அருவி-யை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”.

இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண் பிரபுவையும், படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார்.

இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Sivakarthikeyan praises Aruvi movie team

விக்ரம்-கார்த்தி ரசிகர்களுக்கு இன்று மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக். 17ஆம் தேதி நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கவுள்ளனர்.

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்துள்ள படம் ஸ்கெட்ச்.

இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் டீசரை இன்று வெளியிடுகின்றனர்.

இத்துடன் கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ட்ரைலரும் இன்று வெளியாகிறது.

இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்துள்ளார்.

Sketch Teaser And theeran adhigaram ondru trailer release on 17th Oct 2017

விஜய்-அஜித்-சூர்யா படங்களை சுசீந்திரன் ஏன் இயக்கவில்லை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சுதீப் கிருஷ்ணா விக்ராந்த், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுசீந்திரன்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளதாவது…

“‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை.

விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பதில் பின்னர் ஆசோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார்.

அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை.

எனக்கு எல்லாம் தீபாவளியும் மகிழ்ச்சியான தீபாவளிதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன்.
என்று பதிலளித்தார்.

Suseenthiran revealed why he not directed Vijay Ajith Suriya movies

தடைகளை உடைத்து (எச்சரிக்கையுடன்) மெர்சல் அரசன் வர்றான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை தீபாவளி தினத்தன்று விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மெர்சல் திரைப்பட வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால், இப்படம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.

படத்தின் டைட்டில், கேளிக்கை வரி, விலங்குகள் நல வாரியம் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

பறக்கும் புறா மற்றும் சில விலங்குகள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

விலங்குகள் கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் செய்யப்பட்வை என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கான போதிய ஆதாரமில்லை என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் விளக்கமளித்தது.

நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மெர்சல் படத்தில் விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் சுமார் 20 நிமிடங்களை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இதுபோன்ற பிரச்சனைகளை மீண்டும் ஏற்படக் கூடாது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வழங்கப்பட்ட சான்றிதழ் விலங்குகள் நல வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தணிக்கைக் குழுவும் மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே நாளை இப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

Without any issues Mersal release confirmed on Diwali 2017

புரியாத புதிருக்கு தீபாவளியன்று விடை தரும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பின் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தொடங்கினார் கெளதம் மேனன்.

இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் நடுவே விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் தொடங்கினார் கவுதம்.

இந்நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பாடலை வெளிட்ட கவுதம் இசையமைப்பாளர் யார்? என்பதை சொல்லவில்லை.

அதற்கு பதிலாக மிஸ்டர்.எக்ஸ் என்று கூறிவந்தனர்.

‘மறுவார்த்தை பேசாதே’ மற்றும் ‘நான் பிழைப்பேனோ’ என்ற இருபாடல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மிஸ்டர்.எக்ஸ் என்ற புதிருக்கு தீபாவளியன்று (நாளை அக். 18) விடை தெரியும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் மற்றொரு வெர்ஷன் தீபாவளி அன்றே வெளியாகும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Enai Noki Paayum Thota movie music composer updates

கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதீப் நடித்த முடிஞ்சா இவன புடி படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ். ரவிக்குமார்.

இதனையடுத்து அரவிந்த்சாமி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை ஹர்சினி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல், வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows