ஜி.வி. பிரகாஷுக்காக சிம்பு செய்யப் போகும் காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் இயக்கியுள்ள படம் புரூஸ் லீ.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பன்ந்தா, ஆனந்த்ராஜ், ராமதாஸ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட இருக்கிறாராம் சிம்பு.

இதை ஜி.வி. பிரகாஷே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash 4m4 minutes ago

Dear @iam_str to launch #brucelee trailer on Friday

பைரவா பாடல்கள் வெளியானது… பரவசத்தில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பைரவா பாடல்கள் டிச. 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட முதல் ரசிகர்கள் தவமாய் காத்திருக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட்டை நேற்று வெளியிட்டனர்.

நான்கு பாடல்களும் ஒரு தீம் பாட்டும் இதில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் தற்போது ஐட்யூனில் வெளியிட்டுள்ளனர்.

பாடல்களை கேட்ட விஜய் ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

பிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா காலமானார்.

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் மரணமடைந்தார்.

காவல்துறையில் எஸ்.பி. ஆக இருந்த இவர், ஓய்வு பெற்றப்பின்னர் சினிமா துறையில் சாதிக்க விரும்பி, நிறைய படங்களில் நடித்தார்.

சினிமாவிலும் உயர் அதிகாரி வேடங்களை விரும்பி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் விஜய்சேதுபதி மோத இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா ரிலீஸ் ஆகவுள்ளது.

இத்துடன் யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள், புரியாத புதிர் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட 6 படங்களும் அதே நாளில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் புரியாத புதிர் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவிருப்பது ஏன் என்று தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் கூறியதாவது…

“நல்ல படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பது எங்களின் கடமை.

தமிழக ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு இணை பிரியாத நல்ல உறவு இருக்கிறது.

பொங்கலன்று வெளியாகும் எங்களின் புரியாத புதிர் படம் அந்த உறவைஉறுதிப்படுத்தும்” என்றார்.

Reason for vijay sethupathi movie clash with Vijay

‘பைரவா’ பட்டைய கிளப்ப இத்தனை ஹைலைட்ஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா பட டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எனவே படத்திற்கும் கூடுதல் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி படத்தின் ஹைலைட்ஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

அதில்…

சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை போன்ற ஒரு செட் மிகப்பிரம்மாண்டமாக போடப்பட்டது.

இதற்காக நிறைய பேருந்துகள் கடைகள் செட் போடப்பட்டு அச்சு அசலாக பஸ் ஸ்டாண்டை வடிவமைத்திருந்தார் ஆர்ட் டைரக்டர்.

இதில் 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு நடித்தனர்.

பைரவர் கோயில் செட் ஒன்றும் சென்னை பின்னி மில் அருகே போடப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆடியுள்ள நடனம் நிச்சயம் பேசப்படும். எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தை அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

மேலும் கட்டி முடிக்கப்படாத 12 அடுக்கு மாடி கட்டிடத்தில் அதி பயங்கர சண்டைக் காட்சி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

High lights of vijay starrer Bairavaa

அரவிந்த் சாமிக்கு ஜோடி சோனாக்ஷி? அமலா பால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக நடிக்க லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு புறம் அமலா பாலிடமும் பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறதாம்.

யார் முதலில் ஒப்புக் கொள்கிறார்களோ? உடனே அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows