மன்னன்-படையப்பா படத்துடன் விஐபி2 கனெக்ட்.? சௌந்தர்யா ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், கஜோல் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் நடைபெற்று வருகின்றனர்.

அப்போது சௌந்தர்யா பேசியதாவது…

வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டருக்கு கஜோல் மேடம் பிட்டாக பொருந்தியுள்ளார்.

’மன்னன்’ பட விஜயசாந்தியையும் ’படையப்பா’ பட நீலாம்பரி கேரக்டரையும் கம்பேர் செய்து கஜோல் கேரக்டர் குறித்து கேட்கின்றனர்.

ஆண்-பெண் மோதல் என்ற கான்செப்ட் வந்தாலே அந்த கேரக்டர்களை நம்மால் மறக்கமுடியாது என்பது உண்மைதான்.

அதே போன்ற லைனை இப்படம் கொண்டிருந்தாலும், நிச்சயம் அந்த கேரக்டர்கள் சாயல் இருக்காது” என்றார்.

Soundarya Rajini talks about Kajol character in VIP2

சுசிலீக்ஸ் கேள்வியால் தனுஷ் டென்ஷன்; என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘விஐபி 2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் இப்படக்குழுவினர் இந்தியா முழுவதும் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு தனுஷ் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பேட்டியெடுத்த பெண், திடீரென சுசிலீக்ஸ் பற்றிய கேள்விகளை கேட்டார்.

இதனால் டென்ஷன் ஆன தனுஷ் ‘முட்டாள்தனமான பேட்டி’ என்று கூறி மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு அந்த தளத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் தனுஷை சமாதானப்படுத்தி மீண்டும் பேட்டிக்கு அழைத்தனர்.

பின்னர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு பேட்டியை தொடர்ந்துள்ளார் தனுஷ்.

Dhanush got tension during question session of Suchi Leaks news

ஜிஎஸ்டியால் பாதிப்பில்லை… ’மீசைய முறுக்கு’ம் விக்ரம் வேதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியை நீக்க கோரி, சில தினங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன.

பின்னர் வேறுவழியின்றி தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்களை திரையிடப்பட்டு வருகின்றன.

வரி விதிப்பு காரணமாக ரசிகர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜீலை 21ஆம் தேதி ’விக்ரம் வேதா’, ’மீசைய முறுக்கு’ ஆகிய படங்கள் வெளியானது.
இந்த இரண்டு படங்களுக்கும் தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

நல்ல கதையாக இருந்தால், ரசிகர்கள் தியேட்டருக்கு நிச்சயம் வருவார்கள் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளன’ என்கிறார்கள் சினிமா துறையினர்.

Vikram Vedha and Meesaya Murukku movie got good opening

ஆகஸ்ட் 3-ல் விவேகம் ட்ரைலர் ரிலீஸ் ஆக இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் விவேகம் பட டீசர் வெளியாகி தென்னிந்தியளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் 3 பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வருகிற ஆகஸ்ட் 3ல் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

விவேகம் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் வெறும் ஒரு வாரம் முன்பே இதனை வெளியிட என்ன காரணம் தெரியுமா?

திரையுலகிற்கு அஜித் நுழைந்து 25 ஆண்டுகள் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறதாம்.

அதனை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் வகையில் இதனை வெளியிடுகிறார்களாம்.

On behalf of Ajith completing his 25 years in Cinema Vivegam trailer releases

ரஜினிக்காக 160 கோடியை முதலீடு செய்யும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித்துக்கே தன் காலா பட வாய்ப்பை வழங்கினார் ரஜினிகாந்த்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது இதன் சூட்டிங் சென்னையில் போடப்பட்டுள்ள தாராவி செட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினியுடன் ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்த பிரபலங்கள் இணைந்துள்ளதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகளவில் உயர்ந்துள்ளதாம்.

அதாவது ரூ. 160 கோடியை இப்படத்திற்காக முதலீடு செய்திருக்கிறாராம் இப்படத் தயாரிப்பாளர் தனுஷ்.

Dhanush invested rs 160 crores in Rajinis Kaala movie

ஆலுமா டோலுமா பாட்டு எனக்கே பிடிக்கல.. அனிருத் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வேதாளம் மற்றும் தற்போது நடித்துள்ள விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் ஒரு பேட்டியில் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டேலுமா பாடல் பற்றி அனிருத் ஓபனாக பேசினார். அதில்…

நான் தீவிர அஜித் ரசிகன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

எனவே அவருக்கான பாடலை தியேட்டரே அதிரும்படி கொடுக்க நினைத்தேன்.

ஆலுமா டோலுமா பாடல் போல 6 பாடல்களை கம்போஸ் செய்தேன்.

ஆனாலும் எனக்கு ஆளுமா டோளுமா பாடல் பிடிக்கவில்லை.

இயக்குனர் சிவாவிடம் கொடுத்துவிட்டு சென்றேன். ஆனால் வீட்டிற்கு போன பிறகு ஆலுமா பாடல் அவர் ஓகே என்று சொல்லிவிட்டார்.

ஆனால் அதைவிட இன்னும் சிறப்பாக கொடுக்க நினைத்து, வேறு பாடல் தருகிறேன். அதை பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னேன்.

ஆனால் அவரோ பாடலை படமாக்கிவிட்டேன். அஜித், தயாரிப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றார்.

தற்போது அந்த பாடல் இவ்வளவு பிரபலமாகிவிட்டது” என்றார் அனிருத்.

Even i dont like Aaluma Doluma song says Music composer Anirudh

More Articles
Follows