பாத்தா கூப்பிடற மாதிரி.; நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல், மோகன்லால் நடித்த உன்னைப் போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டுலெட்டி.

இவர் இப்போது நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, டைரக்டர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

மாறாக நடிகர் ராதாரவி, சாம்ஸ், இயக்குனர்கள் கரு. பழனியப்பன், பிரவின்காந்தி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த நிகழ்விலும் வழக்கம்போல் ராதாரவி சர்ச்சையான கருத்துக்களை பேசினார். அவர் கூறியதாவது…

‘இங்கு ஒருவர் பேசும்போது சினிமாவில் ரஜினி, கமல் காலம் போல இது நயன்தாரா காலம் என்றார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடனும் ஒப்பிட்டு பேசினார்.

அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் சினிமாவில் இருப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத (கிசுகிசு) செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டியும் தனியாக நிற்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் நடிகை கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம்.

90எம்எல் என்று ஒரு படம் வந்தது. அதில் எதை எதையோ சொன்னார்கள். பிக்பாஸ் நடிகை அதில் நடித்தார்.
இப்போ எல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்கள் படத்தை சரியாக பார்ப்பதில்லை. (காதலர்கள்) அவர்கள் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் விரைவில் ஒரு படம் எடுக்க போகிறேன். ஒன்றரை லிட்டர் என்ற பெயரில் எடுக்க போகிறேன்.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radha Ravi Abused Nayanthara at her Kolaiyuthir Kaalam Trailer Launch

உறியடி 2 உங்களை என்டர்டைன்மென்ட் பண்ணாது.ஆனால் டிஸ்டர்ப் செய்யும். யோசிக்கவைக்கும் – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார் அவர்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படபிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தார் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர். இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ உறியடி படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக உறியடி- 2 படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பது இதன் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களை இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில் உருவான படம்தான் இந்த உறியடி 2” என்றார்.

இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்.“ இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜய்குமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான் 96 படத்தின் இசையமைப்பு பணியை தொடங்கவில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இயக்குனரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான-நேர்மையான- உண்மையான மனிதரை காண்பது அரிது. அவர் ஒரு அரிய ஜீன். இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும். அதுபோன்ற விரியுமுள்ள படைப்பு இது.” என்றார்.

படத்தின் இயக்குனர் விஜய்குமார் பேசுகையில்.“ இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் (POEM) இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.

நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள், நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்த படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையும் காப்பாற்றும்.தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு நடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தை போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவது வரை சரியானமிக சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்.” என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில்,“ நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாக பேசியது எம்மை ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.

இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன் சார் ’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விடுகிறோமோ..! என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது- இந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப் படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்க பிடிக்கும். நல்ல விசயங்களுக்கு துணையாக உடன் நிற்க பிடிக்கும் .எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளை செய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்திற்கு செய்திருக்கிறேன். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.

2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான், இயக்குனர் விஜய்குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்து கொள்வார். ஒரு அறிமுகத்திற்கு பிறகு இயக்குனர் விஜய்குமாரின் உறியடியை பார்த்தேன். அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குனர் விஜய்குமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா…? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார். அவர் சினிமாவிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய்குமாரிடம் பார்த்தேன். எங்க அப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது.. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜய்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம். உறியடி 2 ஏன் வரவில்லை? என்ற வினா எழுந்தது. உறியடி வந்து நான்கைந்து வருடங்களுக்கு பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இறுதியான படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டார்.

முன்னதாக படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எழுமின் பிரபலம் கணேஷ் சந்திரசேகரனின் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் இசைப் அமைப்பாளர்களில் ஒருவரான ‘கணேஷ் சந்திரசேகரன்’ எழுமின் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை தன் இசையில் தனுஷ், அனிருத் மற்றும் யோகி B போன்ற பிரபல கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களை தன் பாட்டுக்கும் பாட வைத்து நமக்கு இசை விருந்து அளித்தவர், இப்போது அடுத்த படைப்பான single track மூலம் நம்மை மறுபடியும் உற்சாக படுத்த வருகிறார். இம்முறை நம்ம சென்னையின் பெருமையான Chennai Super Kings காக single track #ChennaiSuperKingsda என தொடங்கும் பாடல்.

