வெற்றி பெற்ற கபடி வீரர்களை கௌரவித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தப்பாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கான இடத்தை தேடிக் கொண்டிருப்பவர் துரை சுதாகர்.

இவர் பப்ளிக் ஸ்டார் என அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகார் கெளரவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது.

50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது.

இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன்மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணியினர் வென்றனர்.

முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையை தனது கையால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கி, அவர்களை கெளதவித்த நடிகர் துரை சுதாகர், டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் மற்றும் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பித்தார்.

Public Star Durai Sudhakar honoured Kabadi Players

பிரகாஷ்ராஜின் குரலை பெற்று ராதா மோகனை டப்பிங் பேச வைத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு – இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘60 வயது மாநிறம்’.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது…

ஒரு அழகான விஷயம், ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது.

இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன்.

ஈர்க்கக்கூடிய ஒரு விஷயத்தை காமெடியுடனும், தாக்கத்தை ஏற்டுத்தும்படியும் காட்டுவதற்கு ராதாமோகன் – விஜியால் மட்டுமே முடியும்.

ராதாமோகனை ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு நண்பராக தான் அதிகமாக பார்க்கிறேன். அவர் உலகத்தை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது.

முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன்வந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.

நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை. இளையராஜா சார் என்னை தொடர்புகொண்டு எனது குரல் வேண்டும் என்று மட்டும் தான் கேட்டார்.

மற்றபடி டைரக்டர் ராதாமோகன் தான் எனக்காக டப்பிங் பேசினார்.

நான் வெளியூரில் இருந்த போது ஒரு வார்த்தையை சொல்லி என் ஸ்டைலில் எப்படி சொல்வேன்? என பேச சொன்னார். அதன்பின்னர் அந்த வார்த்தை ராதாமோகன் என் ஸ்டைலில் பேசினார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன்.

பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது.

விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது” என்றார்.

Director Radhamohan done dubbing for Prakash Raaj in 60 Vayathu Maaniram movie

சாதிக்க துடிப்பவர்களுக்கு ரோல் மாடல் ஆன கே.எஸ். ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்து பார்க்க முடியாத விஷயத்தை செய்து காட்டியிருக்கிறது.

புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியை கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்த பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான்.

“ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்கு பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை இரு பக்கங்களில் 2 வெவ்வேறு வண்ணங்கள் கொண்டிருக்கும்.

இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப அணியும் வாய்ப்பை தருகிறது.

இரண்டு வண்ணங்களில் இரு பக்கங்களிலும் அதே வடிவமைப்புகளை பெறுவதற்கான விருப்ப தேர்வும் உள்ளது. இந்த புதிய யோசனை தொடர்ந்து நகரும், மிகச்சிறிய மற்றும் அதே நேரத்தில் ஸ்டைலான தோற்றத்தை விரும்பும்
மெட்ரோ செக்ஸ்சுவல் ஆண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது Jansons டாப் மேனேஜ்மெண்ட்.

இது அவர்களின் இடம் மற்றும் பணத்தை அதிக அளவில் சேமிக்க உதவும்.

இயக்குனர் , நடிகர் என இரட்டை பரிமாணங்களை எடுத்த கே எஸ் ரவிக்குமார் சாரை விட யார் எங்கள் முதல் தேர்வாக அமைய முடியும். எங்கள் விளம்பரம் ஏற்கனவே ஒளிபரப்பாகி மார்க்கெட்டில் நல்ல நேர்மறை அலைகளை உருவாக்கி வருகிறது.

இந்த தயாரிப்பு நிச்சயமாக வெற்றி பெறும் என நினைக்கிறோம்.

Jansons launches Reverasable Dhothi their new ad features the legendary Director KS Ravikumar

*போர்ப்ஸ்* இதழுக்கு பேட்டியளித்து பெருமையை பெற்ற 3வது நடிகை ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட்டில் வரை கலக்கும் ஸ்ருதிஹாசன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஸ்ப்ரிச்சுவல் சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் அது கோவில், தேவாலாயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.

அதே போல் சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்.

தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

நியுயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன்.’ என்றார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதனிடையே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என இரண்டு நடிகைகளை அடுத்து ‘போர்ப்ஸ் ’எனப்படும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இதழுக்கு பேட்டியளித்த மூன்றாவது இந்திய நடிகை என்ற பெருமையை ஸ்ருதிஹாசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shrutihaasan interview at New York

கைவினை கலைஞர்களை சந்திக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மௌஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடித்துள்ளனர்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.

மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

‘இந்தப்படம் இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது.

எனவே இந்த விளம்பர பயணம் நம் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருக்கும் ” என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘நம் நாட்டிலுள்ள இளம் கைவினை கலைஞர்களை சந்திக்க வேண்டி ஆசைப்படுகிறேன். அவர்களின் திறமைகளும் , வித்யாசமான தொழில் நுட்பத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் “என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

நாங்கள் இந்தியாவிலுள்ள கைத்தறி கலைஞர்களை சந்திக்க இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் பல கைவினை கலைஞர்கள் திறமைகள் வெளிவரவேண்டும் என ஆசைப்படுகிறோம் ” என நடிகை அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகிறது.

Varun Anushka Sharma to celebrate homegrown entrepreneurs for Sui Dhaaga Made In India

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது.

அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு.

“நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும்.

ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.

மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது.

தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.

தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaa

More Articles
Follows