ஐடி ரெய்டு வரும்; உஷார்… விஜய் ஆண்டனியை எச்சரித்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன்.

இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன்.

பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார்.

படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன். ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது என்றார் பாடலாசிரியர் அருண் பாரதி.

ஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல. இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர்.

விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றார் இயக்குனர் வசந்தபாலன்.

அண்ணாதுரை தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சர்த்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும்.

உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர் சிவா.

மோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது.

அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார் அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும் என்றார் காட்ரகட்டா பிரசாத்.

எந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும் என்றார் தனஞ்செயன்.

கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர் அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும் வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இதனால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

After Annadurai movie release IT raid may be there says Udhayanithi Stalin

நவ-24ல் இந்திரஜித் வருகிறார்; கௌதம் கார்த்திக்கின் வெற்றி தொடருமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் ஆரம்ப கால படங்கள் கௌதம் கார்த்திக்கு சொல்லும்படியாக அமையவில்லை.

ஆனால் அண்மைக்காலமாக வெளியான அவரது படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து வருகிறது.

ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மஹாதேவகி ஆகிய படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வருகிற நவம்பர் 24ஆம் தேதி அவரது அடுத்த படமாக இந்திரஜித் திரைக்கு வருகிறது.

ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

கலாபிரபு இயக்கியுள்ள இப்படத்தில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடிக்க, சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கபாலி, தெறி படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

தன் வெற்றியை தக்க வைப்பாரா கௌதம் கார்த்திக் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

Gautam Karthik in Indrajith movie release updates

நாளைமுதல் நெஞ்சில் துணிவிருந்தால் படம் ஓடாது; சுசீந்திரன் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

இமான் இசையமைத்திருந்த இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் நாயகி உள்ளிட்ட சில காட்சிகளை எடிட் செய்து ரீவெர்சனை ரிலீஸ் செய்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு அதில் பேசியுள்ளார் சுசீந்திரன்.

அதில்… நெஞ்சில் துணிவிருந்தால்’ கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் டிசம்பர் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது” என பேசியிருக்கிறார்.

Suseenthiran decided to stop screening of Nenjil Thunivirundhal

ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு கமல் ரூ. 20 லட்சம் நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இதற்கு நடிகர்கள் ஜிவிபிரகாஷ், விஷால் ஆகியோர் நன்கொடைகளை அளித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

தற்போது நடிகர் கமல்ஹாசனும் தற்போது ரூ. 20 லட்சம் நன்கொடையை அளித்துள்ளார்.

அதுகுறித்த விவரம் வருமாறு…

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார்.

இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்பது அவர் கருத்து’ எனக் கூறினார். இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.

Kamalhassan donates Rs 20 lakhs for Tamil Chair at Harvard University

பிரேம்ஜி-யை என் படத்தில் நடிக்க வச்சா திட்டுறாங்க: வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ், பார்த்திபன், ஆர்ஜெய், டேனி, சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

இப்படத்தை சந்திரன் மற்றும் அவரது அண்ணன் ரகுநாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அஸ்வத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை சற்றுமுன் சென்னையில் வெளியிட்டனர்.

இது தொடர்பான விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா, தனஞ்செயன், வெங்கட் பிரபு, ஜெயப்பிரகாஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது வெங்கட் பிரபு பேசியதாவது…

எனக்கு முன்னால் பேசியவர்கள் எனக்கு ஒரு தம்பி (பிரேம்ஜி) கிடைத்த மாதிரி ரகுநாந்துக்கு சந்திரன் கிடைத்துள்ளதாக பலரும் பேசினர்.

என்னுடைய எல்லாம் படத்திலும் பிரேம்ஜி இருப்பார். ஆனால் ட்விட்டரில் நிறைய பேர் என்னுடைய படத்தில் பிரேம்ஜி வேண்டாம் சொல்றாங்க.

எனவே இனி என் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பார்.

என்னுடைய இயக்கத்தில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தில் பிரேம்ஜிதான் இசையமைக்கிறார்.” என பேசினார்.

Here after Premji will not be there in my movies as a actor says Venkat Prabu

ரஜினி-சூர்யா-தனுஷிடம் பார்த்த அதே குணம் விஜய்ஆண்டனியிடம் உள்ளது: ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணாதுரை.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை ராதிகா பேசும்போது….

விஜய் ஆண்டனியை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். அவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல. மிகவும் உண்மையாக நடந்துக் கொள்வார்.

ராடான்’ தயாரித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ டி.வி.தொடருக்கு விஜய் ஆண்டனியை இசை அமைக்க வைத்து அறிமுகப்படுத்தியதிலிருந்து எனக்கு அவரை தெரியும்.

அவருடைய வளர்ச்சி அபாரமானது. என்னுடைய கணவர் சரத்குமாருக்காக வந்த கதைதான் ‘அண்ணாதுரை’.

ஆனால் இந்த கதையில் என்னை விட விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் என் கணவர் சரத்குமார். அதற்கு பிறகு இந்த கதையை அவரை கேட்க வைத்து அதை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவு செய்தோம்.

அதற்கு முன்பே அவரின் பிச்சைக்காரன் படம் பார்த்தேன். அருமையான படம். விஜய் ஆண்டனி நல்ல நடிப்பை கொடுத்திருந்தார்.
விஜய்ன்னு பேரு வச்சாலே அவங்க சூப்பர் ஆயிடுறாங்க. அது ஜோசப் விஜய் இருந்தாலும் விஜய் ஆண்டனியாக இருந்தாலும் அப்படித்தான்.
நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் உதவி கேட்க வேண்டியதில்லை. சிலர் அவர்களாகவே முன்வந்து செய்வார்கள்.

இந்த குணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பார்த்துள்ளேன். சூர்யா மற்றும் தனுஷ் கூட இதுபோல் செய்வார்கள்.

அதுபோல் விஜய் ஆண்டனியுடம் அவரே தானாக முன்வந்து உதவி செய்வார். என்று பேசினார் ராதிகா.

Radhika sarathkumar speaks about Vijay Antony characters

More Articles
Follows