‘என் வாழ்க்கைக்கு சப்போர்ட்டே அவர்தான்..’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

யூடியுப் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இது 5 மில்லியனை தொடவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த தன் சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது….

படத்திற்கு அனிருத் மிகப்பெரிய பலம். அவருக்கு திருப்தி வராதவரை பாடல்களை டெலிவரி செய்ய மாட்டார்.

செஞ்சிட்டாளே பாடலை அவர் கம்போஸிங் செய்து 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

எங்கள் படத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.

எனக்கு என்று வரும்போது தன்னுடைய எக்ஸ்ட்ரா உழைப்பை கொடுப்பேன் என்று அனிருத்தே சொன்னார்.

அனிருத் என் ப்ரெண்ட், சகோதரர் போன்றவர். என்னுடைய படத்திற்கு மட்டுமில்லை என் வாழ்க்கைக்கு சர்போர்ட்டே அவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த ‘ரெமோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவரை இல்லாத எதிர்பாரப்பு ரெமோ படத்திற்கு எழுந்துள்ளது.

இப்படம் நேற்று சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உலகம் முழுவதும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆனால் தற்போதே சென்னையிலுள்ள அபிராமி திரையரங்கில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா (Nagoya) என்ற பகுதியில் இப்படம் வெளியாகிறதாம்.

ஞாயிற்றுக்கிழமை (அக் 9ஆம் தேதி) இங்குள்ள New Minato Aeon Mall என்ற திரையரங்கில் இப்படம் திரையிடப்படுகிறதாம்.

அதற்கு 2000 ஜப்பான் யென்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எந்த ஒரு தமிழ்படமும் இங்கு வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது ‘ரெமோ’

கபாலி ‘மைம் கோபி’யின் ‘ஆகாய’ மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாயா, மெட்ராஸ், கதகளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மைம் கோபி.

கபாலியில் இளமை தோற்றத்திலும் முதுமை தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவர் ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

அதில் உள்ள குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு 20 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பறந்துள்ளார்.

அவர்களை ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து, ஊட்டிக்கு சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி மைம்கோபி கூறுகையில்…

“ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப் பயணம் என்பது ஒரு கனவுபோல. அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்சியை ஆரம்பித்து இருக்கிறோம்.

எனவே, அவர்களுக்கு உயர்தரமான ஆடைகள் அணிவித்து காஸ்ட்லியான கார்களில் அழைத்து சென்று சென்று மகிழ்விக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறியுள்ளது.

தற்போது அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியான உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் எனது மைம்டு ஸ்டுடியோ நிர்வாகிகள், நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

 

‘பைரவா’வுடன் மோத அஜித்தின் வேதாள டெக்னிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

வேதாளம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாய் முடியும் முன்பே, படமாக்கப்பட்ட பகுதிகளின் எடிட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் டெக்னிக்கை இதற்கும் பயன்படுத்தி, விரைவாக முடித்தால் வரும் 2017 பொங்கலுக்கே வெளியிட்டு விடலாம் என திட்டமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறார்களாம்.

ஒருவேளை இதன் பணிகள் வேகமாக முடிவடையும் பட்சத்தில் விஜய்யின் ’பைரவா’வுடன் இப்படம் மோதலாம் எனத் தெரிகிறது.

‘மக்கள் செல்வன் பட்டத்தை விட மாட்டேன்’ – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன் நடித்துள்ள படம் படம் றெக்க.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரித்துள்ளார்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள மக்கள் செல்வன் பட்டம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,

“இதை நான் ஒரு பட்டமாக நினைக்கவில்லை. இது என் குரு சீனுராமசாமி கொடுத்தது. நிச்சயம் இதை வைத்துக் கொள்வேன். விடமாட்டேன்” என தெரிவித்தார்.

‘விஜய் ஒரு ஜென்டில்மேன். ஐ லவ் ஹிம்..’ – பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தேவி.

இப்படத்தை தன் நிறுவனம் மூலம் பிரபுதேவாவே தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

3 மொழி படத்தையும் ஒரே நாளில் (அக். 7) வெளியிடுகின்றனர். இது இந்திய சினிமாவில் புதிது என தெரிவித்தனர்.

3 படத்தையும் மொத்தம் 60 நாட்களில் முடித்துவிட்டாராம் இயக்குனர் விஜய்.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சோனு சூட், தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரபுதேவா பேசுகையில், “விஜய்யை எனக்கு ரொம்ப நல்லா தெரியாது.

தற்போது சில காலமாக பழக்கம். ஆர்.ஜே. பாலாஜி செட்டில் பேசிக் கொண்டே இருப்பார் என்றால், விஜய் பேசவே மாட்டார்.

அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரால் எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லாரிடமும் வேலை வாங்க முடிகிறது என்பதே தெரியவில்லை.

விஜய் ஒரு ஜென்டில்மேன். ஐ லவ் யூ விஜய்” என்று பேசினார்.

More Articles
Follows