தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
தற்போது ‘சீமராஜா’வின் வேலைகளை முடித்துவிட்டு ராஜேஷ் இயக்கவுள்ள தனது 13-வது படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டார் சிவா.
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
முக்கிய கேரக்டர் சதீஷ் நடிக்கிறார்.
இவையில்லாமல் 24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தை ஆர்.ரவிகுமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கிறார்.
