தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
விஜயசாந்தியை போல ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் அனல் பறக்க செய்திருக்கிறாராம்.
பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.
Y.G. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். தயாரிப்பு மேற்பார்வையை மதுபாலன் கவனிக்கிறார்.
இப்படம் ரசிகர்களை பயமுறுத்தாமல், புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும் படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.