சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் படத்தின் கதைக்களம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் உணவு கலப்படம் மற்றும் அதனைச் சார்ந்த அரசியலைப் பற்றிய கதைக்களத்தை கொண்டுள்ளதாக கூற்ப்படுகிறது.

மேலும் இதில் சென்னையைச் சார்ந்த இளைஞனாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

‘144 தடை ஏன்..? என்னையும் கைது செய்யுங்கள்..’ சீறிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது…

“அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

அதனால், என்னையும் கைது செய்யுங்கள்.

கைதானவர்களை விடுவிக்கவில்லை என்றால் அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்

கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த எழுச்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

எனவே இதை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும்.

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன?” என்று பல கேள்விகளை அவர் அடுக்கடுக்காக பேசினார்.

தல57 நிச்சயம் ஹிட்டு… அஜித் ரசிகர்கள் அடித்துச் சொல்ல காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் அவரது 57வது படமாகும்.

இதில் சில படத்தலைப்புகளின் முதல் எழுத்துக்கள் அஜித்துக்கு ராசியாக அமைந்து பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

அதாவது வான்மதி (1996), வாலி (1999), வில்லன் (2002), வரலாறு (2006), வீரம் (2014), வேதாளம் (2015) ஆகிய வீ என்ற ஆங்கில எழுத்துக்கள்தான்.

தற்போது உருவாகிவரும் படத்திற்கும் வியூகம், வதம், விவேகம், வேந்தன் ஆகிய வீ எழுத்தை சார்ந்தே தலைப்பிடப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வி எழுத்தில் தொடங்கும் இந்த டைட்டில் சென்டிமெண்ட் அஜித்துக்கு 7வது முறையாகும்.

எனவே இப்படமும் செம ஹிட்டடிக்கும் என அஜித் ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

சிவா இயக்கும் ‘தல 57’ படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிப்படவில்லை.

இருந்தபோதிலும் இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படத்திற்கு வியூகம், வதம், விவேகம், வேந்தன் ஆகிய 4 தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாம்.

இதில் ஒன்றை நிச்சயம் தேர்வு செய்து விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு சிவா இயக்கிய அஜித் படங்களான வீரம், வேதாளம் ஆகியவையும் வீ (ஆங்கில) எழுத்திலேயே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Thala 57 title sentiment new updates

தன்னை அறிமுகப்படுத்திய சிம்புக்கு சந்தானம் தரும் கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருந்தார் சந்தானம்.

அவரது திறமையை கண்டு தன்னுடைய மன்மதன் படத்தில் அறிமுகப்படுத்தினார் சிம்பு.

இதனை தொடர்ந்து சில படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர்.

தற்போது தான் ஹீரோவாகி விட்டாலும் கூட சிம்பு அழைத்தால் காமெடி வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் சந்தானம்.

இந்நிலையில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வம் சுந்தரம் படத்தின் டீசரை சிம்பு பிறந்த நாளில் (பிப்ரவரி 3ஆம் தேதி) வெளியிட போவதாக அறிவித்துள்ளார் சந்தானம்.

Santhanams Server Sundaram teaser on Simbus Birthday

‘பெப்சிக்கு இப்போ தடை வேண்டாம்…’ குடிகாரர்கள் ‘மல்லுக்கட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பெப்சி, கோக் போன்ற அந்நிய பானங்களை தமிழர்கள் யாரும் வாங்க கூடாது என தெரிவித்தனர்.

இதன்படி ஏப்ரல் மாதம் முதல் நாங்கள் விற்கமாட்டோம் என வணிகர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு மது குடிப்போர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் இப்போதைக்கு தடை வேண்டாம். ஜீன் மாதம் வரை இருக்கட்டும் என்பதுபோல கடிதம் எழுதியுள்ளனர்.

Dont Ban Pepsi and Coke says Drinkers Association

அந்த கடிதத்தை நீங்களே படியுங்களேன்…

 

More Articles
Follows