‘ரெமோ’ நிலைமை என்ன..? காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த வரும் படம் ரெமோ.

ரூ. 35 கோடியில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

வருகிற ஜீன் 23ஆம் தேதி ரெமா படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ஜீலை 1ஆம் தேதி செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகவுள்ளது.

ரஜினியுடன் இணைய மறுத்து விக்ரமுடன் இணையும் சிம்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட மாதங்களுக்கு பிறகு வந்தாலும் சிம்புவின் இது நம்ம ஆளு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே தனது அடுத்த படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார் சிம்பு.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் நாளை வரவிருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே, இப்படத்தை அடுத்த ஜீன் மாதம் 17ஆம் வெளியிடவிருந்தனர்.

அந்த சமயம் ரஜினி நடித்துள்ள கபாலி வெளிவரவுள்ளதால் இப்படத்தை ஒத்தி வைத்துவிட்டார்களாம்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

விக்ரமின் இருமுகன் படமும் ஆகஸ்ட் 2ஆம் வாரத்தில் வெளியாகவிருப்பதால், இருவரும் இணைந்தே வரக்கூடும் எனத் தெரிகிறது.

‘மாகாபா நஹி… ‘மாணிக்’ பாட்ஷா…’ அசத்தும் ஆனந்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… இந்த பெயரில் மட்டுமில்லை இந்த மனிதனிடமும் காந்தம் இருப்பது உண்மைதான்.

அதனால்தான் ரசிகர்கள் முதல் நட்சத்திரங்களும் இவரது ஸ்டைலையே பின்பற்றி வருகின்றனர்.

தற்போது விஜய் டி.வியின் பிரபல தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்தும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

இவர் சினிமாவில் அறிமுகமான ‘வானவராயன் வல்லவராயன்’ தோல்வி அடைந்தது.

‘நவரச நிலகம்’ படமும் சொல்லும்படியாக அமையவில்லை.

எனவே ரஜினி வழிதான் என் வழி என முடிவெடுத்து தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.

இவர், அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ‘மாணிக்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற ரஜினி ஸ்டைல் ஸ்டில்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.

தரண்குமார் இசையமைக்கவுள்ள இப்படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் (ஜீன் 16) ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்குகிறது.

‘கபாலி ஓவர்; இனிமே ‘ராணி’தான்…’ தன்ஷிகாவின் தைரியமான முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேராண்மை படத்தில் ஜெயம் ரவியுடன் ஐந்து நாயகிகள் நடித்திருந்தாலும் அதிக கவனம் ஈர்த்தவர் தன்ஷிகா.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி வருகிறார் இவர்.

மேலும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் கற்று வைத்திருக்கிறாராம்.

இதனால் இவரை தைரியமான நாயகி என்றே கோலிவுட்டில் அழைக்கின்றனர்.

இவரது நடிப்பில் கபாலி, காத்தாடி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் தன்ஷிகாவின் புதிய படமான ராணி படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு எங்கள் தளத்தில் தொடர்பில் இருங்கள்.

‘முதலில் விக்ரம்; அப்புறம்தான் சூர்யா…’ ஹாரிஸ் ஜெயராஜ் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு டஜன் கணக்கில் படங்களை வைத்துக் கொண்டிருந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இவரது இசையில் வருடத்திற்கு ஓரிரு படங்களே வந்தன.

தற்போது விக்ரமின் இருமுகன், சூர்யாவின் சிங்கம் 3 (S3) ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த இரு படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், எந்த படத்தின் பாடல்கள் முதலில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் ஹாரிஸ்.

ஜுலையில் இருமுகன் பாடலையும் அதன்பின்னர் சிங்கம் 3 பாடலையும் கொடுக்கவிருக்கிறாராம்.

Ok. Here I am. Sharing the updates upon the request from my fans. Music of #IruMugan will be out by next month followed by #S3 .

— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 14, 2016

முதல்வருக்கு கடிதம் எழுதிய ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேரம் படத்தின் இயக்குனர் ஆனது முதல் அல்போன்ஸ் புத்திரனின் சினிமா நேரம் நன்றாகவே அமைந்தது.

இதனையடுத்து இவர் இயக்கிய பிரேமம் படம், கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.

தற்போது பிரேமம் என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது.

இந்நிலையில் இவர் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாராம்.

அதில் “மெட்ரோ ரயில் திட்டத்தை கண்டித்து இவர் குறிப்பிட்டுள்ளாராம்.

மக்களின் அன்றாட தேவைக்கு சுத்தமான குடிநீர் இங்கு கிடைப்பதில்லை. அதுவே தற்போது அத்தியாவசிய தேவையாக உள்ளது.

இதனிடையில் ஆடம்பர மெட்ரோ ரயில் திட்டம் இப்போது அவசியமில்லை.” என்று தெரிவித்திருக்கிறாராம்.

இதனையறிந்த நெட்டீசன்கள் பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ இவரை கண்டித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

More Articles
Follows