ரஜினி-சூர்யா-தனுஷிடம் பார்த்த அதே குணம் விஜய்ஆண்டனியிடம் உள்ளது: ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணாதுரை.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை ராதிகா பேசும்போது….

விஜய் ஆண்டனியை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். அவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல. மிகவும் உண்மையாக நடந்துக் கொள்வார்.

ராடான்’ தயாரித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ டி.வி.தொடருக்கு விஜய் ஆண்டனியை இசை அமைக்க வைத்து அறிமுகப்படுத்தியதிலிருந்து எனக்கு அவரை தெரியும்.

அவருடைய வளர்ச்சி அபாரமானது. என்னுடைய கணவர் சரத்குமாருக்காக வந்த கதைதான் ‘அண்ணாதுரை’.

ஆனால் இந்த கதையில் என்னை விட விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் என் கணவர் சரத்குமார். அதற்கு பிறகு இந்த கதையை அவரை கேட்க வைத்து அதை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவு செய்தோம்.

அதற்கு முன்பே அவரின் பிச்சைக்காரன் படம் பார்த்தேன். அருமையான படம். விஜய் ஆண்டனி நல்ல நடிப்பை கொடுத்திருந்தார்.
விஜய்ன்னு பேரு வச்சாலே அவங்க சூப்பர் ஆயிடுறாங்க. அது ஜோசப் விஜய் இருந்தாலும் விஜய் ஆண்டனியாக இருந்தாலும் அப்படித்தான்.
நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் உதவி கேட்க வேண்டியதில்லை. சிலர் அவர்களாகவே முன்வந்து செய்வார்கள்.

இந்த குணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பார்த்துள்ளேன். சூர்யா மற்றும் தனுஷ் கூட இதுபோல் செய்வார்கள்.

அதுபோல் விஜய் ஆண்டனியுடம் அவரே தானாக முன்வந்து உதவி செய்வார். என்று பேசினார் ராதிகா.

Radhika sarathkumar speaks about Vijay Antony characters

விஜய்யை போல் விஜய்ஆண்டனியும் சூப்பர் ஸ்டாராக வருவார்: சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து எடிட்டிங் செய்து இசையமைத்துள்ள படம் ‘அண்ணாதுரை’ இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இயக்குனர்கள் வசந்தபாலன், சுசீந்திரன் முதலானோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சீனிவாசன் இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

ராதிகா சரத்குமாரின் ‘ஆர்.ஸ்டுடியோஸும்’, விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘அண்ணாதுரை’ படத்தின் 10 நிமிட காட்சிகளையும் படத்தின் பாடல்களையும் திரையிட்டனர்.

விழாவில் தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, டி.சிவா, காட்ரகட் பிரசாந்த், தனஞ்சயன், இயக்குனர்கள் வசந்தபாலன், கௌரவ் நாராயணன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!

இவ்விழாவில் சரத்குமார் பேசும்போது… ‘‘இங்கு பேசிய நிறைய பேர் ஏதாவது காண்ட்ராவர்சி பண்ணுங்கள். அப்படி பேசுங்கள். அப்போது தான் படம் நன்றாக ஓடும் என்றார்கள்.

ஆனால் இப்படத்திற்கு காண்ட்ராவர்சி தேவையில்லை. இந்த படத்தின் கதைக்காகவே படம் நன்றாக ஓடும்.

இந்த படத்தை இயக்கியிருக்கிற சீனிவாசன் சிறந்த டெக்னீஷியன். வைரம் போன்றவர். வைரத்தை பார்க்கும்போது இது வைரம் என டக்கென்று நமக்கு தெரியும்.

சூரியன் படத்தில் ஒர்க் செய்தபோது ஷங்கரிடம் ஒரு ஃபயரை பார்த்தேன்.

அதன்பின்னர்தான் அவர் ஜென்டில்மேன் படத்தை டைரக்ட் செய்தார்.

நான் கமலா தியேட்டரில் நடந்த ஒரு படத்தின் நூறாவது நாள் விஷாவில் நடிகர் விஜய் பற்றி பேசும்போது அவர் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று சொன்னேன்!

அதைப் போல இந்த விழாவில் சொல்கிறேன், இந்த விஜய் ஆண்டனியும் ஒரு சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆவார் என சொல்கிறேன்.

இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

Vijay Antony will become Superstar Like Vijay says Sarathkumar

துல்கர் சல்மான் உடன் இணையும் துருவ நட்சத்திரம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் சில நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

`வாயை மூடி பேசவும், `ஓ கே கண்மணி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான `சோலா’ படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஐ.டி. ஊழியராக நடிக்க, இவரது ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.

இவர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

டி.இமான் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `திருடா திருடா’ படத்தில் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விக்ரம் மகன் துருவ் உடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி இணைந்தது எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாலா இயக்கவுள்ள இப்படம் அர்ஜீன் ரெட்டி என்ற தெலுங்கி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே ரீமேக் ரூட்டில் தனது மகள் ஜான்வியை அறிமுகம் செய்யவுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

மராட்டிய மொழியில் வெற்றி பெற்ற ‘சாய் ராட்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஜான்வி அறிமுகமாகவுள்ளார்.

தனது மகள் ஜான்வி அறிமுகம் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது:-

நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்.

மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தியுள்ளேன்.

எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள்.” இவ்வாறு ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

திருப்பதிக்கு போனா திருப்பம்; பிரபுதேவா-நிக்கி கல்ராணி திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002-ஆம் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படமான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து வருகிறார்.

இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா சர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபல நடிகரும், நகைக்சுவை எழுத்தாளருமான கிரேசி மோகன் இப்படத்திற்கான திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது…

பிரபு தேவா, நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே `சார்லி சாப்ளின்-2′.

திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று தயாரிப்பாளா் டி.சிவா கூறினார்.

இப்பட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஆதிக்ரவி இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்; போலீஸாக நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமான படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

இதில் இசையமைத்து நாயகனாக நடித்தார் ஜி.வி.பிரகாஷ்.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் இப்படத்தை பிட்டு படம் என்றே ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனையடுத்து சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரபல நட்சத்திரங்கள் இருந்தும் படம் படு தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மீண்டும தன் முதல் பட நாயகனான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைகிறார் ஆதிக் ரவி.

இதில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க, இப்படம் 3டியில் உருவாகவுள்ளதாம்.

ஃபேண்டஸி லவ் ஸ்டோரியாக இந்தப் படத்தை எடுக்கிறார் ஆதிக்.

விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார்.

More Articles
Follows