால்.. இது நம்ம நிகழ்ச்சியில்லை. மற்றொரு நிகழ்ச்சி. அங்கே நம்மை பற்றி நம் படத்தை பற்றி பேசுவது சரியில்லை. நீங்கள் இப்படி செய்வது சரியா படல.” என்றார்.

மேலும் பேசும்போது… “இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது.

சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்.

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா

*ராமர் பாலம்* படத்திற்காக காதலர்கள் கட்டிய பாலம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்ணன் மாரியப்பன் மற்றும் M.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக ‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது.. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள்.. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை.. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது.. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நீண்டநாளாக இப்படி ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அந்தப்பகுதியில் உள்ள இரண்டு ஊர் மக்களின் விருப்பமாக இருந்ததாம்.. இந்தப்படம் எடுத்து முடிக்கவும், அங்கே பாலம் கட்டி முடிக்கவும் சரியாக இருந்ததாம்..

விக்ரமனிடம் துணை இயக்குனராக இருந்தவரும் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்கிற சூப்பர்ஹிட் பாடலை எழுதியவருமான கலைக்குமார் பாடல்களை எழுதியுள்ளார் கம்பம் கர்ணா, கவி பாஸ்கர் ஆகியோரும் இதில் பாடல்களை எழுதியுள்ளனர். கோபால் இசையமைத்துள்ளார். ஆனந்த் சரவணன்-காளிமுத்து இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, .பி.செல்வமணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

போஸ்ட் புரொடக்சன் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தப்படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது.

*அவளுக்கென்ன அழகிய முகம்* சூட்டிங்கில் பாதியில் ஓட்டமெடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகியமுகம்,பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர்.. மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால்

பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ்.. மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர்.. யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு விட்டார்..இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள்..அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர்..பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்…”அவளுக்கென்ன அழகியமுகம்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது..

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் போட்டோ கிராபராக நடித்தார்.

தற்போது 96 படத்தில் விஜய்சேதுபதியும் போட்டோ கிராபராக நடிக்கிறாராம். அதன் விவரம் வருமாறு..

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்

இசை – கோவிந்த் மேனன்

எடிட்டிங் – கோவிந்தராஜ்

கலை – வினோத் ராஜ்குமார்

பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார் இயக்குனர் C.பிரேம்குமார்.

படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

கவிஞர் அறிவுமதி வெளியிட்ட அமெரிக்கத் தமிழரின் *என் செடி உன் பூக்கள்* கவிதைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டல்லாஸ் : அமெரிக்கத் தமிழர் முனைவர். சித்ரா மகேஷ் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘உன் செடி என் பூக்கள்’ புத்தகத்தைக் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், கால்டுவெல் வேள்நம்பி மற்றும் அருண்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

அமெரிக்கத் தமிழர்களின் மொழி இன உணர்வுகளையும் அது சார்ந்த தமிழ் விழாக்களையும் பாராட்டிய கவிஞர்.அறிவுமதி, இத்தகைய தமிழ்ப் படைப்புகளும் இந்த மண்ணிலிருந்து வெளி வரவேண்டும். முனைவர். சித்ரா மகேஷின் கவிதைத் தொகுப்புக்குப் பாராட்டுகள். மேலும் பல படைப்புகளை அவர் படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும் போது, அமெரிக்காவில் தமிழுக்கு இத்தகைய வரவேற்பும், சிறப்பும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முனைவர்.சித்ரா மகேஷின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும். அவர் மென் மேலும் பல படைப்புகளும், இந்த மண் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் படைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ் விழா வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி, முனைவர். சித்ரா மகேஷின் திருக்குறள் அறிவு, எழுத்தாற்றல், தமிழ்ப் பணிகள் குறித்து விவரித்து வாழ்த்தினார். ஃபெட்னா தொழில் முனைவோர் கருந்தரங்க ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

‘இத்தகைய பெருமை மிக்க மேடையில், என் முதல் நூலைப் பெரும் மதிப்பிற்குரியவர்களான கவிஞர். அறிவுமதி வெளியிட எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, எனது வாழ்வில் முக்கியமானதாகும்.

வாழத்துரை எழுதிய அன்பு அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இதயப்பூர்வமான நன்றி. உற்சாகப்படுத்தும் பதிப்பாளர் பரிதிக்கும் நன்றி’ என்று உணர்ச்சிமயமானார் முனைவர். சித்ரா மகேஷ். மேலும், தமிழ் விழாக் குழுவினருக்கும், கருத்தரங்கக் குழுவினருக்கும், நூலை வெளியிட வாய்ப்பளித்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமாருக்கும் நன்றி கூறினார்.

பரிதி பதிப்பகத்தின் சார்பில் ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள் புத்தகத்தைப் பதிப்பாளார் பரிதி வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகளை ஆதரிக்கும் வகையில், ஃபெட்னாவின் தொழில் முனைவோர் கருத்தரங்கத்தில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது.

En Sedigal Un Pookkal book written by Dr Chitra Mahesh and released by Poet Arivumathi

More Articles
Follows