ஸ்ரீ பிரியங்காவின் ‛மிக மிக அவசரம்’ பட ரிலீஸ் தேதி இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

இதில் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சீமானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் போலீஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் 2௦௦ பெண் காவலர்களுக்கு இப்படத்தை திரையிட்டு காட்டியிருந்தார் சுரேஷ் காமாட்சி.

படம் எப்போதோ ரிலீசுக்கு தயாரானாலும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 11ல் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sri Priyankas Miga Miga Avasaram movie release date is here

கவர்ச்சியில் கலக்கிய சோனாவின் அடுத்த அதிரடி ‘பச்ச மாங்கா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐட்டம் டான்ஸ், கவர்ச்சி, குணச்சித்திர கேரக்டர் என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனா.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மலையாளத்தில் தயாராகும் பச்ச மாங்கா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

பல படங்களில் இவர் படு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் இந்த பச்ச மாங்கா படத்தில் அடக்கமான இல்லத்தரசியாக நடித்திருக்கிறாராம்.

இவரின் ஜோடியாக பிரபல நடிகர் பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார்.

Actress Sonas new malayalam movie titled Pacha Manga

நடிகர் சதீஷ் திருமண நிச்சயத்தார்த்தம்; மணப்பெண் யார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் காமெடி நடிகர் சதீஷ்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் பெண் தேடும் படலம் நெடுநாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவரின் மகளை தான் அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாம்.

Comedy Actor Sathish engagement

தயாரிப்பாளராகிறாரா காமெடி நடிகர் யோகி பாபு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இன்றைய டிரெண்ட் காமெடி நடிகர் யார் என்றால் அது யோகி பாபுதான்.

இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

தற்போது ரஜினியுடன் ‘தர்பார்’, விஜய்யுடன் ‘பிகில்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இவரே தயாரிப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் இந்த செய்தியை யோகி பாபு மறுத்துள்ளார்.

ஒரு படம் தயாரிக்கணும் என நான் நினைக்கவில்லை. அந்தளவு நான் இன்னும் வளரவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.

Will Comedy actor Yogi babu going to produce movies

‘நாடோடிகள் 2’ அதிர்வலையை உண்டாக்கும்… சமுத்திரக்கனி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரகனி, சசிகுமார் இணைந்துள்ள நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது

முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா இதிலும் நடித்துள்ளார்கள் இவர்கள் தவிர அஞ்சலி, அதுல்யா, திருநங்கை நமீதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் சமுத்திரகனி பேசியதாவது…

போராளி படத்திற்கு பிறகு நானும், சசிகுமாரும் தனித்தனி பாதையில் பயணம் செய்தோம்.

நாடோடிகள் 2ம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கதை தயார் செய்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

சரியான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளறது.

இன்றைய அரசியல் அவலம், சமூக சூழல் என எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கிறது. நிச்சயம் இந்த படம் அதிர்வலைகளை உண்டாக்கும்.

7 பேர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் பெயரில் அஞ்சலி, சமூக போராளியாக நடித்திருக்கிறார்.

சசிகுமார் ஜீவா என்கிற போராளியாக நடித்திருக்கிறார். திருநங்கை நமீதா வழியாக அந்த மக்களின் வேதனைகள் சொல்லப்படுகிறது.”

என பேசினார் சமுத்திரக்கனி.

Samuthirakani talks about Nadodigal 2 and team effect

பிகில் விழாவை சரியாக பயன்படுத்தி கொண்டார்.; விஜய்க்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மாலை சென்னையில் பிகில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பன்ச் டயலாக், பாட்டு, அட்வைஸ், அரசியல் என அதிரடி செய்துவிட்டார் விஜய்.

மேலும் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ பற்றியும் பேசினார்.

அதாவது பேனர் வைக்க சொன்ன குற்றவாளியை அரெஸ்ட் செய்யாமல் லாரி டிரைவரை கைது செய்தமையை கண்டித்தார்.

இதுவே இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளானது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இந்த பேச்சு குறித்து பேசினார்.

அதில் பிகில் இசை வெளியீட்டு விழாவை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் என பாராட்டியுள்ளார் விஜய்.

Kamal wishes Vijay for his speech in Bigil audio launch

More Articles
Follows