காலா காய்ச்சல்…: மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜீன் 7ல் ரஜினிகாந்த நடித்துள்ள காலா திரைப்படம் வெளியாகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 10000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பல பிரச்சினைகளை தாண்டி இப்படம் வெளியாகவுள்ளதால் கிட்டத்தட்ட திருவிழா போல படத்தை பேனர் வைத்து போஸ்டர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் கேரளாவில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் கர்நாடகாவில் 130க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

மற்ற மாநிலங்களில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரிலீஸ் ஆகிறது என்பதால் இப்படமும் அவரின் ஆன்மிக அரசியலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் ரசிகர்கள் பல கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மதுரையில் உள்ள ரசிகர்கள் கடவுளை வேண்டி மண் சோறு சாப்பிட்டு அவர்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

நாளை காலா திரைப்பட விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறோம்…

இன்னும் ரிலீஸாகாத தனுஷ் பட நாயகி ரஜினியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் நடிகை மேகா ஆகாஷ். இது இன்னும் வெளியாகவில்லை.

இதன்பின்னர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.

கவுதம் மேனன் இயக்கி வரும் இப்படம் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜனி நடிக்க இருக்கும் படத்தில் மேகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹாவும், சனந்த் ஷெட்டியும் நடிக்கிறார்கள்.

இதில் ரஜினி மகன்களில் ஒருவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக சமூக போராளியாக மாறும் *யங்” ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை ரிலீஸாகிறது.

இதற்கு முன்பே தயாரான 2.0 படம் கிராபிக்ஸ் காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினி.

அதற்காக இன்று காலை ரஜினிகாந்த் டெக்ராடூன் செல்கிறார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து கர்நாடகாவில் காலா ரிலீஸ் குறித்து பேட்டியளித்தார்.

கபாலி மற்றும் காலா படத்திற்காக வெண் தாடியில் ரஜினிகாந்த் இருந்தார்.

அதே கெட்டப் அப்புடன் வெளியுலகிலும் வலம் வந்தார்.

ஆனால் சில தினங்களாக கருப்பு தாடி மற்றும் கருப்பு தலைமுடியுடன் வலம் வருகிறார்.

இது கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காகத்தான் என தெளிவாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறவுள்ளாராம் ரஜினி.

முக்கியமாக, முந்தைய படங்களின் சாயல் இல்லாத ஒரு கெட்டப்புக்கு ரஜினி மாறவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நம் சமுதாயத்திற்காக போராடும் ஒரு சமூக போராளியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி மாதிரி வரனும்னு ஆசைப்படுவது தப்பா..? தனுஷுக்கு சிம்பு பதிலடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி பேசும் திரைப்படங்கள் உள்ளன.

எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார்.

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 10 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்களாக இருந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டுமே கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று திரையுலகினரால் அழைக்கப்படுகிறார்.

ரஜினி என்ற அந்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு இன்று பலரும் ஆசைப்படுகிறார்கள் என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ‘காலா’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியிருந்தார்.

அந்த பேசி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிம்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் பற்றியே பேசியுள்ளார்.

எனவே இது தனுஷுக்கு பதிலடி என பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வீடியோவின் முக்கிய அம்சங்கள்…

எனக்கும் ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அதற்காக நான் ரஜினியாக மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன்.

என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும்.

எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.

இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை.

தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க.

இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.

நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என்கிறார் சிம்பு.

தன்னையே ரஜினியா நினைக்கிறவங்கதான் இப்படி பேசறாங்க என சிம்பு பேசியிருப்பதால் இது ரஜினியின் மருமகன் தனுஷை பற்றி இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தனுஷோ ரஜினி ஒருவர்தான் அவர் மட்டுமே என பலமுறை சொல்லிவிட்டார்.

காலாவை வெளியிடும் விநியோகஸ்தர் ஆபிஸை அடித்து நொறுக்கிய கும்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியபோது,

‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.

காவிரி மேலாண்மை பிரச்னையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.” என ரஜினி பேசினார்.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்ப்போது இப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி உள்ளனர்.

அங்கிருந்த காலா பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர்.

இந்த படங்கள் வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியமான 2 தியேட்டர்களில் காலா ரிலீஸ் இல்லை; உண்மையான காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் துபாய் மற்றும் சில நாடுகளில் பிரிமீயர் காட்சிகள் தொடங்கவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானவுடன் காலா படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க சொன்னார்கள். அதனால்தான் காலா படத்தை வாங்கவில்லை என தியேட்டர் நிர்வாகம் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தான் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்

More Articles
Follows