நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.

அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

பாராட்டு வேண்டாம்; அது என் கடமை..; தர்பார் படத்தில் எஸ்பிபி பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
லைகா தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் பெரும்பாலான படங்களில் ஓபனிங் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் தான் பாடுவார். ஆனால் அது சில படங்களில் இல்லாமல் போனது.

இதனையடுத்து பேட்ட படத்தில் மரண மாஸ் பாடலை பாடினார் எஸ்பிபி.

இந்நிலையில் தர்பார் படத்திலும் எஸ்.பி.பி ஓபனிங் சாங் பாடியுள்ளார்.

அது குறித்து அவர் கூறியதாவது…

ஒரு காட்சியில் என்னை ஏன் பாராட்டுறீங்க. போலீஸா இருக்குறதுனால உங்களுக்கு கடைமையை செய்யறேன். இந்த யூனிபார்ம கழட்டிட்டா நான் உங்களில் ஒருத்தன். அறிமுக பாடல் நன்றாக வந்திருக்கிறது. அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என கூறியுள்ளார்.

தனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

தனுஷ் நடித்த கொடி படத்தில் நாயகியாக அறிமுகமானார் இவர்.

அதன்பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

தற்போது அதர்வாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பூமராங் புகழ் கண்ணன் இயக்கவுள்ளார்.

இந்த ஜுலை மாதம் சூட்டிங்கை ஆரம்பித்து வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

குடிக்க தண்ணி இல்ல இதுல நீச்சல் குளமா.? சௌந்தர்யா ரஜினியின் சர்ச்சை ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌவுந்தர்யாவின் 2வது திருமணம் அண்மையில் நடைபெற்றது.

இவர் தற்போது பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் ட்விட்டரில் தன் குடும்ப புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது மகன் வேத் கிருஷ்ணாவுடன் நீச்சல் குளத்தில் நீந்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
குழந்தைகள் நீச்சல் அடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கூறியிருந்தார்.

தமிழக மக்கள் குடிக்க, குளிக்க தண்ணீர் இன்றி சிரமப்படும் நேரத்தில் இப்படி பதிவிடுவது சரியா? என பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த போட்டோவை நீக்கிவிட்டார்.

இதன்பின்னர் மற்றொரு ட்வீட்டில்…

தண்ணீர் பிரச்சினைக்கு நடுவே அந்த நீச்சல் குளம் போட்டோ பதிவிடுவது சரியில்லை என்பதால் நீக்கி விட்டேன்.

குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை சொல்வதே அந்த பதிவின் நோக்கமாக இருந்தது. தண்ணீரை சேமியுங்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

Soundarya Rajini Deletes Pool Pic With Son after controversy

கமலை கழட்டி விட்டுட்டு விஜய்யுடன் இணையும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த 2.0 படத்தை அடுத்து கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்புகளும் வந்தன.

ஆனால் கமலின் அரசியல் அவதாரம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல சம்பவங்களால் இந்தியன்2 படம் நிறுத்தப்பட்டது.

மேலும் கமலின் மேக்அப் சரியில்லை என்ற பிரச்சினையும் சொல்லப்பட்டது.

இதனால் வெறுத்துப்போன டைரக்டர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை அப்படியே டீலில் விட்டுவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

இந்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Shankar will direct Vijay for Thalapathy 65

கிரிக்கெட் வீரர் பிராவோவுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாங்காடு வேலம்மாள் பள்ளி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியினை செவ்வனே செய்துவருகிறது.

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களைப் பாராட்டும் வகையிலும் 01.07.2019 அன்று உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு. ட்வைன் ஜான் பிராவோ அவர்களைப் பள்ளிக்கு அழைத்துப் பாராட்டு விழா நிகழ்த்தியது.

மிகப் பிரம்மாண்டமான வரவேற்புகளுக்கிடையி ல் பள்ளிக்கு வருகை தந்த திரு.பிராவோ அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது.

பின்னர் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வினைத் துவக்கி வைத்த திரு.பிராவோ மாணவர்களுக்குப் பதவிகள் வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய திரு.பிராவோ அவர்கள் மனித வாழ்வில் விளையாட்டு பெறும் முக்கியத்துவத்தையும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு அமையவிருக்கும் சிறப்பான எதிர்காலம் பற்றியும் சுவைபடப் பேசினார்.

மாணவர்களே எழுச்சியூட்டும் வகையில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வு விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சி வேலம்மாள் வித்யாலயா பூவிருந்தவல்லி பள்ளியில் நடைபெற்றது.

 

More Articles
Follows