தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில் தந்தி டிவியில் இவரது திரையுலக அனுபவம் குறித்த பிரத்யேக பேட்டி ஒளிப்பரப்பானது.
அப்போது சினிமா என்ற வெளிச்சத்தில் இருந்தபோதும், சிகரெட் மற்றும் மது பழக்கம் இல்லாமல் இருப்பது எப்படி? என்று இவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்…
என் தந்தைக்கு சிகரெட், சரக்கு போன்ற எந்த பழக்கமும் கிடையாது.
எனவே எனக்கும் இல்லை. அதுபோல் என் கல்லூரி நண்பர்களுக்கும் அந்த பழக்கம் இல்லை.
எனக்கு அந்த பழக்கம் தேவைப்படவில்லை. ஏன் அப்படி இருக்கக் கூடாது? என முடிவு எடுத்தேன்.
இத்தனைக்கும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிசார் ரசிகன்.
எனக்கு ரஜினி சார்ன்னா அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.
ஒரு ரசிகனான எனக்கு அவர் கொடுத்தது அதுதான்” என்று பேசினார்.
