தீராத சிக்கலில் சிவகார்த்திகேயன்; சவாலை வெல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்கிய பேச்சு திரையுலகில் பெரும் பஞ்சாயத்தை உருவாக்கிவிட்டது.

இதனிடையில் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி கால்ஷீட் தர மறுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் ஞானவேல்ராஜாவிடம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் சிவகார்த்திகேயன் தரப்பு ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் மீண்டும் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சிவா

இதற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஃபெப்சி அமைப்பைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் பல சிக்கல்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

வாய் திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் ஏன்.? சீமான் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டமாக ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.

இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சீமான் கூறியதாவது…

மோடியின் அதிரடி திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்களா? நடுத்தர மக்கள்தான் பேங்க் வாசலில் கால்கடுக்க நிற்கின்றனர்.

தஞ்சாவூரில் 8 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது.

அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன.

வங்கிக்கே இன்றுதான் அந்த நோட்டுக்கள் வந்துள்ளன.

அதற்குள் அவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது?

வரி ஏய்க்காமல் இருக்கும் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார்?

எதற்கும் கருத்துச் சொல்லாத ரஜினி, இதற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்கவில்லை’ எனக் கேள்வி கேட்டாரா ரஜினி?

காவிரியால் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களே, அதைப் பற்றி பேசினாரா? ” என்றார் சீமான்.

அரசு தேர்வில் ‘கவர்ச்சி பாம்’ சன்னி லியோனின் பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசுப் பொதுத்தேர்வில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளை பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமான ஒன்று.

அதுபோல் சினிமா துறை சம்பந்தமான கேள்விகளும் அரசுத் தேர்வில் இடம் பெற்று வருகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் கேர்ள் பிரண்ட் யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான UPSC தேர்வில் சன்னிலியோனின் பெயர் இருந்ததால் இது தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

அந்த கேள்வியில் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் முதலாவதாக சன்னிலியோன் பெயரும், அதற்கான ஒரிஜினல் விடையை நான்காவதாக குறிப்பிட்டு இருந்தார்களாம்.

அதற்கான விடை சன்னி லியோன் இல்லையென்று தெரிந்தும் அதை குறிப்பிட்டது ஏனோ? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெய் நடித்த வடகறி என்ற தமிழ் படத்தில் சன்னி லியோன் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-விக்னேஷ் சிவனை வாழ்த்திய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஷோக்காளி என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுத, ஆதியா ராவ், கனகாரத்னம் மற்றும் ஸ்ரீரஸ்கல் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் சிம்பு, கௌதம் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தியுள்ள நயன்தாரா, ஷோக்காளி பாடலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி-சமந்தா இணையும் படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வருடம் மட்டும் அரை டஜன் படங்களை கொடுத்துவிட்டு இன்னும் அசராமல் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி.

இவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தை ஆரண்ய காண்டம் படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

இதில் சமந்தா, மிஷ்கின், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அநீதிக் கதைகள் எனப் பெயரிட்டுள்ளனர்.

அதர்வா பட இயக்குனருடன் இணையும் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வாவின் கேரியரில் முக்கியமான படம் பரதேசி, ஈட்டி, கணிதன் உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

விரைவில் இவர் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆனால் இந்த செய்தி அவரை பற்றியது இல்லை.

அதர்வா நடித்த ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு பற்றியது.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம்.

அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

More Articles
Follows