தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சூர்யாவின் 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இதில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் உருவாகுகிறது.
சூர்யா 42வது பட மோஷன் போஸ்டர் 09-09-2022 அன்று வெளியானது.
3டி டெக்னாலஜியில் இப்படம் உருவாகி வருகிறது. சரித்திர கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் முட்டுக்காடு என்ற இடத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கியது. பின்னர் கோவா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்பட அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.
இந்தப் படம் தொடர்பான ஷூட்டிங் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகின.
இந்த நிலையில் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்… “இப்படத்தை ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உருவாக்கி வருகிறோம். எனவே இந்த படம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை யாரும் வெளியிட வேண்டாம்.
மீறி வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். படம் தொடர்பான வீடியோக்களை நீங்கள் வெளியிட்டிருந்தால் உடனே உங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கி விடவும்” எனவும் அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
