தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கேட்டரிங் கல்லூரியில் படித்த அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் வந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அவருடைய படங்களை வாங்கி வெளியிட்டவகையில் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.
விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி டுவீட் செய்துள்ளார்.
சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சந்தானம்.
