அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா கார்த்தி.?.; குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரித்விராஜ், பிஜுமேனன் இருவரும் இணைந்த அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.

இதன் ரீமேக்கில சரத்குமார் – சசிகுமார் இருவரும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது.

பின்னர் சசிகுமார் – ஆர்யா என சொல்லப்பட்டது.

ஆனால் ஆர்யா இதில் நடிக்கவில்லை என மறுத்துவிட்டார்.

இப்போது அண்ணன் தம்பியான சூர்யாவும் கார்த்தியும் இதில் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது-

ஆனால் இவர்களின் தரப்பும் இதை மறுத்துள்ளது.

இதனால் கோலிவுட் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த யூகங்களுக்கு விரைவில் கதிரேசன் முடிவு கட்டுவார் என நாம் நம்பி காத்திருப்போம்.

டிவி சூட்டிங்கு அரசு அனுமதி விவகாரம்..: SV சேகர் & குஷ்பூ மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கம் தற்போது வரை அமலில் இருந்தாலும் சில தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை, 60 பேருடன் துவக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது.

திருமணத்திற்கு 50 பேர், இறுதிச்சடங்குக்கு 50 பேர் அரசு அனுமதிள்ளது.

ஆனால் சினிமாவுக்கு 60 பேரை அனுமதிக்கலாம் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘டிவி படப்பிடிப்பில், 10 வயதுக்குள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என, அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா’ என, நடிகர் எஸ்.வி.சேகர் ‘டுவிட்டரில்’ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நடிகை குஷ்பு, ‘சார், இதில் எந்த வயதிலும் நீங்கள் வர மாட்டீர்கள். கவலைப்படாமல் ஓய்வெடுங்கள்’ என, கூறி கிண்டலடித்து உள்ளார்.

அதன் பின்னர் எஸ்.வி. சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர்களின் உரையாடல் இதோ…

எஸ்வி. சேகர்… : இன்றய சூழலில் தொலைக்காட்சித்தொடரில்10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்ற கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா

குஷ்பு…: Sir you don’t fit in any of the age group. So you can relax.

எஸ்வி. சேகர்… : Thank u very much for ur concern. I am coming under above 60 group. (26-12-1950). Ok. Now answer my Question

குஷ்பு…: Story and screenplay is done by us and not the govt Sir.. they cannot decide on actors..may god bless you with a long and healthy life.. my love to all at home.

இசைஞானியே வெண்பா இயற்றிய தமிழ் ஞானியே; சீனுராமசாமி வாழ்த்துப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி பிறந்த நாள் வாழ்த்தை கவிதையாக கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்திற்கு இணைந்து பணி புரிந்து வருகின்றனர்.

இசைக்கு
ஒரு வாழ்த்துப்பா…
………………………………………..

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே

உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது

கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன

அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது

தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது

உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்

உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது

உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்

நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது

இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது

எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…..

இயக்குனர் சீனுராமசாமி

Seenu Ramasamys birth day wishes to Isaignani Ilayaraja

ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திரைத்துறையில் என்றும் மங்காத சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாலிவுட் என அனைத்திலும் பல சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருக்க ரஜினியோ எவரும் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

கோலிவுட்டில் ஜெய்சங்கர், சிவகுமார் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.

கமல், ராமராஜன், மோகன் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

விஜய், அஜித் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

தனுஷ் சிம்பு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி காலத்திலும் ரஜினியே சூப்பர் ஸ்டார்.

எனவே தான் அவரை பாலிவுட் கான்களே தலைவா என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி பாடல்கள், படங்கள், ரஜினி பற்றி செய்திகளுக்காகவே பிரத்யேகமாக ரஜினி 70 என்ற டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் மலேசியாவில் தன் ஒளிப்பரப்பை நேற்று ஜீன் 1 முதல் தொடங்கியுள்ளது.

இந்த சேனலின் நம்பர் 100 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரஜினியே தன் கட்சிக்காக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ரஜினி டிவி, தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த சேனலின் ஓரிரு காட்சிகள் இதோ….

Rajini 70 TV channel will be available on Astro CH100

ஜூன் 1 முதல் பேருந்து ஓட அனுமதி; தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்கள் எவை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் இன்று ஜீன் 1 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது பேருந்து போக்குவரத்தை நாளை முதல் செயல்படுத்தும் பொருட்டு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

மண்டலம் 1:

* கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்

மண்டலம் 2:

* தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

மண்டலம் 3:

* விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

மண்டலம் 4:

* நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

மண்டலம் 5:

* திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

மண்டலம் 6:

* தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி

மண்டலம் 7:

* காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு

மண்டலம் 8:

* சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இவற்றில் மண்டலம் 7 மற்றும் 8 ஆகியவற்றை தவிர்த்து மற்ற மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7, 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கலாம். பேருந்துகளின் மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. (ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் செய்ய இ பாஸ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தடை தொடர்கிறது. பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்க நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு தனியாக வெளியிட உள்ளது. இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்….

தமிழகத்திற்குள் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு இ-பாஸ் பெற http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . ரயில் டிக்கெட் எடுத்த பிறகு இணையதளத்தில் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்யும் போது பிஎன்ஆர் நம்பர் கேட்கப்படுகிறது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு பஸ் இல்லை; எச்சில் துப்பினால் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 68 நாட்களாக பொது முடக்கம் அமலில் இருந்தது.

தற்போது இன்று ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொது பேருந்து போக்குவரத்து கிடையாது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.

பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கள் இல்லாமல் ஆட்களை அழைத்து செல்லும் நிகழ்வுகளில், குடியிருப்பு நலச்சங்கங்கள், கட்டுமான சங்கங்கள் போன்றவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

நகர பஸ்களில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்களை வழங்க வேண்டும். பஸ்கள், பாஸ் வழங்கும் இடங்களில் ‘கியூஆர் கோர்ட்’ பேனல்களை வைத்து அவற்றை வைத்து டிக்கெட், பாஸ்களை வழங்கலாம்.

இந்த வசதிகள் இல்லாத பயணிகளுக்கு மட்டும் டிக்கெட்களை வழங்க வேண்டும். பஸ் புறப்படும் முன்பும், வந்து சேர்ந்த பின்பும் சுத்தமாக கழுவப்பட வேண்டும்.

பயணிகள் பின்பக்க வாசல் மூலம் ஏறவும், முன்பக்க வாசல் மூலம் இறங்கவும் வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் வசதிக்காக ‘சானிடைசர்’ வைக்கப்பட வேண்டும்.

ஏ.சி. எந்திரங்களை பஸ்களில் இயக்கக் கூடாது. எந்த இருக்கையில் பயணி உட்கார வேண்டும், எது காலியிடமாக வைக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பஸ் ஓட்டுனர், நடத்துனரின் உடல்வெப்பத்தை தினமும் சோதிக்க வேண்டும். முககவசம், கையுறையை அணிய வேண்டும். பஸ்சில் ஏறும்போது பயணிகளை முககவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.

‘லைன்’ பரிசோதனை ஆய்வாளர்கள், பஸ் நிறுத்தங்களில் அமர்த்தப்பட்டு, பயணிகள் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் ஏறுகிறார்களா? போதிய ‘சீட்’ வசதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயணிகள் கண்டிப்பாக வாய் மற்றும் மூக்கை முககவசம் அல்லது துணியால் மூடியிருக்க வேண்டும். ஒரு பஸ்சில் இருக்கைகள் இல்லாவிட்டால் பயணிகள் அடுத்த பஸ்சுக்கு காத்திருக்க வேண்டும்.

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் யாரும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பஸ் நிறுத்தங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பஸ் முனையம் மற்றும் நிறுத்தங்கள் ஒரு நாளைக்கு 2 முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows