சிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிபிராஜ் கதை நாயகனாக நடிக்கும் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். U. அன்பரசன் இயக்கத்தில் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழர் வரலாற்றில் ஆன்மீக புகழ் கொண்ட கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுதும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது

11:11 Production சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் ஸ்ருதி திலக் கூறியதாவது…

இப்படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் அன்பரசன் திரைகதையை சொனனது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அழகாக படம்பிடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன் படத்தின் கதையை கேட்டு அதிலுள்ள ஆக்‌ஷன் காட்சிகளின் காரணமாக படத்தின் ஷூட்டிங் தேதிகள் சில நாட்கள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அயராது உழைப்பில் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டது. இந்த அற்புதமான படக்குழுவே அதற்கு காரணம். படத்தின் டப்பிங் பணிகளை இப்போது துவக்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளையும் தீவிரமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவோம் என்றார்.

11:11 Production சார்பில் ஸ்ருதி திலக் “வால்டர்” படத்தினை தயாரிக்கிறார். பரபர திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரகனி, ஷனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நட்சத்திரங்கள் அணி வகுக்கும் டிக்கிலோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபி செய்யும் தினேஷ் சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதுகிறார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றுகிறார்.

மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சங்கத்தமிழன் பிரச்னை என்ன நடந்தது?; லிப்ரா நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்

இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்

இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய திரு. JSKகோபி , திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்

இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெப்ஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன் திரு. விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே

ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை

ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்

நன்றி
இவன்

#LIBRAProduction

தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ஜீனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர்.

இந்த படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார்.

எனவே சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

இதனையடுத்து ரவி தேஜா நடிக்கவுள்ள வேறு ஒரு படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

இதனை கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்க அந்த படத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் வரும்..- ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கல்வியாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நடிகர் சங்கம் தேர்தல் முடிவு குறித்து கேள்விகள் எழுப்பினர்.

நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார்.

சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை.

நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். “ எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராய் விஜயன் வேடத்தில் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு வேடம் என்றாலும் அதில் எந்த விதமான ஈகோவும் இல்லாமல் தன் நடிப்பால் மிரள வைப்பவர் நடிகர் மம்முட்டி.

இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம் மம்முட்டி.

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார்.

சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்க ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராகவுள்ளது.

இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows