தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தின் விளம்பரங்களும் இந்திய சினிமாவே வியக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.
எனவே, கபாலி மூலமாக தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள பல நிறுவனங்கள் முட்டி மோதி வருகின்றன.
இந்நிலையில், ‘கபாலி’யோடு தங்கள் விளம்பரத்தை செய்து வரும் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது…
“கபாலி படத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் போது படத்தை வெளியிட்டு விட வேண்டும்.
மேலும் விளம்பரங்கள் வேண்டாம். மக்கள் படம் பார்க்க காத்திருக்கின்றனர். இதுவே போதும் என நினைக்கிறேன்” என்றார்.