இதை அவரே எழுதி, சூப்பர்சிங்கர் பிரபலமான சாய் விக்னேஷ், தனுஜ் மேனன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத் பாடி உள்ளனர் மேலும் பத்து குழந்தைகளும் கோரஸ் பாடி உள்ளார்கள். இதை வசந்த் தன்னுடைய ஆடியோ கம்பெனியான Vasy Music மூலம் தயாரித்துள்ளார். இதை பற்றி இசையமைப்பாளரிடம் கேட்கும் போது, கிரிக்கெட் தன் வாழ்வில் பெரும் அங்கமாக இருந்ததனால் தான், என்னால் இந்த பாடலை பண்ண முடிந்தது, மற்றும் என்னால் பாடலையும், கிரிக்கெட்டையும் ஒன்று சேர்க்க முடிந்தது.

இந்த பாடல் கண்டிப்பாக எல்லோரு மனதிலும் இடம் பிடிக்கும். இதை கோலிவுட் பிரபலங்கள் பத்மஸ்ரீ விவேக் சார், பியூட்டி குயின் ஐஸ்வர்யா ராஜேஷ், கனா வெற்றி பட இயக்குனர் மற்றும் கவிஞருமான அருண்ராஜா காமராஜ் இதனைப் பாராட்டி
இந்த ஆல்பத்தை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்கள்…

மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைசந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்சத்தீஷ்வரன்.

இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக“ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில்நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் சென்னை ஆர்.கே நகரில் (மார்ச்21ம் நாள்) இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

இந்த ரோட்டரி இன்டர்நேஷனல் முதலில் போலியோ நோய்க்கான விழிப்புணர்வு நடத்தி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றது

தற்போது டிபி எனப்படும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே 2004 ஆண்டு முதல் உருவாக்கி சுமார் 60ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களை கண்டெடுத்து சிகிச்சை அளித்து வருகிறது .

இன்று சென்னை ஆர் கே நகர் பகுதியில் முகாம் நடத்தி சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது

காசநோய் என்பது ஒன்று தீண்டாமை நோய் அல்ல தொற்று நோய்தான் இதை முழுவதுமாக குணமாக்க முடியும்

எனவே அதன் அறிகுறிகளான தொடர் காய்ச்சல், மூன்று வாரத்திற்கு அதிகமான இரும்பல்,சளியுடன் கலந்து இரத்தம் வந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்…

இந்த காசநோய் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் என இசாமுதீன் பாப்பா தெரிவித்தார்.

இதை ரோட்டரி இண்டர்நேஷனல் சார்பில்
ரோட்டரி இந்தியா டிபி கன்ரோல்
புரோகிராம் என்ற அமைப்பும்
ரோட்டரி டிஸ்ரிக் 3232 ரோட்டரி கிளப் மெட்ராஸ் சௌத் வெஸ்ட் மற்றும் சென்ரல் சேர்ந்து நடத்தியது

டாக்டர் இசாமுதீன் பாப்பா தலைமையில் நடிகர் ஆரி முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் இணையும் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் தன் முயற்சியாலும், சிறந்த நடிப்பாலும் படிப்படியாக முன்னேறி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஆதி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இரட்டை இயக்குனர்களான கார்த்திக் – விக்னேஷ் சகோதரர்கள் படத்தை இயக்குகிறார்கள்.

எம்.ஜி.ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, “ஆதி சாய்குமார் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வருகிறது. அவரது திரை ஆளமை மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் மூலம் அவருக்கு தமிழ் ரசிகர்களிடையேயும் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று உணர்ந்தோம். குறிப்பிடத்தக்க வகையில், வேதிகா அவரது அழகான தோற்றத்துக்காக மட்டும் பேசப்படவில்லை, அவரது நடிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளால் தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். கார்த்திக் மற்றும் விக்னேஷ் சொன்ன கதையை தனிப்பட்ட முறையில் நான் ஒரு பார்வையாளராக மிகவும் ரசித்தேன். சினிமா மீதான அவர்களின் பேரார்வம் மற்றும் புதுமையான கூறுகளை முடிந்தவரை படத்தில் சேர்க்கும் அவர்களின் முயற்சி மிக சிறப்பானது” என்றார்.

இயக்குனர் கார்த்திக் கூறும்போது, “மகிழ்ச்சியாக உணர்வதை விட நான் மற்றும் விக்னேஷ் இப்போது கடுமையாக உழைக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். தென்னிந்திய சினிமாவில் மொழி மற்றும் எல்லை போன்ற தடைகள் குறைந்து கொண்டு வரும் வேளையில், தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். இயற்கையாகவே, இந்த படத்தின் கதை மற்றும் கூறுகள் உலகளாவிய ஒரு விஷயம், இது அனைத்து பகுதிகளிலும் உள்ள பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2.0 படத்தில் நிரவ் ஷாவிடம் உதவியாளராக பணிபுரிந்த கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தலக்கொண்டா மற்றும் சித்தூருவின் அழகிய இடங்களில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

More Articles
Follows