தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ என்ற மாபெரும் படைப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் சூர்யா ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க கடுமையாக பயிற்சி எடுத்துவருகிறார்.
அவர் தனது பயிற்சியாளருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் பழங்கால போர்வீரராக நடிப்பதால் அவரது தோற்றம் மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
கடைசியாக ‘7 ஆம் அறிவு’ (2011) படத்திற்காக சூரியா சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
