தனியார் பள்ளிகளின் தவறுகளை தட்டிக் கேட்க வருகிறாள் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படம் வெளியான ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சாயா.

ஆனால் அன்று தியேட்டர்கள் கிடைக்காமல் போனதால் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது.

இப்படம் குறித்தும் வெளியீடும் குறித்தும் பேசுகிறார் இயக்குனர்.

கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு.

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’

பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.

போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ”எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்” என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படி படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள்.

வரட்டும். ஆனால் இது சமூகத்திற்கு சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன் என்கிறார் இயக்குநர் வி எஸ் பழனிவேல்.

படத்தில் புதுமுகம் சந்தோஷ் கண்ணா, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின்.

சோனியா அகர்வால் அதிரடி நாயகியாக நடித்துள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், கொட்டாச்சி, Y.G.மகேந்திரன், பாய்ஸ் ராஜன், பயில்வான், நெல்லை சிவா, மனோகர், பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார்.

அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.

இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் என கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.

நாயகி காயத்ரி கூறும்போது, நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது, பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது. இன்னும் இதுபோன்ற சவாலான வேடங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாக கிடைத்தால் நடிப்பின் மூலம் சமூகத்திற்கும் பயனுள்ள செய்திகளை சொல்ல முடியும். இந்த கேரக்டரை எனக்குத் தந்த இயக்குநருக்கு என் நன்றிகள் என்றார்.

தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது சாயா.

ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இப்படத்தை அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் V.S. சசிகலா பழனிவேல்.

ஜல்லிக்கட்டு காளைக்கு பயந்து தள்ளிப் போகும் சிங்கம்-3 ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன் பிப்ரவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜல்லிக்கட்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனவே அன்றைய தினம் அனைத்து டிவிக்களும் ஜல்லிக்கட்டை நேரலையில் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அன்றைய தினத்தில் வெளியாகவுள்ள சி3 படத்தின் வசூலுக்கு பாதிப்பு வரக்கூடும் என கூறப்படுகிறது.

இதனால் ஜல்லிக்கட்டு காளைக்கு பயந்து சிங்கம் 3 பின்வாங்குமா? அதாவது ரிலீஸ் தள்ளிப் போகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒருவேளை காளையை எதிர்த்து சிங்கம் நின்றாலும் ஆச்சரியமில்லைதான்.

Whether Si3 may postpone due to jallikattu live shows

புடவை டிசைனில் நாக சைதன்யாவிடம் காதலை சொன்ன சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பில் ‘கார்த்திக் – ஜெஸ்ஸி’யாக நடித்தனர் நாக சைதன்யா – சமந்தா.

அன்று முதலே நிஜ காதலர்களாக வலம் வர ஆரம்பித்தனர்.

அதன்படி நேற்று இவர்களின் காதல் நிச்சயத்தார்த்தம் வரை வந்துள்ளது.

இதில் அழகான வேலைப்பாடுகள் கூடிய சேலையை அணிந்திருந்தார் சமந்தா.

அந்த டிசைனில் சே (காதலரை செல்லமாக இப்படித்தான் அழைக்கிறார் சமந்தா) உடன் அவரின் முக்கிய நிகழ்வுகளை அழகாக வடிவமைத்துள்ளார்.

இந்த புடவையை சமந்தாவின் டிசைனர் க்ரேஷா பஜாஜினுடைய ‘கோயிஷ் (Koesch)’ நிறுவனம் வடிமைத்துள்ளதாம்.

”என் அம்மா எனக்கு மகளாயிருக்கிறார் என்றும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

‘மனம்’ படத்தில் நாகார்ஜுனாவின் அம்மாவாக சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Naga Chaitanya and Samantha got engaged

அந்த புடவை டிசைன் இதோ….

லாரன்ஸ் ஏன் இப்படி செய்கிறார்? புலம்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சமூகம் சார்ந்த சேவைகள் மறுபக்கம் கலையுகப் பணிகள் என ஓய்வில்லாமல் உழைத்து வருபவர் ராகவா லாரன்ஸ்.

இதனிடையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், லாரன்ஸ் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன் கலைப்பணிகளில் முழுமூச்சுடன் இறங்கிவிட்டார் லாரன்ஸ்.

லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கியுள்ள மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் பி. வாசு இயக்கியுள்ள சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் (பிப்ரவரி 17) வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன்னுடை இரண்டு படங்களையும் லாரன்ஸ் ஏன் ஒரே நாளில் வெளியிடுகிறார்?

இரண்டு படங்களும் மோதிக் கொண்டால் ஒரு படத்தின் வசூல் மற்ற படத்தை பாதிக்காதா? இதை லாரன்ஸ் கவனிப்பாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Raghava lawrance going to release his 2 movies in same date

தல-தளபதி மீண்டும் இணைய வாய்ப்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்துவிட்டனர்.

இனிமேல் அவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்குமா? என்பது நிச்சயமில்லாத ஒன்றுதான்.

ஆனால் அதன்பின்னர் அவர்கள் எங்கேயாவது இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டுமே உண்டு.

அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர் என்பதால் இதுபோன்ற போட்டோக்கள் இனிமேலும் கிடைப்பது அரிதாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பு மங்காத்தா மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களின் சூட்டிங் ஒரே தளத்தில் நடைபெற்றதால் இருவரும் சந்தித்து போஸ் கொடுத்தனர்.

அதன்பின்னர் அவர்கள் மீண்டும் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இணையவிருக்கிறார்களாம்.

அட்லி இயக்கும் விஜய் படமும், சிவா இயக்கும் அஜித் படமும் ஒரே இடத்தில் நடைபெற உள்ளதால், இருவரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay and Ajith meeting will happen very soon at shooting

ஜல்லிக்கட்டு போலீஸ் கலவரம் குறித்து சூர்யா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 (சி3) பிப்ரவரி 9ல் திரைக்கு வருகிறது.

உலகமெங்கும் 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவில் போலீஸ் நடத்திய கலவரம் குறித்து சூர்யாவிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து சூர்யா பேசும்போது…

‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் விரும்பத்தக்காத செயல்கள் நடந்ததை அறிந்தேன்.

ஏதோ ஒரு சில போலிஸ் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த போலீஸ் ஆபிசர்களையும் எளிதாக குறை சொல்லமுடியாது. எல்லாரும் அப்படியில்லை” என்றார்.

Suriyas reaction to Police violence in Jallikattu Protest

More Articles
Follows